திருவண்ணாமலை சு. முருகையன் முதலியார் exMP, exMLA.

0

 செங்குந்தர் கைக்கோள முதலியார்   

         ⚜️குலத் தோன்றல்⚜️
ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் மாபெரும் அரசியல்வாதி
எஸ். முருகையன் முதலியார் exMP, exMLA, ex Chairman. 


                (07.08.1920 - 06.01.2003)
குடும்பம்:
 வட ஆற்காடு மாவட்டம் திருப்புத்தூரில் சுப்பிரமணிய முதலியார் வள்ளியம்மாள் தம்பதியருக்கு  மூன்றாவது பிள்ளையாக 7 ஆகஸ்ட்,1920ஆம ஆண்டில் பிறந்தார். இவருக்கு முன் சண்முகம் என்ற அண்ணனும் விசாலாட்சி என்ற அக்காவும் இவருக்கு பின் சிவகாமி, புனிதவதி என்ற இரண்டு தங்கையும் உள்ளனர். இவர் பிறந்த சிறிது காலத்திலே தாய் இயற்கையடைந்ததால் தனது பாட்டியே இவரை வளர்த்தார் திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை பயின்றார். தனது இளமைப் பருவத்தை திருப்பத்தூரிலே பெரிதும் கழித்தார்.  11.07.1940 அன்று அமராவதி அம்மாள் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு டாக்டர் தையா கிருஷ்ணமூர்த்தி என்ற
ஒரு மகள் உண்டு, அவர்கள் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர் அரசியல் தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம் உருது, இந்தி ஆகிய மொழிகளையும் பேசுவார். 

வாழ்க்கை:
பாவேந்தர் பாரதிதாசனின் நெருங்கிய உறவினரான இவர் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உடையவர்.

பேரறிஞர் அண்ணாதுரை முதலியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தி.மு.க கட்சியில் இணைந்து வடத் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை  வளர்த்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை எதிர்த்து போராடிய 6 முறை சிறை சென்றார்.

திருவண்ணாமலை தாலுகா, வட ஆற்காடு மாவட்ட திமுக கட்சியின் செயலாளராக பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

1955 முதல் 1964ம் ஆண்டு திருவண்ணாமலை நகராட்சி மன்றத்தின் கவுன்சிலராக பணியாற்றினார்.

உணவு மற்றும் உணவு மேம்பாட்டு ஆலோசனைக் குழுவின் கவுன்சிலராக 1963 ஆம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநில தொழில்துறை மேம்பாட்டுக் குழு மாவட்ட கவுன்சிலராக 1965 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1986 முதல் 1990 வரை திருவண்ணாமலையின் நகர்மன்றத் தலைவராகவும், நகர்மன்றத் தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து நகராட்சி நகரமன்ற தலைவர்களுக்கும் தலைவராகவும், குடிநீர் வடிகால் வாரிய இயக்குனராகவும் திகழ்ந்தவர்.

மூன்று முறை MLA வாக வெற்றிப்பெற்றவர்.
1.1962ஆம் ஆண்டில் துரிஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். 
2. 1967ஆம் ஆண்டில் கலசபாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
3. 1971ஆம் ஆண்டில் மீண்டும் கலசபாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஒரு முறை மக்களவைக்கு MP ஆக வெற்றிப்பெற்றார்
1. 1980ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார்.  (தற்போது திருவண்ணாமலை தொகுதி என்று பெயர் மற்றம் செய்யப்பட்டது)

இவர் வகித்த மற்ற பதவிகள்

1996 ஆம ஆண்டில் திருவண்ணாமலையில் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவர் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.



நினைவுகள்:
எஸ். முருகையன் நினைவு மாடல்மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இவர் நினைவாக திருவண்ணாமலையில் ஓர் பள்ளி உள்ளது.
எஸ். முருகையன் முதலியாரின் சிலை




______________________________________







போஸ்ட் கார்டு MLA., என்று அழைக்கப்படும் முருகையன் அவர்களைப் பற்றி

தொகுதி மக்கள் தங்கள் பகுதி சார்ந்த குறைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி ஐயா முருகையன் அவர்களுடைய முகவரிக்கு அனுப்பினால் போதும். அவ்வாறு தொகுதி மக்களிடம் இருந்து வரும் கடிதத்தை படித்து அவற்றை துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுப்பி தீர்த்து வைப்பார். யாரும் தன்னை சந்திக்கவோ காத்திருக்கவோ வேண்டாம் என்றும் நேரத்தை வீணாக்காமல் ஒரு அஞ்சல் அட்டையில் தெரியப்படுத்தினால் போதும் என கூறியவர். உயர்மட்ட தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த போதிலும்
மக்களிடத்தில் வெகு இயல்பாய் மக்களில் ஒருவராய் அவர்களின் தலைவராய் விளங்கியவர்..

போஸ்ட் கார்ட்  எம்.எல்.எ என்று பலர் அமரர் எஸ்.முருகையன் அவர்களை அழைப்பதும் உண்டு..

ஐயா அவர்களின் நூற்றாண்டை போற்றி கொண்டாடுவோம்..




Post a Comment

0Comments
Post a Comment (0)