திருச்செங்கோடு கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார் (சுதந்திர போராட்டத் தியாகி)

0

செங்குந்தர் கைக்கோள முதலியார்                  ⚜️குலத்தோன்றல்⚜️

நெசவாளர் நேசன், சுதந்திர போராட்டத் தியாகி, சன்மார்க்க நெறியாலர்
கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார்

(08.03.1912  - 11.09.1980)

இளமை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஓர் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார் ஞானபண்டிதன் கூட்டம் பங்காளிகள் குடும்பத்தில் 1912ம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி  K. A. காசிவிஸ்வநாக முதலியார் பிறந்தார். 1932ஆம் ஆண்டில் கன்னியம்மாலை திருமணம் செய்தார். கடவுள் பக்தியில் ஆர்வம் உள்ள இவர் 1921 ஆம் ஆன்டில் தனது 9ஆவது வயதில் ராம பால பக்த சங்கம் மூலமாக ஸ்ரீ ராமர் கோயிலை தன் பாட்டனார் தோட்டத்தில் நிறுவினார். 1926ஆம் செப்டம்பர் 04, வழிபாட்டு சங்க காரியதரிசி ஆனார்.

வாழ்க்கை:
1933ஆம் ஆண்டு பிப்ரவரி 05 இல் வழிபாட்டு சங்கம் பெயர் மாற்றம் பெற்று "சன்மார்க்க சங்கம்"
என்று பெயர் மாற்றி அதன் தலைவராக இருந்தார்

1934 முதல் 1954 வரை
திருச்செங்கோடு தாலூக்கா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பணியாற்றினார்.

1934 முதல் 1935 வரை செங்குந்தர் வாலிப சங்கத்தின் நிர்வாக சபை பரிசோதகராக பணியாற்றினார்.

1935 ஆம் ஆண்டில் நெசவாளர் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டார்.

1936ஆம் ஆண்டு முதல் திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்க காரியதரிசியாக இருந்தார்.

1938ஆம் ஆண்டு முதல் திருச்செங்கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நிறுவப்படுவதற்கு முக்கியஸ்தராக இருந்தார்

1938 முதல் 1941 வரை திருச்செங்கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க காரியதரிசி.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுப்பட்டதற்காக அலிபுரம் சிறைச்சாலையில் 6
வருடம் அடைக்கப்பட்டார்.

1941 முதல் 1980வரை தி.கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவராக இருந்தார்.

1947ஆம் ஆண்டு மே 15, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் பதவி வகித்தார்.

1954, ஜூன் 29 முதல் 1960 அக். 30 வரை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க
பொருளாளர் பதவி வகித்தார்.

1957ஆம் ஆண்டு அரசுப்பள்ளி மாணவர் விடுதி கட்டிடக்குழு நிர்வாக உறுப்பினர் பதவி வகித்தார்.

1960, அக். 30 முதல் 1968, ஜூன் 30, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உபதலைவராக பதவி வகித்தார்.

1980, செப். 11, திரு. K. A. காசிவிஸ்வநாத முதலியார் இறைவனடி சேர்ந்தார்.

முதலியார் வகித்த மற்றசில பொறுப்புகள்:
ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் பக்தஜன சபையின் தலைவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்.

திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திருக்கோயில் கிருத்திகை சங்கத்தலைவர்.

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில் மார்கழி மாத திருவெண்பாவை விழாக் குழுத்தலைவர்.

சேலம் & கோவை மாவட்ட சைசிங் மில் உரிமையாளர்கள் சங்கத்தலைவர்.

திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்.

திருச்செங்கோடு கூட்டுறவு காலனியின் உப தலைவர்.

கூட்டுறவு பண்டக சாலையின் நிர்வாக உறுப்பினர்.

கூட்டுறவு நாணய சங்கத்தின் காரியதரிசி.

ஜில்லா கூட்டுறவு நெசவாளர் பெடரேஷன் நிர்வாக சபை.

கூட்டுறவு சங்க செயலாளர்
திருச்செங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர்.

இவர் காங்கிரஸ் கட்சி அரசியலில் ராஜாஜி பக்கம் இருந்ததால் அவருக்க கடைசி வரை எம்எல்ஏ வாய்ப்பு கிடைக்கவில்லை

நூற்றாண்டு நினைவு நாள்


திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் உள்ள ஐயாவின் சிலை

V
இவர் கட்டிய காந்தி கோவில் பற்றிய செய்தி 









இவரின் 
கூட்டம் பெயர்: ஞனப்பண்டிதன் கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் சப்த கன்னிமார் சுவாமிகள், உஞ்சனை, திருச்செங்கோடு.

இதுபோல் வேறு சில நம் சமூகத்தை சேர்ந்த VIP பற்றிய தகவல்கள் senguntharhistory@gmail.com என்ற mail ID க்கு Mail அனுப்புவோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)