பாண்டிய மன்னர் காலத்தில் கும்பகோணத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க அண்ணன் தம்பி இருவர் செங்குந்த கைக்கோள முதலியார் இனத்தை சேர்ந்தவர்கள் வந்த நேரத்தில் தெப்பத்தை சாமி சுற்றி வரும் பொழுது குளத்திற்குள் சுவாமி உள்ளே விழுந்தது. அப்பொழுது குளத்திற்குள் சாமியை யாராலும் தூக்கமுடியவில்லை. ஆனால் அண்ணன் தம்பி இருவரும் நாங்கள் குளத்திற்குள் இறங்கி சாமியை தூக்குகிறோம் என்று மன்னரிடம் சொன்னார்கள். அதற்கு மன்னர் சம்மதித்தார். இருவரும் தெப்பத்தில் இறங்கி சாமியை தூக்கி வந்தார்கள். மன்னர் சந்தோஷம் அடைந்தார்.
எல்லோரும் குளத்தில் இறங்கி சாமியை தூக்க முயன்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் இரண்டு பேரும் குளத்திற்குள் சென்று சாமியை வெளியே கொண்டு வந்தீர்கள். இன்று முதல் சொந்தபந்தங்களை அழைத்து வந்து சீர்பாதம் ஆக இருந்து சாமி சுமந்து கொள்ளுங்கள் என்று மன்னர் கூறினார். எழுகடல் தெருவில் சீர்பாதம் ஆக குடி இருந்து வந்தார்கள். காலப்போக்கில் எங்களுக்கு தனி கிராமம் வேண்டும் என்று மன்னரிடம் சொன்னார்கள்.
அப்பொழுது சாமநத்தம் என்ற கிராமத்தை மன்னர் கொடுத்து உள்ளார். அதன் பிறகு அகுதார்கள் சாமநத்தத்தில் வசித்து வந்தார்கள். அதன் அருகில் உள்ள 18 கிராமத்துக்கும் தாய் கிராமம் சாமநத்தம்.
கீழ்க்கண்ட 18 கிராமங்களுக்கும் தாய் கிராமம் சாமநத்தம் :
அனுப்பானடி
ஐராவதநல்லூர்
விரகனூர்
திருப்புவனம்
வண்டியூர்
திருமோகூர்
திருப்பரங்குன்றம்
தெப்பக்குளம்
பசுமலை
கொடிமங்கலம்
திருவேடகம்
முள்ளிப்பள்ளம்
தேனூர்
மதிச்சியம்
கரும்பாலை
தல்லாகுளம்
18 கிராமத்தில் தல்லாகுளம் செங்குந்தர் உறவின் முறையிலிருந்து பிரிந்தது தான் கோரிப்பாளையம் செங்குந்தர் உறவின் முறை, திருவாப்புடையார் கோவில் செங்குந்தர் உறவின் முறை.
மீனாட்சி அம்மன் கோவில் மண்டகப்படி
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தின் ஒரு பகுதியாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன், எழுகடல் தெருவில் உள்ள (மதுரை கோரிப்பாளையம் செங்குந்தர் உறவின் முறை மற்றும் மதுரை திருவாப்புடையார் கோயில் செங்குந்தர் உறவின் முறை சார்பில் அவர்களுக்கு சொந்தமான கடைகளில்) மண்டகப்படியில் எழுந்தருளுவார். அந்த வேளையில் நமது மதுரை கோரிப்பாளையம் செங்குந்தர் உறவின் முறை, மதுரை தல்லாகுளம் செங்குந்தர் உறவின் முறை மற்றும் திருவாப்புடையார் கோயில் செங்குந்தர் உறவின் முறை மகமையைச் சார்ந்த இனப்பெருமக்கள் திரளாகக் கலந்து கொள்வர். அவ்வேளையில் நாட்டாண்மைக்காரர் மதுரை கோரிப்பாளையம் செங்குந்தர் உறவின் முறை மகமை, காரியக்காரர், மதுரை தல்லாகுளம் செங்குந்தர் உறவின் முறை மகமை மற்றும் தலைவர், மதுரை திருவாப்புடையார் கோயில் செங்குந்தர் உறவின் முறை மகமை ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து சுவாமிகளின் அருள் பெற்று இன்புறுவர். இந்த வைபவம் சுழற்சி முறையில் ஒரு ஆண்டு மதுரை கோரிப்பாளையம் செங்குந்தர் உறவின் முறை மகமையின் சார்பிலும் அடுத்த ஆண்டு மதுரை திருவாப்புடையார் கோயில் செங்குந்தர் உறவின் முறை மகமையின் சார்பிலும் தொடந்து நடைபெற்று வருகின்றது.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் புட்டுத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டம் திருவாதவூரில் இருந்து ஸ்ரீ மாணிக்கவாசகர் எழுந்தருளும் மண்டகப்படி மதுரை தல்லாகுளத்தில் அமைந்திருக்கும், தல்லாகுளம், கோரிப்பாளையம் மற்றும் திருவாப்புடையார் கோயில் மகமைகளுக்குச் சொந்தமான த.கோ.தி. விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும்.
