புதுச்சேரி சோ. தட்சணாமூர்த்தி முதலியார்(முன்னாள் அமைச்சர்)

0
செங்குந்தர் கைக்கோள முதலியார் 
     ⚜️குலத்தோன்றல்⚜️
புதுச்சேரியில் முதன்முதலில் பிரெஞ்சு கொடியை இறக்கி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தவர். புதுச்சேரியின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் இலவசமாக தரக்கூடிய புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியை 100 ஏக்கர் பரப்பளவில் அமைத்தவர்.
சோ. தட்சணாமூர்த்தி முதலியார் exMLA


                                 (26.02.1925 - 23.06.2015)

பிறப்பு:
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திரு.S. தட்சிணாமூர்த்தி முதலியார் அவர்கள் 26, பிப்ரவரி மாதம் 1925 ஆண்டு பிரஞ்ச் இந்திய புதுச்சேரி மாநிலம் திருமலைராயன்பட்டினம் என்னும் ஊரில் ஓர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தில் சோமசுந்தர முதலியார் மற்றும் அஞ்சலம்மாள் தம்பதினருக்கு மகனாக பிறந்தார்.

இவருக்கு மூன்று சகோதரிகள் இருவர் மூத்தவர்கள் ஒருவர் இளைய சகோதரி.. மக்களால் "தேனா என்று அன்போடு அழைக்கப்படும். இவர் தனது ஆரம்ப கால கல்வியை வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் PUC வரை  படித்தார்.

வாழ்க்கை:

காந்திய கொள்கையில் நாட்டம் ஏற்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அய்யா அவர்கள் 1944 ஆம் ஆண்டு மரகதவல்லி என்ற வரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 1955ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவை சட்டசபை தேர்தலில் திரு.தெட்சிணாமூர்த்தி முதலியார் அவர்கள் திருமலைராயப்பட்டினம் தெற்கில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

17.08.1955 முதல் ஜனவரி 1956வரை முதல்வராக இருந்த திரு. பக்கிரிசாமி பிள்ளை இறந்ததை தொடர்ந்து திருகுபேர் பொறுப்பேற்ற தலைமையில் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அன்னாருக்கு வழங்கப்பட்டது.
1958 அக்டோபர் வரை பதவியில் இருந்தபோது அவரின் திருமலைராயன் பட்டினம் தெற்கு தொகுதி மக்கள் பலருக்கு அரசாங்க வேலை கிடைக்க உறுதுணையாக இருந்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக இருந்தார் 

டைரி எழுதும் பழக்கம் கொண்டவர் இவர், இவர் எழுதிய சில குறிப்புகள் நமக்குக் கிடைத்தன அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறோம் 👇

எனக்கு 9 வயது இருக்கும்போது மகாத்மா காந்திஜி அவர்கள் 16 பிப்ரவரி 1934 ல் காரைக்காலுக்கு அன்று கதர் டவுசர் கதர் மேல் சட்டை அணிந்து அவரை வழிபட்டேன், அன்று காந்திஜி அவர்கள் மேல் பற்று ஏற்பட்டு வாலாஜாபாத்தில் படிக்கும் போது அவரது பிறந்தநாளைக் கொண்டாடினோம்.

செங்கல்பட்டு அருகிலுள்ள ஆத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. 
அதில் நாங்கள் 50 பேர் தொண்டர்களாக சென்று தொண்டு செய்தோம் வாலாஜாபாத்தில் 8 ஆம் வகுப்பு வரைதான் பின்பு நாகை தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். அப்போது சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்த காலம் , நாகையில் உள்ள தேசியத் தலைவர்களை அறிமுகம் செய்து கொண்டு தேசியத்தில் அதிக கவனம் செலுத்தி பல போராட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி அவர்கள் மத்தியில் தேசிய உணர்வு உடையவன் என்று பெயர் எடுத்தேன்.

நாகை தாலுக்கா காங்கிரஸ் அரசியல் மாநாடு நடந்தது அதற்கு என்னையும் அழைத்தார்கள். நானும் மாநாட்டில் உரையாற்றினேன் அந்த அரசாங்கத்தைத் தாக்கிப் பேசினேன்.அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய என்னை காவல்துறை அதிகாரி என்னை அழைத்து எச்சரிக்கை செய்தார்  ஆங்கிலேய அரசை எதிர்த்து ஆகஸ்ட் 8 1942 ல் இந்தியா எங்கும் ஓரே கொந்தளிப்பு போராட்டம், அது சமயம் நாகையில் எங்கள் பள்ளியிலும் போராட்டம் நடத்தினோம். 

போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு என்று கோசமிட்டோம்.
நான் படித்து கொண்டிருக்கும்போது திருமணம் ஆனது, அதன் பிறகு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டேன் SSLC படித்தது பிரெஞ்ச் இந்தியப் பகுதி. இங்கு அரசியலில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டேன். அப்போது நகராட்சி தேர்தல் வந்தது. அதில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று நகராட்சியில் 3 வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேயர் மந்திரியாக இருந்தபடியால், 2 வது மேயர் காலாமாகி விட்டபடியாலும் பொறுப்புகளையும் எங்கள் வார்டில் உள்ளவர்களுடன் எல்லாப் பஞ்சாயத்து சபையில் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில் காலமாகிவிட்டார்கள். 

