காஞ்சிபுரம் M. சண்முக சுந்தர முதலியார்

0

 திரு.M.சண்முக சுந்தர முதலியார் அவர்கள்                    

 “மேனாள்”தலைவர்   காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன  சங்கம்.                               


      •••••••••

காஞ்சிபுரம் நாட்டாண்மை திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் காலத்திற்குப் பிறகு காஞ்சிபுரம் நகர  செங்குந்தர் தலைவர் - பொறுப்பு வெற்றிடமாக இருந்த நிலையில் - திரு.M.சண்முக சுந்தர முதலியார் - காஞ்சிபுரம் நகர செங்குந்த தலைவர் பொறுப்பு ஏற்றும், தென்னிந்திய மகாஜன சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் தமது வாழ்நாள் காலம் வரை தொண்டாற்றினார்.


காஞ்சிபுரம் , பிள்ளையார் பாளையம் , திருமல்ராஜாத் தெரு, நிலச்சுவான்தார் திரு.முனுசாமி முதலியார் - காமாட்சி அம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாக 1925 - ஆண்டு பிறந்த திரு.M.சண்முக சுந்தர முதலியார் அவர்கள் பள்ளி இறுதியாண்டு வரை படித்தார்.


1955 - ஆண்டு திருமதி.தனலட்சுமி அவர்களை மணந்தார்.

தம்பதியர்களுக்கு 3-ஆண்,மற்றும் 3-பெண் குழந்தைகள் பிறந்து நலமுடன் வாழ்ந்தனர் , வாழ வைத்தனர்.


திரு.முனுசாமி முதலியார் அவர்கள் தமது வாழ்நாளில் பல திருக்கோயில் தொண்டுகளும் அன்னதானங்களும் செய்துள்ளார்.

திரு.M.சண்முக சுந்தர முதலியார் அவர்களும் அவரது தந்தையின் அடியொற்றி தர்ம காரியங்களும் ,

அன்னதானங்களும் செய்துள்ளார்.

1965- ஆண்டு தனது வார்டில் சுயேட்சை உறுப்பினராக நின்று , அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வார்டு  நலம் , நகர நலம் குறித்து வாதாடி வெற்றி பெறுவார்.பொதுநல வாழ்வில் - கைத்தறி நெசவாளர்களுக்கு நலம் புரியும் பொருட்டு -தக்கீஸ்வரர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக உறுப்பினராகவும் , பட்டுநெசவாளர்களுக்கு உதவும் பொருட்டு - பல்லவன் பட்டு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி , விற்பனைச் சங்க நிர்வாக உறுப்பினராகி தொண்டுகள் புரிந்தார்.

மேலும்,

பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு டவுன் பாங்க் மற்றும் - காஞ்சிபுரம் வீடு அடமான கூட்டுறவு வங்கியிலும் - நிர்வாக உறுப்பினராகி , வங்கி நலம் , மக்கள் நலம் கருதி தொண்டுகள் புரிந்தார். காஞ்சிபுரம் வள்ளலார் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் உருவாக்கி , நிறுவன தலைவராக பொறுப்பு ஏற்று நடத்தினார்.


காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் - சமுதாய அறங்காவலராக திகழ்ந்தார். சித்திரை உத்திரப் பெருவிழா -பிள்ளையார் பாளையம் 18-தெருவார்கள் பொறுப்பில் உற்சவங்களை சிறப்பாக நடத்தினார்.


ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் திருக்கோயில் - கும்பாபிஷேகம் , மண்டல அபிஷேகம் , இலட்சார்ச்சனை , கோடி அர்ச்சனை- ஆண்டுதோறும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நாளில் இலட்சதீபம் நடைபெற தொண்டாற்றியவர்.

ஸ்ரீ காயத்ரி சகஷ்ர நாமம் -ஸ்ரீ லலிதா சகஷ்ர நாமம் - ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் - நித்திய உபாசகர்.


காஞ்சிபுரம் செங்குந்தர் தலைவராக திகழும் நாளில் , திருத்தணிகை- அடிவாரத்தில், பிறரால் ஆக்கிரமிக்கப் பட்ட , பிள்ளையார் பாளையம் செங்குந்தர்க்கு சொந்தமான சத்திரத்தை மீட்டெடுத்து , புதுப்பித்தார். திருத்தணிகை செல்லும் பிள்ளையார் பாளையம் மக்களுக்கு பேருதவியாக அமைந்தது !


1971-ஆம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கப் பட்டவுடன் அக் கட்சியில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து -பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் வெற்றி வாய்ப்புக்கு தொண்டு புரிந்து , புரட்சித் தலைவர். எம்.ஜி.ஆர்.அவர்களின் நன்மதிப்பும் , (அவருடன் அமர்ந்து உணவருந்தும் வகையில்)அன்பும் பெற்றார்.


பல வகை பொது நலத்தொண்டுகளின் அனுபவங்களால் - தன்னை நாடி வருவோர் பிரச்சனைகளுக்கு தர்ம ரீதியாக , சட்டரீதியாக ஆலோசனைகள் கூறி , சுமூகமாக வாழ வழிகாட்டுவார் .

காஞ்சிபுரம் செங்குந்தர் தலைவராக இருந்து , சமுதாய மக்களை கட்டுக்கோப்பாக , ஒன்றி வாழ வழி நடத்தினார்.

அழைப்பின்  நிமித்தம்  தெரு , ஊர் பிரச்சனைகளில் நடுநின்று தீர்ப்பு வழங்கி , சுமூகநிலை உண்டாக்குவார்!


திரு.M.சண்முக சுந்தர முதலியார் - தமது வாழ்நாளில் பெரும்பகுதியை பொதுநலத் தொண்டுகளுக்கே அர்ப்பணித்து வாழ்ந்து,

55  வயதில் 17-6-1980   அன்று (உடல் நலக் குறைவால்) இறைவன் திருவடியை அடைந்தார்.! காலத்தால் அழியாத - நற்புகழ்,நற்பேறு பெற்று , நிலையாக வாழ்கிறார் ! என்றும் அவர் புகழ் வாழ்க !வளர்க !                           


தகவல் உதவி:-

M.S.வஜ்ஜிரவேலு.

Post a Comment

0Comments
Post a Comment (0)