ஈரோடு A.P.வெங்கடாசல முதலியார் 1921 ம் ஆண்டில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே நாட்டுப் பற்றும் ஆன்மீகத்திலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர்..
காங்கிரஸ் இயக்கத்திலும் RSS இயக்கத்திலும் பற்று கொண்டவர். ஈரோடு நகர்மன்ற கவுன்சிலராக இருந்தவர். ஈரோட்டில் உள்ள நமது செங்குந்த குல சொந்தகளின் நன்கொடை மூலம் கோட்டை செங்குந்தர் திருமண மண்டபம்,ஒட்டக்கூத்தர் திருமண மண்டபம் மற்றும் செங்குந்த சமூக திருமண மண்டபம் ஆகியவற்றின் செயலாளராக முன்னின்று கட்டிடம் செய்து திறப்புவிழா செய்தவர்..ஈரோடு செங்குந்தர் பள்ளி ஆரம்ப முதல் அதன் வளர்ச்சிக்கு துணை இருந்தவர்..
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில் இரு முறை திருப்பணி செய்து மகா கும்பாபிஷேகமும்,திருமுருக கிருபானந்த வாரியார் ஆசியுடன் ஆன்மீகத்திலும் மிகவும் ஈடுபாடு கொண்டு 13 திருக்கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தவர்...
ஈரோட்டில் உள்ள தமது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து வள்ளளார் குடி கொண்ட வடலூரில் இடம் வாங்கி கட்டிடம் செய்துவித்து ஈரோடு சன்மார்க்க சங்கம் எனும் அறக்கட்டளை ஏற்படுத்தி நிர்வாகித்து வந்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசத் திருநாளன்று அன்னதானம் நடைபெறவும் செய்தவர்.
குலதெய்வம் மணலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் இவரது தலைமையில் இடிந்த நிலையில் இருந்த கோயிலை திருப்பணி செய்து 2 முறை கும்பாபிஷேகம் செய்தவர்...
இறைபணி செங்குந்த ஈடுபாடு மற்றும் நாட்டுப் பற்றும் கொண்ட இவர் 1995ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்..
பிறந்த தேதி 01.01.1921
மறைந்த தேதி 10.12.1995
இவரின்
கூட்டம் பெயர்: ஜெயவேல் கோத்திரம்
குலதெய்வம்: திருப்பூர் மணலூர் அங்காளம்மன்