#சோழ சாம்ராஜ்யம் அழிந்த பின்பும் அதன் #புலிக்கொடியை இன்று வரை பாதுகாத்து வரும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள #செங்குந்தர்_பத்ரகாளியம்மன் ஆலயம்.
சோழ சாம்ராஜ்யத்தில் படைத் தளபதிகளாகவும் படை வீரர்களாகவும் இருந்து செங்குந்தர் கைக்கோளர் வீரர்கள் போருக்கு செல்லும் முன் இந்த தெய்வத்தை வணங்கி விட்டு செல்வார்கள் என்பது வரலாறு..
இந்த புலிக்கொடி சோழநாட்டு வலங்கைமான் செங்குந்த மாரியம்மன் கோயிலில் வழக்கமாக தீமிதிப்புக்கு 10 நாட்க
ள் முன்பு இயற்றப்படும் கொடி.
சோழன் கொடியில் இந்திரனை வைத்து என்று ஜெயங்கொண்டார் குறிப்பிடுவது இக்கொடியினில் காணப்படும் கண்கள் தான்.
ஆயிரம் கண்கொண்ட இந்திரன் சங்கதி ஆயிரம் பெண்ணுறுப்பாக (கண்களை போன்றது) புராணத்தை நாம் புரிந்துகொண்டாலும்; ஆயிரக்கணக்கான கண்மாய்களை/குளங்களை /ஆறுகளை/குளங்குட்டைகளை குறித்து வழங்கியதே கண்(நீர்நிலை/ மேகம்) என்ற சொல்லின் பொருளாகும்.
கண்ணன்(கிருஷ்ணன்);கண்ணர்/நூற்றுவ கண்ணர் என்பதன் பொருளாகும்.
வருணி/விருஷ்ணி/திரையர்/சாகரர்/சகரம் /சாகரம்/சேகர்/சேகரம் /கண்ணர் என்பதெல்லாம் நீர்வளளத்தை உருவாக்கித் தந்ததைக்குறிக்கும். அதில் சோழரே தொல்காப்பியம் கூறும்.
" வேந்தன்(இந்திரன்)மேய தீம்புனல் உலகமும்"- ஆகும். அதனால்தான் மேற்படி வேந்தான் என்ற சொல்லுக்கு இந்திரன் என்று அறிஞர்கள் பொருள் கொண்டனர்.
சோழப் புலிக்கொடியில் ஆயிரங் கண்ணனை வைத்தது யார்?
***********
193
"புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும். 16"-கலிங்கத்துப் பரணி