முதலியார் பட்டத்துக்கு உண்மையான சொந்தக்காரர்கள்

0

 முதலியார் பட்டம் யாருக்கு சொந்தம் என்று என்று 600 வருடம் முன்பு செங்குந்த கைக்கோளர் சமூகத்துக்கும் வெள்ளாளர் சமூகத்துக்கும் சண்டை ஏற்பட்டது.

அப்போது வெள்ளாளர் சாதியை சேர்ந்த ஆதின மடாதிபதி நாவில்நால் நாவினால் மழுவெடுத்த ஞானப்பிரகாசர் என்பவர் முதலியார் பட்டம் என்பது செங்குந்த கைக்கோளர் சமூகத்துக்கே உரிய பட்டம் என்று வரலாற்று ஆவணங்களை எடுத்து கூறி முதலியார் பட்டம் செங்குந்த கைக்கோளர் சமூகத்துக்கே உரியது என்று தீர்ப்பு வாங்கி கொடுத்தார்.   

ஞானப்பிரகாசர் தான் பிறந்த வெள்ளாளர் சதிக்கே துரோகம் செய்ததாக கூறி வெள்ளாளர் சமூகம் இவரை சாதியை விட்டு நீக்கியது.   இதை கண்டு ஞானப்பிரகாசர் ஒருபோதும் வருத்தப்படவில்லை ஏனென்றால் அவர் வரலாற்று உண்மைபடி செங்குந்தர் சமூகத்துக்கு ஆதரவாக பேசினார்.










நாவினால் மழுவெடுத்த ஞானப்பிரகாசர் ச. 

 இன்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன் சான்றோர்கள் நிறைந்த தொண்டை நாட்டின் தலை நகரும் நமது செங்குந்தர் பேரரசின் 72 கிளை நாடுகளின் தலை நாடாகியதும் மகா நாடு என்ற பெயர் பெற்றதுமான காஞ்சியம்பதியில் விசயமார்த்தாண்டன் என்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். அவன் கொலுச்சபையில் உத்தியோகம் செய்பவருள் ஒரே பெயர் வாய்ந்தோர் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவன் செங்குந்தன். மற்றவன் வேளாளன். இவர்களில் ஒருவனை அரசன் அழைக்குங்கால் மற்றொருவன் வந்து எதிரில் நிற்பான். பலகால் இவ்வாறு நிகழ்வதை கண்ட அரசன் இருவரையும் அழைத்துத் தங்கள் இடுகுறி பெயரேனும் சிறப்பு பெயரேனும் வேறுபட மாற்றிக்கொள்ள உத்தர விட்டான். அது கேட்ட செங்குந்தன் தனது இடுகுறிப் பெயரையோ அல்லது சிறப்புப் பெயரையோ மாற்ற இயலாது என்று கூறினான். இதைக் கேட்ட வேளாளன் தானும் மாற்றிக்கொள்ள இயலாது என மறுமொழி கூறினான். (இருவரும் முதலி என்ற பட்டப் பெயரை தனது பெயருடன் இணைத்து இருந்தனர்.) அரசன் இருவர் இடத்தும் சம நோக்கம் செய்து இந்த சந்தேகத்தினை யாரால் உள்ளபடி உணர்ந்து நிவர்த்திக்கக் கூடும் என்று வினவினான். அதற்கு செங்குந்தன் கையிலாய பரம்பரையில் வந்த சந்தானசிரியர் நால்வருள் உப சுப்ரமணியரான வீரவாகு தேவர் அம்சை பெற்று சனக மகா முனிவர் அவதாரமாய் விளங்கும் சுவேதனப் பெருமாள் என்னும் மெய்கண்டதேவர் ஆகினத்தி ன்கண் பூர்வம் ஓர் சிவானுபூதிமானய்ப் பிரசித்தி பெற்று இருந்த சிற்றம்பல நாடிகளின் பிரதம மாணக்கருள் ஒருவராய் இவ்வூரின்கண் இவ்வேளாளருக்கும் இவரது