திருச்செங்கோடு பெரும் செல்வந்தர் செங்குந்த கைக்கோளர் மரபு புள்ளிகாரர் கோத்திரம் வி.வி.சி. ராமலிங்க முதலியார் கணபதி அம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.
திருச்செங்கோடு நகரில் முதன் முதலில் கார் வாங்கி பயன்படுத்தியவர் இவர்தான் திருச்செங்கோடு நகரத்துக்குள் அதிக நிலம் மற்றும் கட்டிடங்கள் வைத்திருந்தவர் இவரே.
திருச்செங்கோடு நகரின் முதல் நகர்மன்றத் தலைவர் இவரே. இவரின் தம்பி மாடர்ன் தியேட்டர்ஸ் டிஆர் சுந்தரத்தை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்தவர் இவரே.
திருச்செங்கோடு புள்ளிகார் மில்ஸ் VVCR. வையாபுரி முதலியார் மற்றும் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர் VVCR. முருகேச முதலியார் இவரின் தம்பி ஆவார்.
110 பவுன் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க காவடியை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்/செங்கொட்டு வேலர் கோவிலுக்கு காணிக்கையாக செய்து வழங்கினார். தற்போது இது அடிவாரத்திலுள்ள ஆறுமுகசாமி கோவிலில் உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் நிலத்தம்பிரான் கோயிலுக்குப் பல மண்டபங்கள் இவரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியிலும் ஈடுபாடு கொண்ட இவர் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே தனது 45 வயதிலேயே இறந்துவிட்டார். இவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பார்.
தென்னிந்திய அரசியலையே புரட்டிப் போட்ட பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை முதன் முதலில் சந்தித்தது வைத்த செங்குந்தர் சமுதாயம் முதல் மாநாட்டின் வர்த்தக குழுவின் தலைவராக செயல்பட்டவர் கந்தப்பன் முதலியார்.
பிரிட்டிஷ் காலத்தில் திருச்செங்கோடு யூனியன் நகரமன்ற முதல் தலைவராக வெற்றி பெற்று சேவை செய்தவர் திருச்செங்கோட்டில் தற்போதைய நகரமைப்பு இவரால் கட்டப்பட்டது ஆகும்.
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தை முதன்முதலில் அமைக்க நிலம் மற்றும் கட்டிடங்கள் இலவசமாக கட்டிக் கொடுத்தார்.
திருச்செங்கோடு தற்போது உள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள இடம் இவர் தானமாக கொடுத்தது.
1930 ஆம் ஆண்டு செங்குந்தமித்திரன் புத்தகத்தில் இல் கந்தப்ப முதலியார் மறைவிற்கு வெளியிட்ட அனுதாபம் |
![]() |
1930 ஆம் ஆண்டு செங்குந்த மித்திரன் புத்தகத்தில் கந்தப்ப முதலியார் மறைவு செய்தி |