சுவாமிமலை செங்குந்த முதலியார் மரபினர்கள்

0
கிபி 1485 ஆம் ஆண்டில் நரசிங்க தேவராயர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட செப்பேடு

முருகப்பெருமான் தந்தைக்கு உபதேசம் சொன்ன இடமாகவும்,நான்காம் வீடு என்றழைக்கப்படும் கும்பகோணம் சுவாமிமலை அருள்மிகு.சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதியான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சத்தினர் மற்ற அறுபடை வீடுகளில் உள்ளது போல் சிறப்பு மண்டகப்படிகள் மற்றும் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மண்டகப்படி உள்ளன.



சுவாமிமலை செப்பேடு: அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலில் செங்குந்த கைக்கோளர் சமூகத்தின் கொடியேற்றம் மண்டகப்படி, ஐந்தாம் திருநாள் மண்டகப்படி, சூரசம்கார மண்டகப்படி, காலை சந்தி கட்டளை போன்ற உரிமை ஒன்றாய் சமூகத்தின் உரிமைகளுக்கு 72 நாட்டை சேர்ந்த இச்சமுதாய மக்கள் கொடுக்க வேண்டிய வரி விபரத்தை பற்றி கூறும் செப்பேடு.







செப்பேட்டின் நகல்👇

வர்த்தமான கலியுகாதிu 4975 வர்த்தமான சாலிவாகனu 1796 இதன் மேல் செல்லா நின்ற ஆனந்தu வைகாசி மீ 3௨ சுக்ரவாரம் புனர்பூச நக்ஷ்த்திரமும் கூடிய சுபதினத்தில் மகாசெயமான ஸ்திரி நரசிங்கதேவ மகாறாயர் அவர்கள் நாளில் சுவாமிமலையின்பேரில் எழுந்தருளிய பரமசொரூபருக்கு உபதேசம் பண்ணப்படா நின்ற சிவகுருவாகிய குமர குருபரர்க்கு வீரவாகு வம்சமாகிய செங்குந்தர்களை வரும் காஞ்சி யேகாம்பரருக்கு மகாமாஷசி யார் தமக்கு வாஞ்சையுள்ள புத்திரனாக வந்து தீர்த்த மாதவஞ் செய்வித்தேன் அவர் கள் பிரதாபத்தை சொல்லிமுடியாது அனேக கீர்த்தியுடைய சேர சோழ பாண்டிய மண்ட லத்திலுள்ள செங்குந்தையர்கள் காஞ்சி சூழ்ந்த கையெழுத்துள்பட மகானாடனாட யேகாம்பரனாத முதலியார் ... திருநாகேசுர உள்பட மகானாடனாட சேர்ந்த கிராமம் செம்புநாத முதலியார் சுவாமிமலை னாடனாட சேர்ந்த அருணகிரி முதலியார் சுந்தரப் பெருமாள் கோவிலைச் சேர்ந்த கிராமம் உள் தலைமை பட ஆண்டியப்ப முதலியார் நல்லூர் னாடனாட சேர்ந்த சொக்கநாத முதலியார் திருச்செம்பள்ளி னாடனாட சூழ்ந்த வடுவனத முதலியார் அஞ்சு நாட்டுக்குத் யாகிய மாப்பளகுப்பம் னாடனாட சேர்ந்த கிராமம் உள்பட தெக்ஷணமுதலியார் காட்டூர் னாடனாட சேர்ந்த பந்தமாணிக்க முதலியார் போலகம் னாடனாடசேர்ந்த ரெங்கசாமி முதலியார் அய்யூர் னாடனாட சேர்ந்த ராமலிங்கமுதலி யார் பேட்டை னாடனாட சேர்ந்த ஆவதாறண முதலியார் திருப்பழுயூர் னாடனாட சேர்ந்த சுப்பறாய முதலியார் திருச்செங்கோடு னாடனாட சேர்ந்த வேலு முதலியார் பூவேல  னாடனாட சேர்ந்த பெருமாள் முதலியார் முட்டம் னாடனாட சேர்ந்த முத்து முதலியார் மோக னாடனாட சேர்ந்த அய்யா முதலியார் பாளயம் னாடனாட சேர்ந்த அம்மையப்ப முதலியார் மன்னார்கோவில் னாடனாட சேர்ந்த சிங்கார முதலியார் பய்ங்கா னாட னாட சேர்ந்த சிதம்பர முதலியார் சிதம்பரம் னாடனாட சேர்ந்த தில்லையப்ப முதலியார் சிய்யாழி னாடனாட சேர்ந்த சட்டையப்ப முதலியார் நல்லுசேரி னாடனாட சேர்ந்த சபாபதி முதலியார் பட்டீஸ்வரம் னாடனாட சேர்ந்த சாமி முதலியார் குவாக னாடனாட சேர்ந்த விருத்தாசல முதலியார் வதிஷ்ட புரம் னாடனாட னாடனாட சேர்ந்த சேர்ந்த சிதம்பரநாத முதலியார் திட்டகுடி னாடனாட சேர்ந்த கிருஷ்ண முதலியார் வாமதேவ நாட்டைச் சேர்ந்த கணபதினாயினார். புவனகிரி நாட்டைச் சேர்ந்த முத்துக்குமர முதலியார் தர்மபுரி நாட்டைச் சேர்ந்த கந்தசாமி முதலியார் சம்பன நாட்டைச் சேர்ந்த குழந்தைவேலு முதலியார் குடிகாடு நாட்டைச் சேர்ந்த குமர முதலியார் சோழம் பேட்டை நாட்டைச் சேர்ந்த வீரபத்திர