கீழ்பளுவூர் சின்னசாமி செங்குந்தர் (மொழிப்போர் தியாகி)

0


கீழப்பளுவூர் சின்னச்சாமி என்று அறியப்படும் சின்னச்சாமி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாகத் தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார்.

வாழ்க்கை
அரியலூர் மாவட்டத்தின், அரியலூர் வட்டம் செங்குந்த கைக்கோளர் குலத்தை சேர்ந்த ஆறுமுகம் முதலியார், தங்கம்மாள் இணையரின் மகனாக 30 ஜூலை 1937 அன்று சின்னசாமி பிறந்தார். இவர் பெற்றோருக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு உழவுத் தொழில் மற்றும் நெசவுத் தொழில் மேற்கொண்டிருந்தார். சுயமரியாதை நூல்களை ஈடுபாட்டுடன் படித்து வந்தார். மனைவியின் பெயர் கமலம். ஒரே மகளின் பெயர் திராவிடச்செல்வி.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்
26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் எச்சரிக்கை அடைந்து முன்கூட்டியே கிளர்ந்தனர், தமிழகத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் வெடித்தது.[ மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர். அந்த நேரத்தில் தெற்கு வியட்னாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி, தீக்குளித்தனர் என்ற செய்தி இதழ்களில் வெளி வந்தன.

தீக்குளிப்பு
திருச்சிக்கு வந்த சின்னச்சாமி, அங்கே ஒரு புகைப்படம் எடுத்து, அதன் ரசீதைத் தான் உயிரை விடப்போவதாக எழுதிய கடிதத்துடன் இணைத்து, தன் நண்பருக்கு அனுப்பினார். பின்னர், 1964ஆம் ஆண்டில் சனவரி இருபத்தைந்தாம் நாள், திருச்சி ரயில் நிலையத்தின் வாயிலில், விடியற் காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டு, ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” எனக் கத்தியவாறு, கட்டாய இந்தி திணிப்பைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார்.

சிலை
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாள் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாகத் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க ப்போன்ற  கட்சிகள் கடைபிடித்து வருகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம் பேட்டையில் 8 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் செலவில் கீழப்பளுவூர் சின்னச்சாமிக்கு தமிழக அரசினால் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஐயா இறுதியாக எழுதிய கடிதம்







தீயில் வெந்த தமிழ்புலிகள் என்ற புத்தகத்தில் இவர் பற்றிய குறிப்புகள்

கீழப்பளுவூர் சின்னச்சாமி
1963 - டிசம்பர் மாதம்.
எழும்பூர் ரயில் நிலையம்.
காவல் துறை புடைசூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை
விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து
கதறினான்.
"அய்யா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள்
நீங்களும் தமிழர்தானே.''
பக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார்.
"இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்.''
ஒரு மாத காலத்துக்குப்பின்,
25.1.64 ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி ரயில் நிலையத்தின்
வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்
கொண்டு 'தமிழ் வாழ்க' - 'இந்தி ஒழிக' என்று கத்தியவாறு கருகிப்
போனான்.
பக்தவச்சலத்தால் பைத்தியம் என்று அழைக்கப்பட்ட அந்த வீர
இளைஞன்தான்.

