காஞ்சி நாகலிங்க முதலியார்

0

செங்குந்தர் கைக்கோள முதலியார்

⚜️குலத்தோன்றல்⚜️

பல தமிழ் நூல்களையும் பல தமிழ் அகராதிகளையும் எழுதிய தமிழறிஞர், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் நிறுவனர், ஒரு வருடமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் செங்குந்தமித்திரன் மாத இதழின் நிறுவனர்

வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முனிவர் 




                   (09.10.1894 - 09.07.1950)
பிறப்பு
முனிவர் அவர்கள் 1864 ஆம் ஆண்டில் ஐப்பசித் திங்கள் 8-ம் நாள் காஞ்சீபுரத்தையடுத்த ஏகனாம் பேட்டையில் பிறந்தார். அவரது தகப்பனார் வாலாஜாபாத் மிலிடரி பாடசாலையில் ஆசிரியராக இருந்த சரவணப்பெருமாள் முதலியார், தாயார் மனோன்மணி அம்மையார். 

வாழ்க்கை
முனிவர் தமது 5-ம் வயதில் தமது தந்தையின் மாணவர் கச்சபாலய தேசிகரிடம் கல்வி பயில ஆரம்பித்தார், காஞ்சி நாகல பின்னர் தமது தகப்பனார் இறந்து விடவே அண்மையில் அய்யம் பேட்டையிலிருந்த தமது பாட்டியார் வீட்டிலிருந்து கொண்டு வள்ளுவப் பாக்கம் சீனிவாச முதலியாரிடம் படித்து வந்தார். பன்னிரண்டாம் ஆண்டில் முனிவர் நம் குலத்தொழிலாகிய நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை கமிசேரியட் ஆபீஸ் மானேஜராக இருந்த (இரங்கூன் முருகேச முதலியார் பேரன்) ஐயம்பேட்டை பஞ்சாட்சா முதலியாரால் சென் னைக்கு அழைக்கப்பட்டுப் பின்னர் சென்னையிலே தங்கி விட்டார். 

சென்னையில் இவரை வளர்த்தவர் செங்குந்த மித்திரனின் முன்னாள் ஆசிரியர் த.சண்முகசுந்தர முதலியார் அவர்களது பாட்டனார் புஜங்கராய முதலியார். 

புஜங்கராய முதலியாரின் மனைவி யும் முனிவரின் தாயாரும் உடன் பிறந்தவர்கள், சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளாக ஆங்கிலம் கற்று வரும் சண்முகசுந்தர முதலியார் குடும்பத் திலிருந்து வந்த முனிவருக்கு ஆங்கிலம் கற்க பல வசதிகளிருந்தும் முனிவர் அவர்கள் தமிழையே விரும்பி, அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் அவரிடம் சைவபுராணங்கள் திருக்குறள் முதலிய நூல்களையும் கயிலை சண் முகம் பிள்ளையிடம் இராமாயணமும் ராயபுரம் ஜக்காராவ் முதலியாரிடம் நன்னூலும் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளிடம் (பிற்காலத்தில் கருவாடுதுறை ஆதினத்துப் பட்டம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்) சிவதத்துவ விவேகமும், பயின்றார். 

 காஞ்சிபுரம் உபய வேதாந்தம் முத்துக்கச்சபேஸ்வர சிவாச்சாரிய ஸ்வாமிகளிடம், 21ம் வயதில் சமய விசேட தீக்கைகளும் 25ம் வயதில் திரு வரமத்தூர் தண்டபாணி சுவாமிகளிடம் கௌமார தீக்கையும் பெற்றார். முனிவர் அவர்களிடம் 20ம் வயதில் சென்னையில் முதன் முதலாகத் திருமழிசை தணிகாசல முதலியார் வீட்டில் தோற்றுவிக்கப் பெற்ற சைவ சித்தாந்த சபை கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று வருவார், பின்னர் சென்னை சிவனடியார் கூட்டத்தை ஆரம்பிப்பதில் முனிவரும் பெரும் பங்கு கொண்டார். சென்னை அருணாசலேஸ்வரர் ஆலய மண்டபத்தில் நிறுவப்பட்டிருந்த மெய்க்கண்ட சத்தான சபையின் துணைத் தலைவராக பல ஆண்டு களிருந்தார். இச்சபையின் ஆதரவில் தேவார பாடசாலை ஒன்றையும் நடத்தி வந்தார். சைவசித்தாந்த போதனை செய்வதற்காக முனிவர் ஏற்படுத்திய மெய்கண்டான் கல்லூரி யையும் முனிவர் இம் மண்ட பத்திலேயே நடத்தி வந்தார். அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள அணி அண்ணாமலைக் கோயிலின் உஷக்கால பூசையை முனிவர் நடத்தி வந்ததுடன் அக்கோயிலின் கோபுரத் திருப்பணி வேலையிலும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டார். 