மரபினருக்கும் ஆசிரியராகி ஞானப்பிரகாச தேசிகர் என்னும் அபிஷேக திருநாமம் வாய்ந்த ஓர் புண்ணிய சொரூபி உள்ளார். அவரை அழைப்பித்து உசாவின் உள்ளபடி உணரக்கூடும் என்று கூறினான். அப்போது அரசன் அவ்வேளாளனை உமக்கிது சம்மதமா கேட்டான். அதற்கு வேளாளன் தனக்கு சம்மதம் என்றும் பின்னர் இச்செங்குந்தன் அத் தேசிகர் சொல்லிய உண்மையில் பிறழ்ந்து வேறு ஒருவரை அழைப்பித்தல் கூடாதென மொழிந்தான். அதுகேட்ட அவ்வரசன் அத்தேசிகரை சபைக்கு அழைத்துவரச் செய்து தக்க ஆசனத்தில் இருத்தி நடந்த சரிதத்தினை கூறி சந்தேகத்தினை நிவர்த்தியருள வேண்டினான். அதற்கு தேசிகர் 'தன் நெஞ்சால் அறிந்ததில் பிறழாது உண்மையே சொல்பவன் தான் தருமாதிகள் செய்வனினும் தலையானவன். ஆதலால் பொய் சொல்லாமைக்கு ஒப்பான புகழ்ச்சி இல்லை. நான் சற்சூத்திர மரபென்னும் வேளாளர் குலத்தில் பிறந்தேனாயினும் அம்மரபினருக்கெல்லாம் சமய தீட்சை செய்வித்தும் ஆசிரியராகியும் அவர்களால் செய்யப் படும் உபகாரத்தினால் சீவிக்கும் தன்மையன். இத்தன்மையுடைய என்னை இருவகை மரபினருக்கும் உண்டான சிறப்பு நாமத்தை பற்றி உண்மையை விளக்க வேண்டும் என்று கேட்டால் சாதி அபிமானமும் அதனால் பெறும் ஊதியத்தினாலும் நான் முறை பிறழ்ந்து பொய் சொல்வேன் ஆயின் என்னாகும்? ஆதலால் உண்மையே பேசுகிறேன்'' கேளும் என்று கூறினார். நான்கு வகை வருணபேதம் உண்டான காலத்தில் முதல் மூவகை வருணத்தாருக்கும் ஐய்யர் முதலிய சிறப்பு நாமங்கள் உண்டானபோது நான்காம் வருணத்தாருக்கு பிள்ளை நான்காம் வருணத்தாருக்கும் சிறப்பு நாமங்கள் பலவாறாயின என்பது எங்கும் பிரசித்த என்னும் சிறப்பு நாமம் உண்டாகி முதல் மூவர் சிறப்பு நாமங்களில் மாற்றம் ஏற்பட்டதுபோல் நிச்சயம், ஆனால் இச் சபையில் நிற்கும் முதலியரென்னும் சிறப்பு நாமம் அவற்றை ஒப்பது அன்று. அஃது தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபிரானுக்குரிய சிறப்பு நாமமாதலால் சிவக்குமாரர்களான செங்குந்தர் மரபினருக்கே எப்போதும் சிறப்பு நாமமாய் விளங்கும். இதை வேறு மரபினர் வகித்தல் விளக்கின் ஒளியை மின்மினி வகித்தலுக்கு ஒப்பாகும். அதன் பெருமையை அயன் அரி அரன் என்னும் முத்தேவர்கள் தான் சொல்ல வேண்டும். முனிவர் களில் அகத்திய முனியும் மானிடரில் கல்விச்சக்ரவர்த்தியும் சிரச் சிங்காதனாபதியுமாகிய ஒட்டக்கூத்தரும் விளக்கக் கூடும். ஆதலின் என்னை ஒத்தவர் கூறவல்லேன் அதனை செங்குந்தர் மரபினர் மாற்றி கொள்ள இயலாது. வேளான் மரபினரே மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறி முடித்தனர். இவை அனைத்தையும் கேட்டு