திருப்பதி முதல் கன்னியாகுமாரி வரை வாழும் செங்குந்த கைக்கோள முதலியார்கள் தங்களுக்குள்/ தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள், கோவில் & கோவில் விழாக்களை நிர்வகிக்கவும், நெசவு ஜவுளி தொழிலை பெருக்கவும் தங்கள் வாழும் பகுதிகளை 72 நாடுகளாக பிரித்து அதில் நாட்டாமை, பெரியதனம், கிராமணி/காரியகாரர் போன்ற பொறுப்புகளில் இருந்து சிறப்பாக செயலாற்றி வந்தனர்.
72 செங்குந்தர் நாடுகளுக்கும் தலைமை மகாநாடு காஞ்சிபுரம், அங்குள்ள நாட்டாமைக்கு ஆண்டவர் என்று பட்டம், அந்த மகாநாடு கீழ் திசை நாடுகள். நான்கு திசைநாடுகளில் ஒன்று தான் தொண்டைமண்டலத்து விரிஞ்சிபுரம். இந்த விரிஞ்சிபுரம் செங்குந்தர் நாட்டின் தலைமை நாட்டாமை வாழும் இடம் குடியாத்தம் நல்லூர் பேட்டை.
இவர்கள் ஆட்சி செலுத்த பகுதி மேல்முகம் ஆதியூர் (திருப்பத்தூர்) முதல் கீழ்முகம் திருப்பாற்கடல் உள்ளிட்ட 40 செங்குந்தர் பாவடி ஊர்கள்.
இந்த விரிஞ்சிபுரம் நாட்டின் பரம்பரை நாட்டாமை பெரியதனம் 2 செங்குந்தர் வகைறாக்கள்,
1 மயிலப்ப முதலி வகையறா
2 அவிசி தரப்பு வகையறா
மேலே உள்ள படங்கள் மயிலப்ப முதலி வகையறா நாட்டாமை பெரியதனத்தின் முடிசூட்டும் விழா. - 2006 ஆண்டு
முடிசூட்டு விழாவுக்கு அழைத்துச்செல்லல், தற்காலிக பொறுப்பில் உள்ளவர் தனது பதவியிலிருந்து விலக சம்மதித்து கையொப்பமிடல் , புதிதாக பதவியேற்பவருக்கு தலைப்பாகை அணிவித்தல் , பதவி ஏற்பவர் கையொப்பமிடல் ,முடிசூட்டு விழாவில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் , முடிசூட்டப்பட்டவருக்கு மரியாதை செய்தல் , முடிசூடி பதவி ஏற்ற பிறகு புதியதாக கிளை பெரியதனக்காரர் கிளை கிராமணிகளாக பதவி ஏற்றவர்களுடன் , பேரூர் பெரியதனக்காரர்கள் பேரூர் கிராமணிகள் மற்ற கிளை பெரியதனக்காரர்கள் கிளை கிராமணிகள் ஆகியோருடன் , மாட வீதி உலா சென்று திருமண மண்டபம் அடைதல் ... விருந்து ... விரிஞ்சிபுரம் நாட்டின் மைலப்ப வகையறா நாட்டாண்மை கீழ்முகம் திருப்பாற்கடல் (காவேரிப்பாக்கம் அருகில்) முதல் மேல்முகம் ஆதியூர் ( திருப்பத்தூர் அருகில் ) வரை ... மற்றும் பேரூர் பத்தூர் பெரியதனமாக முடிசூட்டப்பட்டவரின புகைப்படம் .
![]() |
| விரிஞ்சிபுரம் செங்குந்தர் நாட்டாமை சபையில் முக்கிய பங்கு வகிக்கும் செங்குந்தர் மாக்காத்தை வகையறா family tree |
வெட்டுவானம் ஊர் செங்குந்தர்
வெட்டுவாணம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் அமைந்த பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும்.
வெட்டுவாணம் கிராமம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மேலைவித்தூர் என்று அழைக்கப்பட்டுள்ளது . கால்வாய் வெட்டும்போது எல்லையம்மன் கோவில் மூலவர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பொழுதிலிருந்து கால்வாய் வெட்டும்போது கிடைத்த அம்பாள் தலைப்பகுதி(வாணம்) வைத்து வெட்டு வாணம் என்கின்ற காரணப் பெயரோடு விளங்கி வருகிறது. மேலும் பள்ளிகொண்டா என்பது கீழை வித்தூர் என்று அழைக்கப்பட்டு இப்பொழுது கீழச்சூர் பகுதி இன்றும் வருவாய்த் துறையில் ஒரு பகுதியாக உள்ளது.
வெட்டுவாணம்
முன்னாலில் வேலூர் தாலுகாவில் இருந்தது. இந்த கிராமம் வடக்கே பாலாறும் தெற்கே தேசிய நெடுஞ்சாலை(48)யும் மேற்கே உத்தர காவேரி ஆறும் கிழக்கே பள்ளிகொண்டா பேரூராட்சியும் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பாடல் பெற்ற 108 அம்மன் கோவில்களில் ஒன்றாகும் .இந்த கோயிலில் ஆடி ஆவணி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது . போது 9 வெள்ளி கிழமைகளில் உற்சவங்கள் நடைபெற்று சாமி ஊர்வலம் நடைபெறுகிறது.
இந்த கோவில் பெரும்பாலானோருக்கு குலதெய்வமாக இருக்கிறது. இந்த வெட்டுவாணம் கிராமத்தில் செங்குந்த மரபினர் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .இவர்கள் எல்லையம்மன் கோவிலை சில ஆண்டுகளுக்கு முன்னால் நிர்வகித்து வந்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்துள்ளனர். செங்குந்த மரபினருக்கு சொந்தமாக ராம பஜனை கோவில் ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் தீபாவளிக்கு மறுநாள் கௌரி விரதத்தன்று கௌரி சிலை அமைக்கப்பட்டு அனைத்து செங்குந்தரும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு வீட்டில் நோன்பிருந்து படைப்பார்கள். இந்த கோவிலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஊரில் இருந்து குடியாத்தம் போன்ற பல ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர். செங்குந்த மரபினருக்கு சொந்தமான குலதெய்வ கோவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுமார் 65 குடும்பங்களுக்கு மேலாக நிதியுதவி வழங்கி சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆண்டும் 2025 ஜூன் மாதத்தில் முதலாம் ஆண்டு பூஜையும் யாகம் யாகம் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் செங்குந்தர் நாட்டாமை சபை பற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவிற்கு அனுப்பவும்