இறக்கும்போது அவனது வயது 27.
சின்னச்சாமி. அவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி 23
ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்
திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம்
கீழப்பளுவூர். ஆறுமுகம் - தங்கத்தம்மாள் சின்னச்சாமியின் பெற்றோர்.
ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த
சின்னச்சாமியின் ஓய்வு நேர வேலை சுயமரியாதை இயக்க நூல்களையும்,
நம்நாடு, திராவிட நாடு , முரசொலி ஏடுகளையும் படிப்பதுதான்.
'திராவிடச் செல்வி
தன் ஒரே மகளுக்கு சின்னச்சாமி வைத்த பெயர்.
மகளை,
தாய்
தன்
மனைவியை, தந்தையின் மரணத்திற்குப் பிறகு
தன்னையே நம்பியிருந்த தாயை, வாழவைக்க வேண்டிய கடமையைவிட
மொழிக்காகப் போராடும் வெறிதான் சின்னச்சாமியை
ஆட்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான், 'தென் வியட்நாமில் புத்த
பிக்குகள் அமைதி வேண்டி தீக்குளித்தார்கள்' என்ற செய்தி பத்திரிகைகளில்
வந்தது.
பக்தவச்சலத்தால் கைது செய்யப்பட்டு, விடுதலையானது முதல்
யாரிடமும் பேசாமல் இருந்து வந்த சின்னச்சாமி, 24.1.64
வெள்ளிக்கிழமையன்று பள்ளிப் பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கி
'தமிழ்வாழப் பாடுபடுங்கள்' என்று
உணர்ச்சி பொங்க
கொண்டிருந்தார். 'வயலுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதா?' என்று
கேட்டார்கள் அவரது தாயாரும், மனைவி கமலமும்
"வேலைக்குத்தான் போகிறேன். திராவிடச் செல்வியை கவனமாகப்
பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு திருச்சி வந்து 25.1.64
அதிகாலை 4.30 மணிக்கு ஒளிப்பிழம்பாய் எரிந்துபோனார் சின்னச்சாமி.
இறந்துபோகும் முன் தன் மைத்துனருக்கு எழுதிய கடிதத்தில்
சின்னச்சாமியின் மன உறுதியும், இலட்சியமும் தெரிந்தது.

திருச்சிக்குச் சென்ற சின்னச்சாமி அங்கே ஒரு புகைப்படமும் எடுத்து
அதன் ரசீதையும் தான் உயிர்விடப் போவதாக எழுதிய கடிதத்துடன்
இணைத்து தன் நண்பருக்கு அனுப்பியிருந்தார்.
சின்னச்சாமியின் ஒவ்வொரு செயலும் போர்வீரனின்
அடிகளைப்போல் திட்டமிட்டு வைக்கப்பட்டது. கொள்கை உறுதி
ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்ந்தது. தன் குடும்பத்திற்கென்று சின்னச்சாமி
விட்டுப்போன ஒரே சொத்து கொள்கைதான். அதனால்தான் இன்றும்கூட
அவர் மனைவி கமலம் தன் கணவரின் வீரமரணத்தைப் பெருமையுடன்
நினைத்துப் பார்க்கிறார்.
"இந்தி எதிர்ப்புப் போரில் முதன் முதலாகத் தீக்குளித்தவர் என்
கணவர்தான். அந்தப் பெருமை ஒன்றுதான் அவர் எனக்கு விட்டுப்போன
சொத்து'' என்று கண்ணீருடன் கூறுகிறார் அவர்.
சின்னச்சாமி இறந்த செய்தி அறிந்த எம்.ஜி.ஆர். 5,000 ரூபாய்
கொடுத்தனுப்பி. ''நான் 5.000 ரூபாய் கொடுத்துவிட்டதால்
சின்னச்சாமியின் உயிருக்கு இதுதான் மதிப்பு என்று எண்ணிவிடக் கூடாது''
என்று ஒரு கடிதமும் எழுதியுள்ளார். ஆம். மொழிப்போர் வரலாற்றில்
விலைமதிக்க முடியாத உயிர் அது என்பதை அப்போது வெளியான
இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு பத்திரிகைகளில் வந்த
தலையங்கங்கள் உணர்த்துகின்றன.
சின்னச் சாமியின் மகள் திராவிடச் செல்வியின் திருமணத்தை நடத்தி
வைத்த கலைஞர் அவர்கள் திருமணத்தின்போது 5,000 ரூபாய் நிதியும்
கொடுத்தார். அ.தி.மு.க. 21-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஜெயலலிதா
50 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். எந்த நிதியும் அன்பளிப்பும் அந்த
மாவீரனின் தியாகத்திற்கு ஈடாகாது என்பதற்கு சின்னச்சாமியின்

நினைவிடத்தில் எழுப்பப்பட்ட கல்லறையே சாட்சியாக நிற்கிறது.





பிற தியாகிகள்

x

Post a Comment

0Comments
Post a Comment (0)