இருந்த வேளான் முகம் கருகி வியர்த்து விழிசிவப்ப சினந்து ஞானபிரகாச தேசிகரை உருத்துப் பார்த்து, ஓய் தேசிகரே அன்னமிட்டார். வீட்டில் கன்னமிட்டார் கூட்டுள் நீவிர் தலையாவீர் போலும், செங்குத்தர் மரபோர் ஒருவர்க்கே முதலியார் எனும்சிறப்பு நாமம் உரியதென்று சத்தியமாக கூறுவீரா என்று உரப்பி க்கேட்டனர். அதற்கு தேசிகர் எனது நாவினால் மழுவெடுத்துக் கூறினேன் எனக் கூறினர். அரசன் வியந்து தேசிகரைப் பார்த்து உண்மை அறிய வேண்டும் என்பது என் கருத்து. நாவினால் நீவிர் மழுவெடுத்து கூறவல்லேன் என்று கூறியதால் அவ்வாறு செய்யற்கியல்வீரோ என்று கேட்டனன். அதற்கு தேசிகர் இன்னும் ஒரு சாமத்திற்குள் இவ்விராசசபையில் எரிமூட்டி ஓர் மழுவை அமைத்திரும் நான் சிவபூசை செய்து முடித்துக் கொண்டு வருகிறேன் என்று பூசாமண்டப பூங்காவிற்குச் சென்றார். உடனே வேந்தன் தனது நண்பராய் உள்ள பிரபுக்களையும் சில தூதரால் அழைப்பித்து நிகழப் போகின்ற அற்புத நிகழ்ச்சியை நகர் முழுதும் வள்ளுவனைக் கொண்டு முரசறைவித்தான். சிவாச்சாரியார்களும் செங்குந்தர்களும் புறவருணத்தாரும் புறச்சமயத்- தினரும் இராசசபையில் வந்து அமர்ந்தனர். அரசனானவன் தனது சபைக்கு நேரே உள்ள வெள்ளிடை வாசல் மத்தியில் ஓர் நீக்குண்டம் சமைப்பித்து அதில் ஓர் மழுவை அமைக்குமாறு மந்திரிகளுக்கு ஆணையிட்டான். அவர்களும் அவ்வாறு முடிப்பதில் முயன்றிருந்தார்கள். தேசிகர் நீராடி மறஉரி முதலியன உடுத்து விபூதி ருத்திராக்கம் முதலிய சின்னங்- களைத் தரித்து ஆன்மார்த்த பூசையை விதிப்படி நிறைவேற்றி ஸ்ரீசண்முக கடவுளுடைய திருவுருவத்தை மனதில் இருத்தி யோகம் செய்து நமது நியம நிட்டைகளை முடித்துக் கொண்டு கவிச்சக்கரவர்த்தியாகிய ஓட்டக்கூத்தரை மனதில் தியானித்து அவரது பிரபாவத்தை துதித்து ஐயனே பூர்வம் குலோத்துங்க சோழ மகாராசனுடைய கொலு மண்டப வாலின்கண் தனது மரபினரால் அமைத்த சிரச்சிங்காதனத்தில் இருந்து. ''இந்திர னயன் மாறேவர் யாவர்க்கு முதன்மையாக வந்த பான்மை யினாற்குல மழுப்படை யத்தனார்க்கு முந்திய நாமந் தானு முதலிய ராகையாற் செங் குந்தர் சந்ததிக் குமப் பேர் முதலிய ரென்று கூறும்'' என்று தேவரீர் மொழிந்தது சத்தியமேயன்றோ? இத்தகைய சத்திய வாக்கிளை நம்பி இவ்விஜய மார்த்தாண்ட மகாராசனுடைய கொலு மண்டபத்தில் பாகின்ற பிரமாணிக்கத்திற்கு யாதொரு இடையூறும் வராமல் தேவரீரே யான் நடத்தப் முன்னின்று காத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து, பூசா மண்டபத்திலிருந்து, கொலு மண்டபத்தை நோக்கி வந்த தேசிகர் கொல்லரால் எந்தப்பட்ட மழுவுக்கெதிரில் ஊங்காரம் செய்து