செங்குந்தரும் முசுகுந்த சோழனும்: முசுகுந்த சோழன் முருகனிடத்திலே கந்த சஷ்டி விரதம் இருந்து நவவீரர்களை வரப் பிரசாதமாக பெற்றவன் அவ்வாறு பெற்றதினாலே வையகம் முழுவதும் கோலோச்சி தன் வசப்படுத்தினான் பூவுலகில் திருவாரூரை மையமாக கொண்டு சிறந்த அரசாட்சி செய்தான் என்பது புராண தகவல் ,இந்த நவ வீர வம்சமான செங்குந்தருக்கும் இதனாலையே திருவாரூர் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாயிற்று திருவாரூரில் நடக்கும் பக்த காட்சி திருநாள் முசுக்குந்த அர்ச்சனையும் பங்குனி உத்திரம் முசகுந்த அர்ச்சனையும் மேலும் புரட்டாசி பவுர்ணமி நாள் நடக்கும் முசுக்குந்த அர்ச்சனையும்சபாபதி முதலியார் அதாவது காலஞ்சென்ற சபாபதி முதலியார் பரம்பரையால் நம்மால் செய்யப்படும் ஒரு கட்டளை ஏனெனில் முசுகுந்தநால் இவ்வுலகிற்கு கொண்டுவரப்பட்ட நவவீரர்களே செங்குந்தர்களின் முன்னோர் அந்த நவவிரர்களின் தளபதி வீரபாகு முசுகுந்த சோழனின் வழியில் வந்த மங்கை ஆன புஷ்பகாந்தியை மணமுடித்தான் முசுகுந்தனோ வீரபாகுவின் மகளான சித்திரவள்ளியை மணமுடித்தான் அவர்களுக்கு முறையே அநங்கராஜன் அங்கினவர்மன்என்று வாரிசுகள் தோன்றின இந்த அநங்கராஜன் கருவூர் ஆட்சி பொறுப்பும் அங்கினவர்மன் காஞ்சிபுரம் மகாநாட்டு பொறுப்பும் பெற்றனர் என்பது புராணம் இப்படி நவகிர மரபும் மனு மாந்தா சோழகுலமும் ஒன்றோடு ஒன்று கலந்து ஓர் குலமாய்னர் இந்த கூடலே செங்குந்தரன் முதல் தலைமுறை என்று ஆகிறது இந்த சிறப்பும் ஈட்டி எழுவது உள்ளிட்ட ஏனைய திவ்ய செங்குந்த பிரபந்தங்களில் வருகிறது அவ்வாறாகவே சப்தவிடங்க ஸ்தலங்களிலும் முருகப்பெருமானின் படை வீடுகளிலும் திருவாலங்காடு சிதம்பரம் திருக்கழுகுன்றம் உள்ளிட்ட ஸ்தலங்களிலும் மற்றும் ஏனைய சைவ முருக தளங்களிலும் செங்குந்தர்கள் கைங்கரியம் செய்ய பேரு பெற்றவர்களாக இருந்தாலும் முசுகுந்த சக்கரவர்த்தி இடங்கரை ஸ்தாபனம் செய்த திருவாரூரில் செங்குந்தருக்கு முசுகுந்த அர்ச்சனை என்று முசுகுந்தன் தியாகராஜரை எவ்வாறு செங்குந்தர் உதவியோடு பூலோகத்தில் ஸ்தாபனம் செய்தானோ அந்த முசுகுந்தன் அந்த தியாகேசனை எந்த ஒரு அர்ச்சனையால் அவன் புகழ்ந்து வணங்கினானோ அந்த அர்ச்சனையின் கட்டளை அவன் வழியே வந்த அவனுக்குத் துணையாய் நின்றோர் வழியிலும் வந்த அதாவது முசுகுந்தனும் நவவீரர்களின் சந்ததியுமான செங்குந்தர்களிடத்திலே அந்த அர்ச்சனை கட்டளை இன்றளவும் இருப்பது ஒரு வரலாற்று சிறப்பு
J