வானவன்மாதேவி கனகசபை முதலியார்

0

கனகசபை முதலியார் (20- நூ) ஊர்: செங்கற்பட்டு மாவட்டம் வானவன்மாதேவி, தந்தை: அண்ணாமலை முதலியார். தாய்: விசாலாட்சி அம்மாள்; செங்குந்தர். வாழ்ந்தகாலம்: கி. பி. 1888-1951 

இவர் சென்னைக்குச் சென்று துணை இந்து யூனியன் பள்ளியிலும் பிறகு எஸ். பி. சி. உயர் நிலைப்பள்ளியிலும் கற்று  1907ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்றார்.

 1908ஆம் ஆண்டில் அஞ்சல் பரிவில் சேர்ந்து 1943ஆம் ஆண்டுவரை 35 ஆண்டுகள் வேலை பார்த்தார். அலுவலில் இருந்தபோது வேல் முதலியார் என்பவரிடம் அட்டபிரபந்தம், நைடதம் முதலியவற்றைக் கற்றார். பின்னர் வா. மகாதேவ முதலியார். 

வீரசுப்பைய ஞானதேசிகர் முதலியவரிடம் இலக்கண இலக்கியங்களையும், தர்ம சாஸ்திர நூல்களையும் கற்றார். 1939ஆம் ஆண்டில் சென்னை நகரில் தமிழர் நல்வாழ்க்கைக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தித் தொண்டாற்றினார், 1948ஆம் ஆண்டில் இவரது மணவிழா நடந்தது. 1951ஆம் ஆண்டில் ஜனவரித் திங்கள் 25ஆம் நாள் இவர் காலமானார். 

இவர் எழுதிய நூல்: கோடம்பாக்கம் புலிச்சரப்பத்து. கோடம்பாக்கம் வடபழனிப். பத்து, தணிகாசலப்பத்து, வெண்குன்றப்பத்து, வானவன்மா- தேவி வானசுந்தரர் பத்து, வானவன் மாதேவி பெரிய. நாயகியம்மை பத்து

Post a Comment

0Comments
Post a Comment (0)