சத்தியமங்கலம் ஜி.பி. வெங்கிடு exMLA

0
அரசியல்
திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுக்க வேர் பரப்பிய போது அதில் தீவிர தொண்டராக பணியாற்றி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசி ரியர் அன்பழகன், எல்லோராலும் பாராட்டு பெற்றவர், பெரியாரின் பெருந்தொண்டர் என்ற பெயரோடு பயணித் தவர் மொழிப்போர் தியாகி கோபி வெங்கிடு, உடல் நலம் கோபி வெங்கிடு சரியில்லாமல் இருந்த அவருக்கு கொரோளா உறுதி படுத்தப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி செப்டம்பர் 21 அன்று காலமானார் 83 வயது வெங்கிடு. 1992ல் 'ஜெ' தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி. நமது நக்கீரன் இதழ்மீது பல அடக்கு முறை களை ஏவியது அரசு, கடைகளில் நக்கீரன் விற்கக் கூடாது என கடைக்காரர்களை அந்தந்த மாவட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் கூலிப்படை மூலம் மிரட்டினார்கள். பல இடங்களில் நக்கீரன் இதழ் களை மொத்தமாக பறித்து தீ வைத்தனர். கோபிசெட்டிபாளையத்திலும் எல்.ஏ! N.தி.மு.க.வினர், எந்தக் கடைகளிலும் நக்கீரன் இதழ் விற்க கூடாது எனக் கடைக் காரர்களை மிரட்டி இதழ் களை பறித்து தீ வைத்தனர். ஜி.பி.வெங்கிடு அவர்கள் கோபி பேருந்து நிலையத்தை யடுத்த பெரியார் மைதானம் எதிரில் தங்கம் தேனீரகம் என்ற ட கடையும் அதில் புத்தக விற்பனையுடன் கூடிய பெட்டிக்கடையையும் நடத்தி வந்தார். கோபியில் எங்கும் நக்கீரன் இல்லாத போது இவர் கடையில் மட்டும் ஸ்டால் போஸ்டர்களுடன் நக்கீரன் விற்பனைக்கு இருந்தது. ஆளுந்தரப்பினர் மிரட்டினர். ஜிபி.வெங்கி டுவோ "எனது கடையில் நக்கீரன் விற்பனை செய் வேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்" என போர்க்குணத்துடன் பதில் கொடுத் தார். ஒரு கட்டத்தில், அ.தி.மு.கவினர் பெருங்கூட்ட மாசு வந்து, வெங்கிடுவின் தேனீர் கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அப் போதும் அசரவில்லை வெங்கிடு நொறுக்கப்பட்ட கடையில் இருந்தவாறே நக்கீரன் இதழை விற்பனை செய்தார். எந்த அ.தி.மு.கவினர் தனது கடையை அடித்து நொறுக்கினரோ, அதே அ.தி.மு.க.வின் வேட்பாளரான அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து 1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார் பெட்டிக்கடைக்கார ரான வெங்கிடு, வரலாறு படைத்த அந்தத் தேர்தல் முடிவுகளில் வெங்கிடு வெற்றி பெற்று எம் எல் ரவானார். சட்டமன்ற உறுப்பினரான பிறகும், மிகவும் எளிமையாக மக்களிடம் பழகினார். தொகுதியில் ஏராளமான நல திட்டங்கள் இவர் காலத்தில் செய்துள்ளார். அதன்பிறகும் பெட்டிக்கடையுடன் கூடிய தேநீரகத்தைத் தொடர்ந்து நடத்தினார்.





Post a Comment

0Comments
Post a Comment (0)