தமிழறிஞர் கு. மு. அண்ணல் தங்கோ முதலியார்

0

 

(12.04.1904 - 04.01.1974)
செங்குந்தர் கைக்கோள முதலியார்   
         ⚜️குலத் தோன்றல்⚜️
தூய தமிழ்க் காவலர், தனித்தமிழ் அறிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும்
கு. மு. அண்ணல் தங்கோ முதலியார்  இவர் ஒரு ஆவார்.

பிறப்பு:
இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 
செங்குந்தர் கைக்கோளர் குடும்பத்தில் முருகப்ப முதலியார் - மாணிக்கம்மள் தம்பதியருக்கு மகனாக ஏப்ரல் 12, 1904-இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘சுவாமிநாதன் முதலியார்’. 
தொடக்கக்கல்வி மட்டுமே படித்த இவர், தனது சுயமுயற்சியால் தமிழ் மற்றும் பலமொழிகளில் புலமை பெற்றார்.

சுதந்திர் போராட்டம்:
இவர் 1918ல் காங்கிரசில் சேர்ந்தார். 1923ல் கள்ளுக்கடை மறியல், 1925ல் வைக்கம் போராட்டம், 1927ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில்:
1936ல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். 1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’ என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார்.

உலகத்தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை:
வேலூரில் 1937ல் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938ல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார்.

திருக்குறள் நெறி தமிழ்த்திருமணம்:
1927ல் ‘திருக்குறள்’ நெறி தமிழ்த் திருமணத்தை’ அறிமுகப்படுத்தி குடியாத்தம் சிவமணி அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு தமிழர் தங்கோ (பிறப்பு 21-06-1944) மகன் பிறந்தார்.
தமிழ் நிலம் இதழ்தொகு
1942ல் ‘தமிழ் நிலம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

படைப்புகள்
நடிகர் சிவாஜிகணேசனைத் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ படத்திலும், ‘பெற்றமனம்’, பசியின் கொடுமை’, கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:
தமிழ்மகள் தந்த செய்தி அல்லது சிறையில் நான் கண்ட கனவு (1944) 

இவர் எழுதிய முக்கிய நூல்கள்
1.அறிவுப்பா (அ) என் உள்ளக் கிழவி சொல்லிய சொல்
2.தமிழ்மகள் தந்த செய்தி (அ) சிறையில் யான் கண்ட கனவு
3.அண்ணல் முத்தம்மாள் பாட்டு (தமிழர் எழுச்சிக்கான
4.தீண்டாமையை எதிர்த்து போர் முரசுப் பாடல்)
5.மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?
6.நூற்றுக்கு நூறு வெற்றிக் காங்கிரசு வெற்றித் தமிழ்மறவர்
7.தேர்தல் போர் முரசுப் பாடல்கள்
8.முருகன் தந்த தேன் கனிகள்

மறைவு
வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு.அண்ணல்தங்கோ சனவரி 4, 1974ல் தேதி இறந்தார்.
நாட்டுடமையாக்கம்
கு.மு.அண்ணல்தங்கோவை கவுரவிக்கும் வகையில் அவருடைய படைப்புக்களை நாட்டுடமை ஆக்கினார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி.


அண்ணல் தங்கோ முதலியார் பற்றிய (YouTube video) காணொளிகள் 👇








கு.மு.அண்ணல்தங்கோ, அவர்கள் சுதந்திர போராட்டவீரர், பராசக்தி படத்தில் காகா.....கா பாடல் எழுதியவர், இந்திய வரலாற்றை அடிக்கடி நண்பர்கள், உறவினர்கள் இடத்தில்  கூறியதை நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது பெரியப்பா முருகேச செங்குந்தர், அவர்கள் வீட்டில் தூய தமிழில் பேசியதை கேட்டுள்ளேன்.சாப்பாட்டில் பேசப்படும், ரசம் என்ற வார்த்தைக்கு மிளகு நீர் என்று சொல்லியதை இன்றளவும் மறக்க முடியாது.இவர் ஆரணி, சைதாப்பேட்டை, சோலை குடும்பத்தின் சம்மந்தி, S.S.குப்புசாமி அவர்களின் மூத்தமகன் கு.இளையபெருமாள் அவர்களுக்கு இவரது மகள் தமிழரசியை திருமணம் செய்து வைத்துள்ளார்.தவிர தேவிகாபுரம், ஜெகன்னாதன், அவர்களுக்கு தனது இரண்டாவது மகள் நாவுக்கரசி என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.


மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.





Post a Comment

0Comments
Post a Comment (0)