சேலம் S.P. சம்பந்தம் முதலியார்

0

 


சேலம் செங்குந்தர் பள்ளி,
சேலம் பாலிடெக்னிக் கல்லூரி,
எஸ். பழனியாண்டி முதலியார் மருத்துவமனை,
சேலம் சம்பந்தம் நூற்ப்பு ஆலை, சித்தேஸ்வரா மில்ஸ், தல்.
கந்தகிரி நூற்பு ஆலை போன்ற நிறுவனங்களின் நிறுவனர்.
சேலம் மாவட்ட செங்குந்தர் சங்க முன்னாள் தலைவர். சேலம் பகுதி செங்குந்த கைக்கோளர் மக்களின் கல்வி முன்னேற்றத்துக்காக
பாடுப்பட்டவர்.

பிறப்பு
செய்யுந் தொழிலில் நெய்யுந் தொழிலே சிறந்தது. சேலம் அம்மாப் பேட்டையில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் எஸ். பழனியாண்டி முதலியாருக்கும் நெசவுத் தொழிலே குடும்பத் தொழிலாக இருந்தது. அன்னார்க்கு, திரு எஸ். பி. ரத்தினம், திரு எஸ். பி. சம்பந்தம், திரு எஸ். பி. இராசேந்திரன்.,B.com., ஆகிய மூன்று ஆண்மக்களும் அன்பும், பண்பும், அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமைந்த மும்மணிகளாகத் திகழ்கின்றன. 

இவர்களுள் நடுநாயக மாகத்திகழும் திரு. எஸ். பி. சம்பந்தம் அவர்களைப்பற்றி நம் குலத்தவர்கள் அறிந்து கொள்வது பொன் விழா சமயத்தில் பொருத்தமானது எண்ணினோம் எழுதினோம் 26-11-1924ல் திரு எஸ். பி.சம்பந்தம் அவர்கள் பிறந்தார். சீரோடும் சிறப்போடும் பள்ளிப்பருவம் அம்மாப்பேட்டையில் இருந்த ஆரம்பப்பாடசாலை (அது தான் அன்றைக்குச் சேலத்துச் சர்வகலா சாலை) யில் பாடந்தொடங்கியது. 1942 படித்து SSLC படித்து முடித்தார். 

வாழ்க்கை
அதற்கு மேல் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் '' என்பதற்கு கேற்ப வீட்டிலேயே வணிகத்துறைக் கான அனுபவப்படிப்பைத் தொடர்ந்தார். அது இன்றும் வளர்கிறது. வளர்ந்து கொண்டே இருக்கிறது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் வர்த்தகத் துறையில் ஈடுபடலானார். ஆரம்பத்தில் சுத்த பட்டு வியாபாரம் சில்லரை வியாபாரமாக செய்து வந்தார். பிறகு அந்த வியாபாரத்திலேயே சொந்த முயற்சியால் சுமார் 20 நபர்களைக் கொண்டு கையினால் முறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு நல்ல முறை யில் தயார் செய்து இப்பேட்டையி லுள்ள அனைத்து பட்டு நசவாளர்களையும் தன்பால் ஈர்த்து இரு தரப்பினருக்கும் சிறந்த முறையில் வியா பாரத்தை வகுத்து நல்ல முறையில் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டார். 

பின்னர் 1960 ல் தனது தகப்பனாரின் தொழிலாகிய நூல் வியாபாரத்தைத் தொடங்கினார். 1960 -ல் நூல் வியாபாரம் - ஆலை யில் இருந்து வர்த்தகர் நேரடி கொள்முதல் முதல் செய்து - வர்த்தகரிடமிருந்து நெசவாளர்களுக்கு விற்பனை செய்யும் முறையை முதலில் கொண்டு எஸ். பி. சம்பந்தம் வந்தவர் நமது குடும்பத்தார் என்றால் மிகையாகாது. 

'' தொட்டதெல்லாம் பொன்னாகும் வைத்ததெல்லாம் பயிராகும் "என்பதற்கேற்ப 1965 முதல் 1981 வரை சேலம் நூல் வர்த்தக சங்கத்தின் காரியதரிசியாக இருந்து ஆற்றிய பணிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது

1965ல் மன்னா உலகத்து மன்னுதல் இல்லாத முறையில் சேலம் அம்மாப் பேட்டையில் 'செங்குந்தர் கல்யாண மண்டபம்' (டிசம்பர் 12, 13ல் பொன் விழா மாநாடு காண உள்ள மாளிகை) கட்டடப் பொறியாளர் போலத் தனது கூர்ந்த மதி நுட்பங்கொண்டு கட்டட நிர்மானம் செய்து புகழ் கொண்டார். இன்று தமிழ் நாட்டிலேயே தலை சிறந்து விளங்கும் மாபெரும் கல்யாண மண்டபங்களில் இது ஒன்றாகும். இதில் திருமணம் செய்பவர்கள் தங்குவதற்காக சுமார் 22 அறைகள் உள்ளன. 