இந்நிலையில் எங்கள் கட்சித் தலைவர்கள் புதுவை இந்திய தாயகத்துடன் இணைய வேண்டும் என்று முடிவு செய்து தீவிரமாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். 
அதன் பேரில் புதுவை ராஜ்ஜியத்தில் உள்ள எல்லா நகராட்சி சபையிலும் ஏகமனதாக உறுப்பினர்கள் பிரெஞ்ச் இந்தியா இந்திய யூனியனுடன் இணைய வேண்டும் என்று தீர்மானம் போட்டு தீர்மானத்தின் முடிவை பிரெஞ்ச் அரசுக்கும் இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தினார்கள். 

அதனால் ஆத்திரம் அடைந்த பிரெஞ்ச் அதிகாரிகள் எங்களை எல்லாம் மிரட்டி பயம் ஏற்படுத்தினார்கள் முதல் மேயர் உள்ள அதனால் பல உறுப்பினர்கள் பிரெஞ்ச் பிரதேசத்தை விட்டு இந்தியப் பகுதியில் தலைமறைவாக இருக்க நேர்ந்தது. இதற்கிடையில் நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை பிரெஞ்ச் இந்தியாவிலிருந்து விடுதலை செய்து தனிராஜ்ஜியமாக பராமரிக்கப்பட்டது. இதனால் பிரெஞ்ச் அரசாங்கமும் இந்திய அரசும் சேர்ந்து ஓர் முடிவுக்கு வந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி அதன்படி நடப்பது என்று முடிவு செய்யபட்டு வாக்கெடுப்பு புதுவைக்கும் விழுப்புரத்திற்கும் இடையில் ஓர் பொதுவான ஊரான கீழூரில் நடத்துவது என முடிவானது அதன்படி நடந்த வாக்கெடுப்பில் 8 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்திய யூனியனுடன் இணைய வேண்டும் என்று வாக்களித்தார்கள் உடன்பாடு ஏற்பட்டு 1955 நவம்பர் ம் தேதி பிரெஞ்ச் இந்தியா இந்திய யூனியனுடன் இணைந்தது.

அப்போது கொம்யூன் பஞ்சாயத்து தலைவராக நான் இருந்தபடியால் பிரெஞ்ச் கொடியை இறக்கிவிட்டு இந்திய யூனியன் கொடியை ஏற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதன்பிறகு பொதுத் தேர்தல் வந்தது, அந்தத் தேர்தலில் நான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு MLA-வாக சட்டசபைக்கு சென்றேன். 

சுகாதாரம் கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டேன். டெல்லியில் அகில இந்திய கூட்டுறவு மாநாடு பாரதப் பிரதமர் பண்டித அவர்களின் தலைமையில் நடந்தது. அதற்கு புதுவையிலிருந்து நான் முதன்முதலாக புதுடெல்லி செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஜவஹர்லால் நேரு புதுடெல்லியில் சுகாதாரத்துறை காரியதரிசியை நேரில் சந்தித்து புதுவை இராஜ்ஜியத்திற்கு 6 ஆரம்ப சுகாதார மையங்கள் தேவை என்று எடுத்துக் கூறினேன். ஊர் சென்றதும் கடிதம் செய்கின்றேன் என்று கூறினேன். அதன்படி கடிதம் எழுதினேன், 6 சுகாதார மையங்கள் கிடைத்தது.அதேபோல் புதுவையில் மருத்துவக் கல்லூரி பெரிய அளவில் கட்டுவதற்கு மத்திய அரசு இடம் தேர்ந்தெடுக்க உத்தரவு போட்டது. அப்போதைய புதுவை தலைமைச் செயலாளர் முடிவு செய்து இப்போது புதுவையில் உள்ள புது பஸ்நிலையத்தைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினார் நான் கோரிமேட்டைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினேன். 

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து நான் தெரிவிக்கும் இடத்தில்தான் கட்டவேண்டும் என்று எழுதினார்.
நான் அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வதில் எனக்கும் தலைமைச் செயலாளருக்கும் ஒத்த கருத்து ஏற்படவில்லை, ஆதலால் தாங்கள் தயவுசெய்து அங்கிருந்து ஓர் பிரதிநிதியை அனுப்பி வையுங்கள்.அவரிடம் தலைமைச் செயலாளர் தெரிவிக்கும் இடம் மற்றும் நான் தெரிவிக்கும் இடத்தையும் பார்க்கட்டும், அதில் அவர்கள் எந்த இடம் நல்லது என்று தீர்மானிக்கின்றார்களோ அதனை நான் எற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன்தையும் மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் லெப்டிணன்ட் கார்னல் திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவரை அனுப்பி வைத்தார்கள் நான் தலைமைச் செயலாளரிடம் தாங்கள் குறிப்பிட்டுள்ள இடத்தை முதலில் காட்டி விளக்கம் கூறுங்கள் பின்பு நான் குறிப்பிட்ட இடத்தைக் காட்டி விளக்கம் கூறுகின்றேன் என்றேன், அதன்படி இரண்டு இடங்களையும் பார்வையிட்டார்.

