இவர் ஒரு தமிழ்ப் புலவர். இவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த துறையூர் செங்குந்த கைக்கோளர் குலத்தை சேர்ந்தவர். இவர் வாழ்ந்தகாலம் பற்றித் தெளிவு இல்லை எனினும், இவர் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இவர் வயிரபுரம் ஆசான் என்பவரிடம் கல்வி பயின்றார். பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரது ஆசிரியராலேயே வழங்கப்பட்டது என்பர். இவர் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். எனினும் தஞ்சைவாணன் கோவை என்னும் கோவை நூல் சிறப்புப் பெற்ற ஒரு கோவை இலக்கியமாகும். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன்மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கியதாகக் கதை உண்டு. அரசன் இத் தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தானாம்