1974 ஆம் ஆண்டு தொழில் துறையில் முன்னேற்றங்காண வேண்டி ஒரு கழிவுப்பஞ்சு நூற்பாலை ஏற்படுத்தினார். அது இன்று 20,000 கதிர்களைக் கொண்ட ஒரு மாபெரும் நூற் பாலையாக இயங்குகிறது. ஏராளமான நம்மவர்க்கு வேலை வாய்ப்பளித்தது. அடுத்து கந்தகிரி நூற்பாலையையும் தனது பெரு முயற்சியால் அம்மாபேட்டைக்கு அடுத்துள்ள உடையாபட்டியில் 6,000 கதிர்களைக் கொண்டதாக நல்ல முறையில் இயக்கம் கொண்டுள்ளது. இஃதன்றி சம்பந்தம் டெக்ஸ் டைல்ஸ் என்ற ஒரு கழிவுப்பஞ்சு நூற் பாலையும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நம் செங்குந்த முதலியார் கல்யாண மண்டபத்தில் இருந்து நம் சமுதாயத்தில் நடக்கும் இறுதிக் காரியங்களுக்குச் சுமார் 4 ஏக்கர் நிலத்தில் ஏக காலத்தில் 300 பேர் உணவருந்தவும், 100 பேர் ஆண்கள், 100 பேர் பெண்கள் குளிக்கவும் ஒரு நந்தவனச்சோலை இவரின் பெருமுயற் சியால் நம் சமூகத்தவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது தமிழ் நாட்டிலேயே இந்த மாதிரி காரியத்துக்கு இது போன்ற அமைப்புள்ள சோலைவசதி எங்கும் கிடையாது. 



இங்கு இவர் தகப்பனார் ஞாபகார்த்தமாக ரூ 30,000/ செலவில் சமையல் அறை, சாப்பாட்டு இடமும் அமைத்துக் கொடுத்து இருக்கிறார். அம்மாப்பேட்டை செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் மேல் மாடியில் சுமார் ரூ .25,000/- செலவில் இவரின் தகப்பனார் பெயரில் ஒரு ஹால் கட்டிக் கொடுத்துள்ளார். நம் அம்மாபேட்டையில் இவருடைய தகப்பனாரின் அறக்கட்டளை நிறுவன சார்பாக சுமார் 5 இலட்சம் செலவில் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவருக்குத் தற்போது சுமார் அறுபது வயதாகிறது. இன்றும் தன் தமையனார் திரு. எஸ். பி. இரத்தினம். மேலும், ஒரு நவீன வசதி இராசேந்திரன், முதலியார் அவர்களின் சொல்லுக்கு சான்றுன்மைக்குரிய பண்பாக உள்ளது. மீறி எதுவும் செய்யாதவர். இது இவர் தம்பியார் திரு. எஸ். பி. B.com., அவர்களும் அவரது மூத்த இரு சகோதரர் களின் சொற்களை மீறி நடக்கவில்லை. இவர் பக்தி நிறைந்த பண்பாளர். பல அறக்கட்டளை நிறுவனங்களின் பொறுப்புகளை ஏற்று நடத்துகிறார். திரு. எஸ். பி. சம்பந்தம் அவர்கள் அம்மாப்பேட்டை செங்குந்தர் கல்யாண மண்டபத்திற்கு ஆரம்ப கால முதல் நிர்வாகியாகவும், தற்போது பொருளாளராகவும் இருந்து வரும் பணிகளைப் பொன்னேட்டில் வரையலாம். தற்போது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் பொன் விழா - சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சமூக சமூக மாநாடு நடத்தும் பொருளாதாரம் இருந்து வருகிறது. மேலும் பல அறப்பணிகள் அவரது பொறுப்பில் நடக்க உள்ளன. "தொண்டர்தம் பெருமைகளை சொல்லவும் படுமோ '' '' என் கடன் பணி செய்து கிடப்பதே '' என்ற நாவுக்கரசரின் மறுபதிப்பாக அவர் விளங்குகிறார். இவர் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்ந்து நம் சமூக வளர்ச்சிக்குப் பாடு படுவராக. தற்போது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் பொன் விழா - சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சமூக சமூக மாநாடு நடத்தும் பொருளாதாரம் இருந்து வருகிறது. மேலும் பல அறப்பணிகள் அவரது பொறுப்பில் நடக்க உள்ளன. "தொண்டர்தம் பெருமைகளை சொல்லவும் படுமோ '' '' என் கடன் பணி செய்து கிடப்பதே '' என்ற நாவுக்கரசரின் மறுபதிப்பாக அவர் விளங்குகிறார். இவர் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்ந்து நம் சமூக வளர்ச்சிக்குப் பாடு படுவராக. தற்போது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் பொன் விழா - சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சமூக சமூக மாநாடு நடத்தும் பொருளாதாரம் இருந்து வருகிறது. மேலும் பல அறப்பணிகள் அவரது பொறுப்பில் நடக்க உள்ளன. "தொண்டர்தம் பெருமைகளை சொல்லவும் படுமோ '' '' என் கடன் பணி செய்து கிடப்பதே '' என்ற நாவுக்கரசரின் மறுபதிப்பாக அவர் விளங்குகிறார். இவர் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்ந்து நம் சமூக வளர்ச்சிக்குப் பாடு படுவராக.

இந்தக் கட்டுரை 1980 ஆம் ஆண்டு புலவர் சிலம்பட்டியான் என்பவரால் எழுதப்பட்டது.








இவரின் மறைந்த தேதி இவரின் வாழ்க்கை வரலாறு இவரின் கூட்டம் பெயர் குலதெய்வம் பெயர் மற்றும் போட்டோக்கள் போன்ற தகவல்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு என்ன பயன்பாடு எண்ணுக்கு அனுப்பவும் 78269 80901

Post a Comment

0Comments
Post a Comment (0)