வள்ளல் துரையப்ப முதலியார் (புதுக்கரைப்புதூர் ஜமீன்தார்)

0

 


(19.12.1903 - 26.06.1988)

அன்றைய ஒன்றுபட்ட கோயம்புத்தூர்  மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் புதுகரைப்புதூர் என்ற கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் குலத்தை பெருநிலக்கிழார் சிவக்குழந்தை முதலியார் சாமியாத்தாள் தம்பதியருக்கு  மகனாக 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை இவருக்கு வைத்த பெயர் ஆறுமுக முதலியார். 

இவர் பிறந்த சில வருடங்களிலேயே இவர் தந்தை இறந்துவிட்டார். பள்ளிப்படிப்பை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து முடித்தார். பிற்காலத்தில் ரஜினி நடித்த அருணாசலம் படத்தில் வருவதைப் போலவே இவர் தந்தை இவரின்  சொத்துக்களை நேரடியாக  மகன் துரையப்பா முதலியாருக்கு எழுதி வைக்காமல். சிவக்குழந்தை முதலியாரின் நண்பர்கள் 2 பேரை பொறுப்பாளராக போட்டு துரையப்ப முதலியார் பணம், செல்வத்தின் மீதான ஆசை வெறுத்த பின்பே சொத்துக்களை  உபயோகிக்க முடியும் என்று உயில் எழுதிவிட்டார்.

சிவக்குழந்தை முதலியார் சாமியாத்தாள்

தந்தையின் எண்ணத்தை போலவே துரையப்பா முதலியார் தன் சொந்த காலில் நின்று பணம் செல்வத்தின் மீது ஆசைகளைத் துறந்து மக்களுக்கு சேவை செய்யு வேண்டும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டார். அதன் பிறகு குடும்ப சொத்து ஏறத்தாழ 1500 ஏக்கர் நிலம் இவர் பொறுப்புக்கு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடுவதும், கார் பந்தயம் விளையாடுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

வேதநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் வட்டத்தில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானையை  வரும் காலங்களில்  யானையை விரட்டி வேட்டையாடுவதற்கு ஆங்கிலேயே அரசாங்கமே துரையப்ப முதலியாரின் உதவியை நாடும். அந்த அளவுக்கு இவர் துப்பாக்கிச் சூட்டில் பயிற்சி பெற்றவர்.

பிரிட்டிஷ் காலத்தில் கொங்கு மண்டலத்தில் அதிகப்படியான துப்பாக்கி ஆயுதங்களை வைத்திருந்தது பொள்ளாச்சி ஊத்துக்குளி ஜமீன்தார் மற்றும் புதுக்கரைபுத்தூர்  துரையப்ப முதலியார் குடும்பமுமே ஆகும். சுதந்திரத்துக்கு பின்பு 

இந்திய அரசாங்கம் ஆயுதக் கட்டுப்பாடு சட்டத்தின் பின்பு இவர் குடும்பத்தினர் அரசாங்கத்திடம் ஒப்படைத்த  துப்பாக்கிகளே  இதற்கு சாட்சி.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட துரையப்ப முதலியார் பல கோவில்களுக்கு திருப்பணி செய்துள்ளார்.

துரையப்ப முதலியாரின் முன்னோர்கள் கோபிசெட்டிபாளையம் கடைவீதி, துரையப்பா வணிகவாகத்தில் கட்டிய குழந்தை வேலாயுத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை இவர் காலத்தில் சிறப்பாக திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து நன்றாக பராமரித்தார். இவருக்கு பின்பும் இவர் குடும்பம் இந்த கோயிலை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

எம்ஜிஆரை போலவே துரையப்பா முதலியார் வீட்டுக்கு எத்தனை பேர் சென்றாலும்  சாப்பாடு விருந்து அளிக்காமல் வெளியே அனுப்ப மாட்டார்.

