பிறப்பு
ஈரோடு நகரை பூர்விகமாகக் கொண்டு செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர்.
சிறுவயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்டவர்.வழக்கறிஞர் படிப்புக்கு சேர வேண்டும் என்று விரும்பி அந்தப் படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
கொஞ்சமாக மக்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு ஈரோடு மன்றத் தலைவராக 3 முறை வெற்றி பெற்றார்.
இவர் தன் வாழ்நாளை ஈரோடு நகரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். ஈரோடு நகரத்தின் தற்போதைய நகர கட்டமைப்பை உருவாக்கி விட்டவரும் இவரே.இவரது தலைமையில் பல குடியிருப்புகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
காவிரி நதி நீரை சுத்திகரித்து ஈரோடு மாநகரம் முழுவதும் மக்கள் பயன்படுத்துவதற்காக தி ஈரோடு வாட்டர் ஒர்க்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்ததும் இவரே.
இவர் சரியாக இத்திட்டத்தை முடிக்கும் நேரத்தில் இவரின் நகரமன்ற பதவி பறிபோனது நடந்த இடைத்தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பவர் நகர்மன்றத் தலைவராக பதவியேற்று தி ஈரோடு வாட்டர் வொர்க்ஸ் திட்டத்தை திறந்து வைத்தார்.
ஈரோடு நகருக்குள் தரிசு நிலமாக கடந்த பகுதியை சீரமைத்து அதனை அழகிய பூங்காவாக மாற்றினார். இந்த பூங்கா தற்போது ஈரோடு வ உ சி பூங்கா என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பூங்காவை கட்டி முடித்தவுடன் ஸ்ரீனிவாச முதலியாரை போற்றும் வகையில் அப்போதிருந்த அரசு இந்த பூங்காவுக்கு சீனிவாசா பூங்கா என்று பெயர் வைத்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் வந்த சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகள் சிலர் சீனிவாச முதலியார் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சீனிவாச பூங்கா என்று இருந்ததை வ உ சி பூங்கா என்று பெயர் மாற்றினார்கள்.
இவர் காந்தியடிகளின் கொள்கையை தீவிரமாக பின்பற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சி இருக்கும் போதே 9.4.1927இல் டி. சீனிவாசமுதலியார் நகராட்சித் தலைவராக இருந்தபோது காந்தியடிகள் சிலையை கவர்னர் வைக்கவுண்ட் கோஷன் அவர்களைக் கொண்டு திறக்கச் செய்தார். 1.10.1939இல் மற்றொரு சிலை ஆர்,கே. வெங்கிடுசாமி காலத்தில் ஒ.பி. ராமசாமி ரெட்டியாரால் திறக்கப்பட்டது.
நன்றி தினத்தந்தி |