முனிவர் அவர்கள் சென்னையில் அருணாசலேஸ்வரர் கோயில் தெருவில் அச்சகம் ஒன்று நிறுவி அதன் மூலம் பல தமிழ் நூல்களை வெளியிட்டார். முனிவரது காலத்திலிருந்த தமிழ் அறிஞர்கள் அனைவரும் முனிவருக்குத் தெரிந்தவர்களே, மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முனிவர் சிவ ஞானபோத சிற்றுரை யினை வெளியிட்டார். 

சிவஞான போதம் உள்ளிட்ட சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினையும் உரையுடன் ஒரு தொகுதியாகச் சேர்த்து திருவாவடுதுறை ஆதீன மரபின்படி மெய்கண்ட சாத்திரம் என்ற பெயர் தந்து முனிவர் வெளியிட்டார். 

சைவ சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான வேறெந்த நூல் இதுவரையும் வெளிவரவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்நூலை வெளியிட்ட காரணத்தினால் மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர், முனிவருக்கு 'மெய் கண்ட சாத்திரப் பிரசாரகர் என்ற பட்டத்தினை வழங்கினார். 

திருப்பணந்தாள் காசி மடாலயத் திற்கும் தொடர்புண்டு, மடாலயத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சொக்க லிங்கத் தம்பிரான் உதவி கொண்டு 'திருவுந்தியார். 'திருக்களிற்றுப் படியார்' என்னும் நூல்களை வெளியிட்டார். மேற் சொன்ன நூற்கள் தவிர முனிவர் திருத்தணிகை வண்ண மஞ்சரி, தென் கடம்பன் பதிற்றுப் பத்தந்தாதி, வடபழனி மயிலேறு பெருமாள் மாலை இரட்டை மணி மாலை, திருவாமாத்தூர் வண்ணங் கள், திருவெறும்பியூர் புராணம் இவைகளை இயற்றியுள்ளார். 

தாயுமானவர், பன்னிருதிருமுறை, காஞ்சி புராணம், காஞ்சி கட்டளைக் கலித்துறை புராணம், திருப்புகழ். சுந்தரர் தேவாரம் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காரனேஷன் தமிழ் அகராதி முதலிய பல புத்தகங்களை முனிவர் அச்சிட்டு வெளியிட்டார். முனிவர் அவர்கள் காஞ்சீபுரம் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆதீனத்தில் 1926ம் ஆண்டுக்கு முன்னர் துறவறம் பெற்றார். 

துறவறத்திற்குப் பின்னர் காஞ்சி நாகலிங்க முதலியார் என்னும் பெயர் மருவி காஞ்சி நாகலிங்க முனிவர் என அழைக்கப்பட்டார். முனிவர் அவர்களு காஞ்சீபுரம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் அவர்களால் "கச்சியடிகள்' என்ற பட்டமும், திருவாவடுதுறை ஆதீனம் மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண சுவாமிகள் அவர்களால் "மெய்கண்ட சாத்திரப்பிரசாரகர்” என்ற பட்டமும் இலங்கை ஸ்ரீ பொன்னம்பல பிள்ளையவர்களால் 'காஞ்சி மகாநாட்டு வித்யாபிரசாரகர்' என்ற பட்டமும் திருவாமாத்தூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் அவர்களால் 'வண்ணக்களஞ்சியம்' என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. முனிவர் அவர்கள் இளமை முதல் தமது இறுதி நாள் வரையில் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தார்.

 பண்டை நாளில் மகாநாடு. கிளை நாடு என்ற திட்டத்தின் கீழ் தென்னாடு முழுவதும் பரவியிருந்த செங்குந்தர்களை ஒன்றுபடுத்திய திட்டம் நாளடைவில் மறைந்து ஆங்காங்குள்ள செங்குந்தர்கள் ஒரே இனத்தவர் என்ற உணர்ச்சி யற்றுவரும் நாளில் முனிவர் அவர்கள் தற்காலத்திற் கேற்றவாறு திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் செங்குந்தர் இயக்கத்தை ஆரம்பித்தார். இயக்கத்திற்கு ஆதரவாக 1921ம் ஆண்டிலேயே 'செங்குத்தன்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். பின்னர் செங்குந்தனின் பெயரை மாற்றி செங்குந்த மித்திரன் என்ற பெயரில் பத்திரிகையை முதன் முதலாக வெளியிட்டார். செங்குந்தன் பத்திரிகை ஆரம்பிப் பதற்கு முன்னாலேயே 9-6-1918ல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிறுவு வதற்கும் மாகாணம் எங்கும் உள்ள செங்குந்தர்கள் மகாநாடு கூட்டு விப்பதற்கும் சென்னை மைலாப்பூர் வெள்ளீ ஸ்வரர் ஆலயத்தில் செங்குந்தப் பிரமுகர்கள் கூட்டம் ஒன்றை முனிவர் கூட்டினார். 