பிரிட்டிஷ் காலத்தில் கொடிவேரி அணையில் இருக்கும் வாய்க்கால் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள  பாசன வசதி செய்யும் சிறிய வாய்க்காலாக இருந்து. இந்த கொடிவேரி அணையில் இருந்து புதிதாக பெரிய நீண்ட வாய்க்கால் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற கோரிக்கை எழுந்தது. இத்திட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டு நிதியுதவி வேண்டிய போது,  விவசாயிகள் நலனை கருத்தில் கொண்ட துரையப்ப முதலியார் புதிதாக கொடிவேரி வாய்க்கால் கட்டுவதற்கு ஆங்கிலேயே அரசிடம் தானாக முன்வந்து தனக்கு சொந்தமான 300 தங்க காசுகளை தானமாக வழங்கினார்.

இவர் செய்த இந்த காரணத்தால் 50 கிலோ மீட்டர்களுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், விவசாயிகள் பயன் பெற்றார்கள்.

கோபிசெட்டிப்பாளையத்தில், முஸ்லிம் மக்களுக்கு நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு திருவிழா நடத்துவதற்கு துரையப்ப முதலியார் தனக்கு சொந்தமான குதிரை லாயம் (குதிரை கட்டும் இடம்) முஸ்லீம் மக்களுக்கு வழங்கினார்.

இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ரெஜிஸ்டர் அலுவலகத்துக்கு அரை ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார்.

புதுக்கரைபுத்தூரில் செயல்பட்டுவரும் கூட்டுறவு சொசைட்டி, பால்வாடி பள்ளி போன்றவற்றை கட்டுவதற்கு இடம் தந்து புதுக்கரைபுத்தூர் கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

துரையப்ப முதலியாரின் நண்பர் பழையகோட்டை பட்டக்காரர் கவுண்டர்  ஊரில் மழையில்லாமல் ஏற்பட்ட வறட்சியின் காரணத்தால் பழையகோட்டை பட்டக்காரர் சொந்தமான 1500 கால்நடைகளை புதுகரைப்புதூர்க்கு கொண்டு வந்து சிறப்பாக பராமரித்து பழைய கோட்டை பட்டக்காரர் ஊரில் வறட்சி நிலை போய் நீர்வளம் பெருகும் வரை கால்நடைகளை கவனித்து அதன் பின்பு பழையகோட்டை தோட்டத்துக்கு அனுப்பினார்.

துரையப்பா முதலியாரின் தந்தை சிவகுழந்தை முதலியாரின் நண்பர் வெள்ளாளக் கவுண்டர் ஒருவர் கோபி பகுதியில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசிடம் டெண்டர் எடுத்தார் ஆனால் ஒப்பந்தத்தின்படி அவரால் பாலத்தை கட்டி முடிக்க முடியவில்லை. இதனால் அந்த கவுண்டரை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. தனது கவுண்டர் நண்பரை காப்பாற்ற சிவகுழந்தை முதலியார் அக்காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டி அவரை சிறையிலிருந்து மீட்டார். 

சிவ குழந்தை முதலியார் மறைந்த பின்பு துரையப்ப முதலியார் வாழ்ந்த காலத்தில் தான் அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது.  இந்தப் பாலத்தின் திறப்பு விழா  துரையப்ப முதலியார் தலைமையில் நடைபெற்றது ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களால் வாழை இலை மற்றும் தரையில் அமர்ந்து சாப்பிட முடியாது என்று மறுத்து விட்டனர். இதனைக் கேட்டு கோபமடைந்து துரத்த முதலியார் இந்திய கலாச்சாரத்தைஅவமதித்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இருவரின் கைகளையும் கட்டி போட்டு அவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக சாதம் திணிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் துறக்க முதலியாரின் இந்திய தேசப்பற்றை பற்றி அறிய முடிகிறது

இவர் பகுதியில் வாழ்ந்த அனைத்து சமூக மக்களுக்கும்  இவர் ஒரு அரணாக வாழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இதற்கு நன்றி செலுத்தும் வகையில் கோபிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து வரும் வன்னியர் சமூக மக்கள் அப்பகுதியில் கட்டப்பட்ட வன்னியர் சமூக திருமண மண்டபத்தில் துரையப்ப முதலியார் மற்றும் அவரின் துணைவியார் வேதநாயகி அம்மாளின்  படத்தை பெரிதாக வைத்துள்ளனர். 