வந்து நாவை நீட்டி ஏந்தப் பாய்ந்தனர். அதுகண்ட அரசன் ஓடி தடுத்து ஓ சுவாமி தங்கள் வாய்மையை நிலை நிறுத்த பிரமாணம் செய்யவும் வேண்டுமா? தங்கள் தரிசனத்தால் சிவாநந்த வாழ்வு பெற்றோம். யாங்கள் நரகிற்காளாவண்ணம் இந்நிலைக் கண் வரச் செய்த எங்களை மன்னித்தருள் வேண்டுமென்று பிரார்த்தித்தான். அதற்கு அவர் சம்மதியாது முன் சொன்னபடி என்னாவினால் சிறிதளவேணும் தீண்டாது விடேன் என்று கூடி யாக்கிரமித்து மீண்டும் அம்மழுவில் எதிரே நாவை நீட்டிப் பாய்ந்தார்; அந்தாவின் பரிசம் அதன் மீது பட்ட மாத்திரத்தில் அம்மழுவானது வீபூதி குண்டம் போல் வெளுத்து நிராகிந்தகரு கொண்டு பறந்தது. அதுகண்ட மக்கள் ஜயஜயவென்று கூறிக்கொண்டு கைகொட்டி ஆர்ப்பாரித்தார்கள். அந்தணராகிய பெரியோர்கள் மலர் தூவி ஆரவாரித்தார்கள். அரசனானவன் சகல வாத்திய கோஷம் முதலிய சம்பிரமங்களுடன் ஞானப்பிரகாச தேசிகரை சிவிகையில் ஏற்றி தானும் சதுரங்க சேனைகளாகிய பரிசனங்களுடன் அவரை கூடி நகரியை வலமாக வந்து அவரை அவரது மடாலயத்தில் இறக்கி பணிந்து அளவற்ற திரவியங் களை பரிசாகத் தந்து விடைபெற்று தனது இருக்கையை அடைந்தனன். அன்று முதல் இன்று காறும் அத்தேசிகரை யாவரும் நாவினான் மழுவெடுத்த ஞானப்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்பு நாமத்தால் துதி செய்வராயினர். இதனைக் கண்டிருந்த வேளாண் மரபினர் அவரை சன்மானித்தலும் அவர் பால் உபதேசம் பெறுதலும் அற்று அழுக்காறு அடைந்த மனத்தினராய் அகல நின்றார்கள். அது கண்டு செங்குந்த மரபினர் அவரை சன்மானித்து அவரது மடாலய விருத்திக்கு குறை நேராத படி காத்து வருவாராயினர். அதுபோலவே நாளது காறும் அம்மடாலய பரிபாலணங்கள் செங்குந்த மரபினரே நிறைவேற்றி வருகின்றனர். இத்தகையை பிரபாவத்தை அடைந்த ஞானப்பிரகாச வள்ளலார் தம்மைச் சன்மானித்த செங்குந்த மரபினரைச் சிறப்பித்து 6000 செய்யுளில் ஓர் புராணமும் பல பிரபந்தங்களும் இவ்வுலகுள்ள வரையில் நிகழ்வதாக அருளிச் செய்தனர். வள்ளலாரைப் போலவே பலர் தங்கள் இட்ட சித்தியாக வேண்டி கவிச்சக்கரவர்த்தி - யாகிய ஒட்டகூத்தரை பூசித்தும் தியானித்தும் அதனைப் பெற்ற சரிதங்கள் பலவாம். பின்குறிப்பு: இஃது 1895-ஆம் ஆண்டு சென்னை இந்து தியலாஜிக்கல் அச்சு இயந்திர சாலையில் ஸ்ரீ காரணீஸ்வரம் திரு. தி. தருமலிங்க முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் சரித்திரம் முலமாகும். இவர் இயற்றிய 6000 செய்யுள்கள் அடங்கிய கந்தபுராண ஓலைச் சுவடி தஞ்சை ஜில்லா செங்குந்த மகாஜன கல்விச்சங்கத்தில் இருக்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)