⚜️குலத்தேன்றல்⚜️
குறும்பு நாடு(ஈரோடு - திருப்பூர் மாவட்ட பகுதி) சிற்றரசர் வம்சாவளி
#வீர_சந்திர_முதலியார் வரலாறு
இவர் 1800 களில் வாழ்ந்தவர்.
தெரிந்த கைக்கோளர் படையில் ஒரு பிரிவினர் கொங்கு மண்டலம் குறும்பு நாட்டை பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர்.
பிற்காலத்தில் பிரிட்டீஷ் ஆட்சி வந்த பின்பும் இவர்களுக்கே இங்த பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமை இருந்தது.
இந்த வீர சந்திர முதலியார் செல்வாக்கும் அதிகாரமும் சேர்ந்து விளங்கிய பெருந்தனக் குடியை சேர்ந்தவர் மற்றும் அவர் மிட்டா மிராசுதார் என்று ஆங்கிலேய ஆவணத்தில் உள்ளது.
இவர் பல கலைகளில் கைத்தேர்ந்தவர் என்று குறிப்பு உள்ளது.
இவரின் சிலை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் உள்ளது.
ஒவ்வொறு ஆண்டும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று #கொண்டத்துக்_காளியம்மன் கோவிலில் இவரின் நேரடி வழிவந்த குன்னத்தூரார் கோத்திரம் பங்காளிகள் சிறப்பு அபிசேக ஆராதனை கட்டளை செய்து வருகிறார்கள்.
இவர் குடும்பம் பழனி முருகன் மற்றும் பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மனை குலதெய்வமாக வணங்கினர்.
இவர் நம் சமூகத்தில் உள்ள #குன்னத்தூரார்_கோத்திரம்/ கூட்டம் பங்காளிகளை சேர்ந்தவர்.