முதலியார் கூத்தானூர் நாட்டைச் சேர்ந்த குட்டி முதலியார் திருமுல்லைவாடி நாட் டைச்சேர்ந்த அய்யாரப்பமுதலியார் இன்னும் சேர, சோழ, பாண்டிய மண்டலத்தி லுள்ள சகல நாட்டில் உண்டான சகலமான பேருங்கூடி கையெழுத்துள்பட யிட்டது கட்டளை ஸ்ரீ சாமினாதசாமி கோயில் தென் னண்டை பிரகாரத்தில் அறை கட்டி காலை தாம்பூர சாதினம் தண்டேஈஸ்வர படனாடை யும் சுவாமிமலையில் ஞான சூரூபியாய் யிருக்கா நின்ற சதாநந்த பண்டார அவாள் குமாரர் சரவணபவ பண்டார அய்யா அவர்களுக்கு செங்குந்தையர்கள் முதலிமார் அன்னாரும் முறி எழுதிக்கொடுத்தபடி உச்சி கால கட்டளை அபிஷேக நெவேத்தியம் திரு விளக்கு... திருமாலை பரி வேட்டம் புழுவாப்பு அன்னதானம் தவண திருப்பணி முதலான தும் சித்திரை மாசம் 5-ஆம் திருவிழா (அஞ்சாந்திருவிழா) கார்த்திகை மாசம் அஞ்சாந் திருவிழா. சூரசம்மாரமும் தங்கள் பார்சமாக கட்டளையிட்டது. திருநாகேஸ் வரம் நாட்டுக்கு வருஷம் (க) நெசவுக்கு ரூபாய் (ரு) வரியும் யெங்கள் வீட்டுகளில் கல்யாணம் ருது சாந்தி சீமந்தம் முகூர்த்தம் பணம் (க) வீதமும் படி அரிசியும் சாமினாத சுவாமிக்கு காவடி செலுத்தினால் காவடிக்கு (தெ) வீதமும் எங்கள் வீட்டுகளில் ஒரு தானமும் நெசவு இல்லாமல் இருக்கிற வீட்டுக்கு(உ)ம் அய்யா அவர்கள் நன்மைக்கு நெசவுக்கு ஒரு பண வரியும் தின்மைக்கு அரை பண வரியும் தங்களுக்கு நாங்கள் கொடுத்துவருகிறது Б சுவாமிமலை நாட்டில் வருஷம் (க) ஒன்றுக்கு ரெண்டுபண வரியும் கல்யாண முகூர்த்தம் ருது சாந்தி சீமந்தம் முகூர்த்தம் ஒன்றுக்கு மூனு பணமும் படி அரிசியும் சுவாமிநாத சுவாமிக்கு காவடிசெலுத்தினால் காவடி (1க்கு) முக்கால் பணமும் வீட்டில் ஒரு தானமும் நெசவு இல்லாத வீட்டுக்கு (உ) பணமும் அய்யா அவர்கள் நன்மைக்கி நெசவு ஒன்றுக்கு அஞ்சுபணமும் தின்மைக்கி நெசவுக்கு வருஷம் 2} பணமும் நாங்கள் கொடுத்து வருகிறது எங்கள் சுந்தரப் பெருமாள் கோவில் முதலாக நாட்டிலும் வருஷம் நெசவுக்கு ரூ (க) பணவரியும் கல் யாண்ம் ருது சாந்தி சீமந்தம் முகூர்த்தம் அரிசியும் களுக்கும் ரூ.(க) வீதமும் படி சாமினாத சுவாமிக்கு காவடி செலுத்தினால் காவடி. (க) பணம் (தெ.) வீதமும் யெங்கள் வீட்டில் ஒரு தானமும் அய்யா வீட்டில் நன்மைக்கு நெசவுக்கு ஒருபண வரி அரை பண யு ம் வரியும் தின்மைக்கி நெசவு இல்லாத வீட்டுக்கு ரெண்டு பணமும் தங்களுக்கு - கொடுத்து வருகிறது. தாங்கள் தானே இந்ததர்மத்தைப் பரிபாலனம் செய்து கோவில்பட்டு, பரிவட்டம், பிர வருகிறது. சந்திராதித்தாள் உள்ள சாதம் முதலானதும் தாங்களே பெற்றுக் கொள்கிறது. சந்திராதித்தாள் வரைக்கும் புத்திர பௌத்திர பரம்பரைக்கும் தாங்களே (நாலு) சமுத்திரத்துக்குள்பட்ட கொங்கு எழுபத்திரண்டு நாட்டிலும் உள்ள நமது நாட்டில் தாங்களே போய் மேலே யெழுதிய பிரகாரம் பணம் வசூல் செய்து கொண்டு கோவிலுக்குத் திட்ட பிரகாரம் நடப்பித்துக்கொள்கிறது. சுவாமிமலை நாட்டில் மேலவீதி மேல்புறத்தில் இருக்கிற தோட்டத்தையும் தாங்களே அனுபவித்துக் கொள்ளுகிறது. இந்த ஆக்கினைபடி செங் குந்தையர்கள் அனைவோரும் நடந்து வருவோமாகவும். இதற்கு யாதாமொருவர் அட்டிசொன்னால் அவர்களை மறித்து பணம் வசூல் செய்கிறது. இதற்கும் மீறினால் பன்னிரெண்டு பணம் அபராதமும் சாதியில் தள்ளி வைக்கிறது. இதில் கண்ட நாட்டார் கிராமத்தார் அனைவோர்களும் சர வண பவ பண்டார அய்யா அவர்களுக்கு தாம்பூர சாதினம் தணடேசுவர பட்டயம் யெழுதிக் கொடுத்தோம் வில்லவநல்லூர் கந்தசாமி பத்தர்... குமாரன் சாமினாத பத்தர் நெட் டெழுத்து தீர்க்காயிசு சுபமும் பெற்று சிவ சங்கர குமர குருபரனாகிய ஸ்ரீ சுவாமிநாதசுவாமி துணை.













கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சத்தினரான 327 செங்குந்தர் பரிபாலன பஞ்சாயத்து சபை,சுந்திரபெருமாள்கோயில் செங்குந்தர் மரபினர் சார்பாக நடைபெறுகிறது







 சுவாமிநாத சுவாமி திருக்கோயில் ஐந்தாம் திருநாள்
 (327 செங்குந்தர் பரிபாலன சபை) மண்டகப்படி






கார்த்திகை திருவிழா ஐந்தாம் திருநாள் செங்குந்தர் மரபினர் மண்டகப்படி
(327 செங்குந்தர் பரிபாலன பஞ்சாயத்துசபை-சுந்திரபெருமாள்கோயில்) சார்பாக நடைபெறுகிறது. 



https://youtu.be/1DpDYREnzog

முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சமான செங்குந்தர் மரபினர் 
(327 செங்குந்தர் பரிபாலன சபை) #கந்தசஷ்டி #சூரசம்ஹாரம் மண்டகப்படி







சுவாமிமலை தெற்கு வீதி உள்ள செங்குந்தர் திருமண மண்டபம்
 (327 செங்குந்தர் பரிபாலன சபை) 












சுவாமி மலை செங்குந்தர் மரபினர் சம்மந்தப்பட்ட மேலும் ஏதாவது வரலாற்று தகவல்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு வாட்சப் 7826980901 அனுப்புங்கள்


Post a Comment

0Comments
Post a Comment (0)