கூட்டத்திற்கு போஸ்டல் ஆடிட் ஆபிஸ் வேலு முதலியார், பிங்கர் பிரிண்ட் ஆபீஸ் மானேஜர் குழந்தை வேலு முதலியார், மா.அ.கனகசபை முதலியார், சுவாமி உருத்திர கோட்டீஸ்வரர் முதலிய பிரமுகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் சங்கம் நிறுவப்பெற்று மகா நாட்டிற்கான வரவேற்புக்குழுவும் அமைக்கப்பட்டது. இடையில் காஞ்சீபுரம் ம.த.சாமிநாத முதலியார். பி.செ.முருகேச முதலியார், சென்னை பச்சையப்பன் கல்லூரி பிரின்ஸி பாலும், கணிதப் பேராசிரியருமான S.P.சிங்காரவேலு முதலியார் B.A.LIT., இவர்கள் முயற்சியால் காஞ்சீபுரம் கச்சபேசர் ஆலயத்திலும் ஓர் கூட்டம் கூடி சமூக முன்னேற்றத்தைப்பற்றி ஆலோசித்தது. பின்னர் கொல்லங் கோட்டில் பெரிய வீடு முத்துக் குமாரசாமி முதலியார் முயற்சியால் பழனி பாத்திரக்கடை குழந்தைவேலு முதலியார் (K.ஆறுமுக முதலியாரின் தந்தை) தலைமையில் ஒரு மகாநாடு கூடிற்று. அடுத்தாற்போல் நாகப் பட்டினத்தையடுத்த பொருள்வைத்த சேரியில் நாகை நல்லமுத்து முதலியார் தலைமையில் ஒரு மகாநாடு கூடிற்று. இம்மகாநாட்டிற்கு முனிவரும் சென்றிருந்தார். சென்னையில் சமூக நன்மைக்காக உழைக்கக்கூடிய சங்கம் ன்றை நிறுவி பத்திரிக்கை ஒன்றையும் நடத்த வேண்டுமென தீர்மானித்து 1927ல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவி, இப்போது தொடர்ந்து நடைபெறும் இச்செங்குந்த மித்திரன் பத்திரிகை யையும் ஆரம்பித்தார். 1921ல் செங்குத்தன் என்று ஆரம்பித்து பின்னர் செங்குந்த மித்திரன் என்ற பெயரில் வார இதழாக வந்து சில மாதங்கள் வந்தது மித்திரனின் ஆசிரியராகிய முனிவரே 1927ல் ஆரம்பிக்கப்பட்ட செங்குந்த மித்திரனுக்கும் முதன் முதலாக ஆசிரியராக அமர்ந்தார். தாம் வித்திட்ட செங்குந்தர் இயக்கமும் செங்குந்த மித்திரனும் சில மாதங் களுக்குள் நன்கு வளர்ச்சியடை வதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து முனிவர் அவர்கள் தமது ஆசிரியர் பதவியை தமது சிறிய தாயின் பேரன் ம.சண்முகசுந்தர முதலியார் M.A.L.T.. அவர்களிடம் ஒப்படைத்து விட்டு சிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டபோதிலும், தமது மரணத்தருவாய் வரையிலும் நமது இயக்கத்தில் மிக்க பர்வம் கொண்டிருந்தார். 1918ல் முனிவர் அவர்களால் காஞ்சிபுரம் ம.த.சாமிநாத முதலியார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நம் இயக்கம் 1927ம் ஆண்டு முதல் நிரந்தரமாக இருந்து கொண்டு சமூகசேவை செய்து வருகின்றது. இல்லறத்தைத் துறந்தும் சமூகத்தைத் துறவாது, உறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த 

மறைவு 
செங்குந்தர் களை ஒன்றுதிரட்டி நமது தலைச் சங்கத்தையும் மித்திரனையும் தோற்றுவித்த முனிவர் 9-7-1950ம் நாள் ஞாயிறன்று காலை முக்தி அடைந்தார். முனிவர் அவர்கள் ஒழுக்கத்திற்கும் தூய்மைக்கும் உறைவிடம்.

இவர் எழுதிய காமாட்சி கல்யாணம் என்ற நூலின் மின் வடிவம்👇


இவரின் வாழ்க்கை வரலாறு, இவரின் கூட்டம் பெயர் குலதெய்வம் பெயர் மற்றும் போட்டோக்கள் போன்ற தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு What's app எண்ணுக்கு அனுப்பவும்  78269 80901

Post a Comment

0Comments
Post a Comment (0)