Coimbatore K.P. Jaganath20 ஆம் நூற்றாண்டு வை கந்தசாமி முதலியார் தென்னாற்காடு மாவட்டம் வண்டிப்பாளையம்.
தந்தை: வைத்திலிங்க முதலியார்; தாய்: சுந்தராம்பாள்.
பிறப்பு: கி. பி. 1877.
இவர் 1895ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார், 1899-ஆம் ஆண்டில் சைதாப்பேட்டை போதனா முறைப்பாடசாலையில் பயின்று தேர்வு பெற்றார். ஞானியார் சுவாமிகளிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கணக் கற்ருர். ஞானியார் வாணிவிலாச சபையில் கந்தபுராணம், சிவஞான போதம் முதலிய நூல்களைப் பற்றிச் சொற்பொழிவு செய்து உள்ளார்: இராசமன்னார்குடி பிண்ட்லே கல்லூரியைச் சேர்ந்த தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகவும், செயிண்ட் சோசப் கல்லூரியில் இளைஞ' கட்கு ஆங்கில ஆசிரியராகவும், அதே கல்லூரியில் தமிழாசிரியாகவும் பணியாற்றியுள்ளார்.