நான் கோரிமேட்டில் ஏற்கனவே T.B, மருத்துவமனை இருக்கின்றது அதன் அருகில் தேவையான தரிசு நிலம் சுமார் 100 ஏக்கர் மேல் இருக்கின்றது அதுவும் மேட்டுப்பகுதி, இந்த இடத்தை சமன் செய்து கட்டினால் செலவும் குறைவு. 


பிரதமர் நேரு அவர்களுடன்

மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டுமானால் அதற்கு நிறைய இடம் இருக்கின்றது என்று எடுத்துக் கூறினேன். தலைமைச் செயலாளர் காட்டிய இடம் பள்ளம் தாழ்வானது, மழை பெய்தால் 4 அடிக்கு தண்ணீர் நிற்கும், மேலும் நமக்குத் தேவையான ஏக்கர் நிலம் கிடைக்காது என்றும் இதனை மேடு செய்யவே பல இலட்சங்கள் செலவாகும் எடுத்துக் கூறினேன். மத்தியில் இருந்து வந்தவர்கள் இரண்டு இடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து பல வழிகளில் கோரிமேடு மிகவும் பொருத்தமான இடம் என்று கூறி இந்த இடத்தில்தான் ஜிப்மர் மருத்துவமனை அமைய வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். இன்று அந்த இடம் புதுவையில் முக்கிய பகுதியாகவும், பிரபல நகராகவும் இருந்து வருவது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. பின் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டு அதன் சட்டசபை கலைக்கப்பட்டது.

நான் கொம்யூன் நகராட்சித் தலைவராக இருக்கும் போதே திருநள்ளாறு ஸ்ரீ தர்பாணேஸ்வர் கோவில் அறங்காவலர் குழுவில் செயலாளராக புதுவை அரசாங்கம் என்னை நியமித்தது.பின்னர் சட்டசபை தேர்தல் வந்தது, அதில் எதிர்ப்பின்றி தேர்த்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை கூட்டுறவுத்துறைக்கு மற்றும் அமைச்சர் ஆனேன்.திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்பாள் ராஜ சோழிஸ்வரர் தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு அதில் அரசாங்கம் என்னை தலைவராக நியமித்தது. அதுமுதல் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் மடத்தில் உள்ள கமிட்டியில் நானும் ஒருவனாகப் பங்கேற்று பல பூசைகளை வாரார் ஒத்துழைப்புடன் செய்து இருக்கின்றேன். அது மட்டுமில்லாமல் அம்மன் அருள் கொண்டு ஒத்துழைப்போடும் மடத்தைப் புதுப்பித்து விமானம் திருக்குடமுழுக்கும் செய்தோம். எல்லோருடைய ஒத்துழைப்போடும் 3வது குடமுழுக்குத் தலைவராக இருந்து பொதுமக்கள் ஒத்துழைப்போடு குடமுழுக்கு நடத்தப்பட்டது.எனக்கும் பெருமை அளிக்கக் கூடியது என்று பல்வேறு நிகழ்வுகள் குறித்து அவர் குறித்து வைத்துள்ளார்.இவரின் சாதனையாக பார்க்கப்படுவது நேரு அவர்களிடமும் இந்திரா காந்தி அவர்களிடமும் நேரடி தொடர்பு உள்ளவர், அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமர் வலியுறுத்தி புதுவையில் ஜிப்மர் மருத்துமனை கொண்டுவந்ததில் இவரின் பங்களிப்பு மகத்தானது. இன்றும் அதற்கு அங்கிருக்கும் கல்வெட்டு சாட்சி நேரு அவர்களை வாழ்நாள் முழுவதும் இவர் சாதாரணமான மனிதராக ஒரு பகட்டும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்தார். எந்த ஒரு முதல்வரோ அல்லது அமைச்சரோ திருமலைராயன்பட்டினம் வந்தால் இவரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்காமல் போனது இல்லை அன்னார் அவர்கள் 23 ஜூன் 

தான் செய்த பணிகளைப் பற்றி தெட்சிணாமூர்த்தி செங்குந்தர் அவர்கள்


சுயசரிதை போல் எழுதிவைத்த டைரிக் குறிப்பின் ஒரு பக்கம் 
 

23, ஜூன் மாதம் 2015 அன்று தமது 91ஆம் அகவையில் இயற்கை எய்தினார் நமக்காக உழைத்தவரை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர்கள் எம்.பி.நாச்சிமுத்து, ஜெ.சுத்தானந்தன் ஆ.இராஜவேலு,  மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் V.P.சிவக்கொழுந்து வி.பி.இராமலிங்கம், ப.இராஜாக் கண்ணு, க.தனகோடி ஆகியோர் சோ.தட்சணாமூர்த்தி அவர்களிடம் ஆசி பெற்றுள்ளனர்.


காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களுடன்

Post a Comment

0Comments
Post a Comment (0)