தோற்றம்
குடியாத்தம் நகரில் செங்குந்த கைக்கோளர் குல செல்வந்தர் புத்தூர் காளியப்ப முதலியாருக்கு இளைய மகனாக 17 -08 - 1890 அன்று பிறந்தார்.
மக்கள் பாணி
உணவு பஞ்சம் இருந்த காலத்தில் ஆயிரகணக்கான ஏழை மாணவர்களுக்கும் படிக்க வசதி இல்லாதவ்மானவர்களுக்கும் இலவச உணவு வழங்கியவர்.
ஆன்மிக கல்வியை அடுத்த தலைமுறைக்கு காப்பாற்ற இவரும் வெட்டுவானம் முனிசாமி முதலியாரும் சேர்ந்து வேதாந்த தமிழ் வாசகசாலை நிறுவினார். இதில் படித்த ஆயிரகணக்கான தமிழ் அறிஞர்கள், தமிழாசிரியர்கள் தமிழகமெங்கும் உள்ளனர். இன்றும் இந்த வாசகசாலை குற்யேற்றம் நகரில் ஆன்மீகத்தையும் தமிழ் கல்வியையும் ஆங்கில கல்வியையும் வழங்கி வருகிறது.
குர்தியாத்தம் நகராட்சி சேர்மனாக வெற்றி பெற்ற பின்பு இவர் நகராட்சி பள்ளி கட்டிடத்தை கட்டி, வட ஆற்காடு மாவட்டத்தில் முதன்மையான மைதானத்தை உருவாகினார்.
குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கி கட்டிடம் உருவாக காரணமாக இருந்தார்
கோவில் திருப்பணிகளில் பல உதவிகள் செய்தார். வட ஆற்காடு மாவட்ட அறநிலைத்துறை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக இருந்தவர்.
இவர் தனது அண்ணன் கோவிந்தன் முதலியாருடன் நூல் வணிகம் செய்தார். கைத்தறி லுங்கி தயாரித்து நேரடியாக பர்மா மார்க் என பெயரிட்டு வாங்கலாம் முதலிய வட மாநிலங்களில் வியாபாரம் செய்து குடியாதம் நெசவாளர்களுக்கு வேலை கொடுத்தார்.
நெசவாளர்களுக்கு தேவையான நூலை தயாரிக்க திருமகள் மில் என்ற செங்குந்தர் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த நிறுவனத்தின் டைரக்டராக இருந்தார்.
மறைவு
தனது 73 வைத்து வயதில் 02 -04 - 1964 லில் மறைந்தார்.
வேதாந்த பாட சாலை
தொல்லோர் புகழும் தொண்டை நன்நாட்டில், குடியேற்ற மக்கள் எல்லாம் படியேற்றம் காண, வாசத் தமிழை, வாசிக்கும் தமிழாக, நேசத் தமிழாக அனைவரும் பருகிட வேண்டி 1933-ஆம் ஆண்டில் வேதாந்தத் தமிழ் வாசக சாலையைப் பிச்சனூரில் காஞ்சிபுரம் ஆ. செங்கல்வராய முதலியாரை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பித்தனர். ஏழை மாணவர்களுக்கும், படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கும், இலவசமாக மாலை நேரத்தில் வயிற்றுப்பசிக்குக் கஞ்சியும், அறிவுப் பசிக்கும், ஆன்மீகப் பசிக்கும், பாலபாடம் முதல் ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், போன்ற அறநூல்களையும், நாநாஜீவ வாதக்கட்டளை, சசிவன்ன போதம் நிகண்டு முதலான இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தனர். வெட்டுவாணம் முனிசாமி முதலியாரும், புதூர் கா. கங்காதர முதலியாரும் மேற்கண்ட வாசகசாலையை நிறுவி நன்கு நடத்தி வந்தனர்.
வாழையடி வாழையென வந்த அவர்தம் மரபினராகிய திரு. வெட்டுவாணம் மு. வாசுதேவ முதலியார், திரு. பு.க. சிவஞானம், திரு. வா. இராசேந்திரன் ஆகிய நாங்கள் 1963 முதல் அவர்தம் பணியினைத் தொடர்ந்து செய்து வருகின்றோம். அதில் வித்துவான் வா.க. சண்முகனார், புலவர் ஆ.செ. சோமசுந்தரம், புலவர் வே. தங்கவேலு, புலவர் துரை விசுவநாதன் பேராசிரியர் க. சேக்மீரான், புலவர் க. எதிராசனார், புலவர் ச.கு. மோகனன், புலவர் ச. கந்தசாமி, புலவர் சண்முக செங்கல்வராயன் ஆகியோர் எங்களுக்கு உதவியாக இருந்து புலவர் வகுப்புகளையும், எம்.ஏ. போன்ற தமிழ் வகுப்புக்களையும் நடத்தி வருகின்றனர். கோடை காலத்தில் ஏப்ரல், மே, மாதங்களில் ஆன்மீகச் சொற்பொழிவும், 10-ம் வகுப்பு, +2 மாணவர்களுக்கு கோடைப்பயிற்சி வகுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
|
| காமராஜர் முதலமைச்சர் ஆக வாய்பிளந்து போது அவர் MLA வாக குடியாத்ததில் நிறுத்தி பெற்ற பெற பாடுபட்ட கங்காதர முதலியார் மற்றும் சண்முக முதலியார் |
![]() |
| இவர் தானமாக காட்டுகிறது பள்ளி கூட்டத்தில் இவரின் போட்டோ |






