அருள்மிகு ஸ்ரீ நாச்சியம்மன் திருக்கோவில், தேவணம்பாளையம், குன்னத்தூர் வழி, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்.
நமது கோவில் ஸ்தல வரலாறு
நமது முன்னோர்கள் செங்குந்த முதலியார்கள் ஆகிய இனத்தைச் சார்ந்தவர்கள் நெசவுத் தொழில் செய்து வந்தனர். இதில் மூன்று கூட்டங்களாகிய காஞ்சான் கூட்டம், பூத்துறையாள் கூட்டம், போக்கன் கூட்டத்தை சேர்ந்த மாமன் மச்சான் மக்கள் ஒன்று சேர்ந்து வியாபாரத்திற்க்காக ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று கொண்டு இருக்கும் வேளையில் ஒருமுறை ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் ஒரு சோலைக்குள் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்ட மூவரும் ஆலனுடன் சோலைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு பிராமணர் சோலைக்குள் இருந்த நாச்சியம்மன் சுவாமிக்கு பூஜை செய்து வந்தார். அப்போது மூவரும் நடந்து வரும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தார். பார்த்த பிராமணர் நான் பூஜை செய்து இருப்பதை நீங்கள் மூவரும் பார்த்ததால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி மேல் கொண்டு நீங்கள் மூவரும் இந்த சோலைக்குள் இருக்கும் அருள்மிகு நாச்சியம்மனை உங்கள் குலதெய்வமாக கருதி பூஜித்து வாருங்கள் என்று கூறி அந்த பிராமணர் சென்று விட்டார்.
மேற்கொண்டு இந்த மூவரும் பிராமணர் கூறியதை மனதில் கொள்ளாமல் சுமார் மூன்று வருடங்களாக சோலைக்குள் இருக்கும் நாச்சியம்னை வழிபாடு செய்ய தவறியதால் மேற்படி மூவர் வீட்டிலும் எந்த நற்காரியங்களும் நடைபெறவில்லை. மூவரும் சோர்வு அடைந்து ஒன்று கூடி பிராமணர் கூறியதைப்பற்றி விவாதித்து விட்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். அன்று இரவு விடியற்காலை சுமார் மூன்று மணிக்கு மூவர்கனவிலும் நாச்சியம்மன் தோன்றி என்னை பூஜித்து வந்த பிராமணர் உங்களிடம் என்னை பூஜித்து வருமாறு கூறிச்சென்றார் ஆனால் நீங்களோ என்னை பூஜித்து வழிபாடு செய்யவில்லை. ஆகவே இனி மேற்கொண்டு மூன்று கூட்டத்தாரும் (காஞ்சான், பூந்துறையான் போக்கன்) கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபத்திற்க்கு மறுநாள் பெண் தெய்வமாகிய எனக்கு நீங்கள் பென் நட்சத்திரமாகிய ரோகினி நட்சத்திரத்தில் வழி பட்டுவந்தால் உங்கள் குடும்ப வம்சவழியில் கலந்துகொள்ளவும், எல்லாவித சுப நற்காரியங்கள் தடையின்றி நடக்கவும் அருள் புரிவேன் என்று கூறி மறைந்து விட்டார். அன்று முதல் இன்று வரை நாச்சியம்மனுக்கு நாம் கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் மூன்று கூட்டத்தாரும் கூட்டு வழிபாடும் நாம் மூன்று கூட்டத்தாரும் வழிபட்டு வருவதால் சகல சௌபாக்கியம் நடைபெறுகிறது. ஆ ேநாம் நடத்தி வணங்கி வருகிறோம். மூன்று கூட்டமாக ஒன்று கூடி கோவில் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.