சுதந்திரத்துக்குப் பின் ஒன்றுபட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின்  கலெக்டர் யானையை வேட்டையாட துரையப்ப முதலியாரின் உதவியை கேட்க வந்தபோது நண்பராக மாறினார். பிறகு அந்த கலெக்டர் திம்பம் ஆசனூர்  பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் கஷ்டப்பட்டு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களுக்கு சமவெளிப் பகுதியில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை உருவாக்க  துரையப்ப முதலியாரிடம் உதவி கேட்டார். துரையப்ப முதலியார் இதற்கு சிறிதும் தயங்காமல் ஆசனூர் பகுதியில் தனக்கு சொந்தமான ஏழு ஏக்கர் சமவெளி விளைநிலத்தை மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக தானமாக வழங்க முடிவு செய்தார்.  அதன்பின் இவர் தானமாக வழங்கிய நிலத்தில் மலைவாழ் மக்களுக்கு குடியிருப்பு மற்றும்  விவசாய நிலங்கள்  உருவாக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் நகரில் துரையப்ப முதலியாருக்கு சொந்தமாக 100 கடை கொண்ட துரையப்பா காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் உண்மையிலேயே கஷ்டப்படும் ஏழைகளுக்கு வாடகை இல்லாமலும் குறைந்த வாடகைக்கும் கடையை கொடுத்து உதவினார்.

ஏழைகளின் கல்வி வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்த துரையப்பா முதலியார் ஊர் பெருமக்களுடன் இணைந்து கூகலூரில் காந்தி கல்வி நிலையம் என்ற பள்ளியை கட்ட உதவி ஏழை மக்களுக்கு கல்வியை வழங்கினார்.

தொலைவில் இருந்து பள்ளிக்கு வர இயலாத குழந்தைகளுக்கு தன் இல்லத்திலேயே அனைத்து சமூக குழந்தைகளுக்கும் இலவச விடுதி ஒன்று அமைத்து  உணவு அளித்து அவர்களின் கல்விக்கு வழி செய்தார். 

இது போன்ற எண்ணற்ற பல மக்கள் அற  சேவைகளை செய்த வள்ளல் துரையப்ப முதலியார் தான் செய்த விசயங்களுக்கு எப்போதும் விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை. 

துரையப்ப முதலியார் தந்தை எப்படி மக்களுக்கு சேவை செய்து  வாழ்ந்தாரோ அதேபலவே துரையப்ப முதலியார் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்து பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்த பின்பு 1988 ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இவரின் குலதெய்வம்: காங்கேயம் மடவிளாகம் அங்காளம்மன்.

குலகுரு: கூனம்பட்டி ஆதீனம் மடம்.


துரையப்ப முதலியார் வேதநாயகி அம்மாள்

துரையப்ப முதலியார் 80வது வயது நிறைவு விழா



காட்டு யானையை வேட்டையாடிய துரையப்ப முதலியார்


துரையப்பா முதலியாரின் சகோதரி திருமணம் விழா

கார் பந்தயத்தில் துரையப்ப முதலியாரின் வாகனம் விபத்து ஏற்பட்ட பின் எடுத்த படம்



துரையப்ப முதலியார் பயன்படுத்திய வாகனம்
 




துரையப்ப முதலியார் வாழ்ந்து மறைந்த இல்லத்தின் ஒரு பகுதி

இவரின் இன்னும் சரியாக 55,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மண்டமாக உள்ளது


துரையப்ப முதலியாரின் தாத்தாவின் பெயர் ஆறுமுக முதலியார் ஆகும் 
துரையப்ப முதலியாரின் கொள்ளு தாத்தாவின் பெயர் வேலப்ப முதலியார் ஆகும்





ஹிந்தி திணிப்பு காரணமாக காங்கிரஸ் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த கடிதம்


கல்வி வளர்ச்சி நன்கொடைகளில் சில

பழைய கோட்டை பட்டக்காரர் முதலியார்க்கு எழுதிய கடிதம்

துரையப்ப முதலியார் செய்த மக்கள் சேவைகளை சில





Article by Brigu Verman 



Post a Comment

0Comments
Post a Comment (0)