![]() |
கோட்டையண்ணன் முதலியார் சிலை |
- கோட்டையண்ணன் முதலியார் என்பவர் கிபி 14ஆம் நூற்றாண்டில் மத்திய கொங்கு நாட்டை ஆண்ட சிற்றரசன் அல்லாள இளைய நாயக்கரின் இராஜ குரு மற்றும் படை தளபதி.
- இவர் பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, சிவகிரி, கொடுமுடி பகுதிகளை உள்ளடக்கிய மத்திய கொங்கு நாட்டின் வாழ்ந்தவர்.
- சோழர்கால "தெரிஞ்ச கைக்கோளப்படையினரில் (கானாசாரி கோத்திரம்) வம்சாவளியில் வந்தவர் கோட்டையண்ணன் முதலியார் என்று அறியப்படுகிறது.
![]() |
பரமத்தி கோட்டை |
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி என்ற ஊரில் 200 ஏக்கர் பரப்பளவில் இவர் பரிந்துரையில் அல்லால இளைய நாயகர் மண் கோட்டை கட்டினார்
- இன்னமும் மண் கோட்டை நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் 200ஏக்கர் பரப்பளவில் சிதைந்த நிலையில் உள்ளது.
- 14 ஆம் நூற்றாண்டில் அன்னிய முஸ்லிகள்(கில்ஜி, துக்ளக் வம்சம்) தென் இந்தியா மீீது படையெடுத்தனர். இந்த முஸ்லிம படை நாமக்கல் பகுதிக்கு வரும்போது அவர்கலை எதிர்த்து பேரிட்டு நம் நாட்டு மக்களைை காத்தவர் இந்த கோட்டையண்ணன் முதலியார்.
- நம் நாட்டு மக்களை அன்னியர்களிடம் இருந்து காத்தார். அதனால் இன்றுவரை இவரை காவல்தெய்வமாக பல சமூகத்தவர் வணங்குகிறார்கள்.
- படையெடுப்பை எல்லாம் எதிர்கொண்டு வென்றபேது காலச் சுழற்சியில் அவர் ஒரு போரில் வீர மரணம் எய்தினார்.
- அவர் நினைவாக நடுகல் ஒன்றும் பரமத்தி ஊர் கோட்டைக்கோயில் பகுதியில் சுமார் 1 கி.மீ.தொலைவில் வடபுறத்தில் உள்ளது. இதைத் தொல்லியல் துறையினர் அகழ்வு ஆய்வு செய்தால் ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்.
- இவர் வழந்த காலத்தில் இவர் மற்றும் இவர் பங்காளிகள் முருகன் மற்றும் பரமத்தி அங்காளம்மனை குலதெய்வமாக வணங்கி னார்கள்.
- கோட்டையண்ணனின் சந்ததியர் மற்றும் இவரின் பங்காளிகளை இன்று "கானாசாரி கோட்டையண்ணன் கோத்திரம்/கூட்டம் பங்காளிகள்" என்று அழைக்கப்பட்டுகிறார்கள்.
![]() |
பரமத்தி கோட்டையண்ணன் கோவில் |
![]() |
திருப்பூர் மொரட்டுபாளையம் கோட்டையண்ணன் கோவில் |
நன்றி:
கோட்டையண்ணன் கோவில் நிர்வாகி.
நம் குல மன்னருக்கு வணக்கம் வணக்கம் 🙏
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteமுதலியார் குடும்பத்தில்
ReplyDeleteசெங்குந்த முதலியார்கள் ஒற்றுமை ஓங்குக முருகனுக்கே படைத்தளபதிகளாய் பணியாற்றிய பரம்பரை என பெருமிதம் கொள்வோம்
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் நன்றி!
ReplyDeleteதிருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள மொரட்டுபாளையம் என்ற கிராமத்தில் நமது ஸ்ரீ கோட்டையண்ண சுவாமிக்கு உள்ள திருக்கோவில், நமது செங்குந்த முதலியார் சமூகத்திற்கு மட்டுமே பாத்தியப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மூன்றாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதிக்கு பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நமது பங்காளிகள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய அளவில் குலதெய்வ வழிபாடு நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 2000 பக்தர்களுக்கு மேல்
அன்று வழிபட வருகை தருகின்றனர்.
கலந்து கொள்பவர்களுக்கு இவ்வளவு என்று எந்தவித கட்டணமும் இல்லை.
அன்று காலை கணபதி ஹோமம் , மதியம் அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
அதற்கடுத்து கருப்பண்ணசாமிக்கு அடசல் பூஜை நடைபெற்ற பிறகு, பக்தர்களுக்கு சைவ / அசைவ விருந்து மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
நமது
ஸ்ரீ கோட்டையண்ண சுவாமி, ஸ்ரீ பச்சையம்மாள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக, நமது குலத்தினருக்கு வேண்டியது வேண்டிய வரம் அளித்து வருகிறார்கள்.
அன்பர்கள் அவசியம் வழிபாடு செய்து பாருங்கள்.
நீங்களே அவரின் அருட் கடாட்சத்தை உணர்வீர்கள்.
உப தகவல்:
கோவிலில் இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன.
திருமணம்
நிச்சயதார்த்தம் காதுகுத்து
பூப்பு நன்னீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து பொருட்களுடன் வசதியாக உள்ளது. மிகக்குறைவான கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தொடர்புக்கு:
M.U.ஆறுமுக முதலியார்
+91 91 50 93 0146