ஒவ்வொரு ஆவணி மாதமும் அருள்மிகு முனியாண்டி, அருள்மிகு காளியம்மன், அருள்மிகு மாரியம்மன் சாமிகளுக்கு கரகம் எடுத்து சுவாமி கும்பிடப்படுகிறது.
2. ஆவணி மாதத்தில், விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தப்படுகிறது.
3. ஒவ்வொரு வருடமும் / மகமையின் சார்பாக திருவாப்புடையார் கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டியன்று சன்னதி தெருவில் மண்டகப்படி அமைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் பூஜை முடிந்த பின்பு சீர்பாதங்களுக்கு பொன்னாடை போர்த்திகௌரவிக்கப்படுகிறது.
4. மார்கழி மாதம் 30 நாளும் சாமிகளுக்கு பூஜை நடத்தப்பட்டு கட்டளைதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
5. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவாப்புடையார் கோவிலுக்கு எழுந்தருளுவார். நமது மகமையின் சார்பாக மகேஸ்வர பூஜை செய்து சீர்பாதம் தாங்கிகளுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. மாலையில் சுவாமிகள் புறப்பாட்டின் போது முத்தையா செட்டியார் படித்து ரோட்டில் உள்ள நமது விநாயகர் ஆலயத்தில் மண்டகப்படி திருக்கண் அமைத்து பூஜை நறும்.
6. மதுரை எழு கடல் தெருவில் நமது மகமை கடையில் இரண்டு வருடங்களுஒரு முறை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் திக்விஜயம் அன்று மண்டகப்படி அமை பூஜைகள் நடத்தி த.கோ.தி. நிர்வாகிகளுக்கு பரிவட்ட மரியாதை செய்யப்பட்டு வருகின்றது.
தென்கரை செங்குந்தர் உறவின்முறை வரலாறு (மணியக்காரர் வகையறா)
பாரம்பரிய வழியில் வந்த செங்குந்தர் வகையறாக்கள் 1857க்கு முன்னரே இருந்தனர். வைகை ஆற்றின் தென்கரையில் செழிப்பான தென்னையும், நெல்லும், கரும்பும் சூழ்ந்த என்று பாண்டிய மன்னர்களால் அழைக்கப்பட்டு தற்போது தென்கரை கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகில் இருக்கிறது. 1000ம் வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மூலநாத சுவாமி மற்றும் அம்மன் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி வரை சிவன் கோவிலில் அமைந்து இருப்பது தென்கரையின் சிறப்பு. இவ்வூரில் நமது செங்குந்தர் குல முன்னோர்கள் வாழ்ந்தது அதனிலும் சிறப்பு. நமது முன்னோர்கள் பாவடி செய்தும், ஜவுளி வியாபாரம் செய்தும் வாழ்ந்து வந்தார்கள். இன்று பாவடி தொழில் முற்றிலும் ஒழிந்து இடம் மட்டும் தொல்லியியல் எச்சமாக இருக்கின்றது.
ஸ்ரீ மூலநாதர் கோவில் சீர்பாதம் தாங்கிகளாக இருந்து இறைவன் தொண்டு ஆற்றி வருகின்றனர். பிரதோசம் மற்றும் சஷ்டி விழாக்களில் முக்கியஸ்தர்களாக இருந்து இறைப்பணி ஆற்றி இறைவனுக்கு தொண்டு செய்து கொண்டு இருக்கின்றோம். மேலும் எமது உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சீலைக்காரி தெய்வானை அம்மன் கோவில் (வீட்டுச்சாமி) உருவாக்கி கட்டிடமும் கட்டி வழிபட்டு வருகின்றோம். குலதெய்வம் அருள்மிகு சாலையா கோவில் சோழவந்தானில் உள்ளது. மாசி மாத வழிபாடு மற்றும் மாசி மாதத்தில் அமாவாசை பூஜையில் நமது தென்கரை உறவின்முறை மணியக்காரர் வகையறா முன் நின்று வழிபாடு செய்கின்றோம்.
தற்போது எங்களது உறவின்முறையில் 67 தலைக்கட்டு குடும்பங்கள் உடைய ஒரு சீர்மிகு சந்ததியாக வாழ்ந்து வருகிறோம். ஜவுளி வியாபாரத்திலும், கல்வியிலும் தேர்ச்சி பெற்று சிறப்பாக இருக்கின்றோம். தென்கரையில் நமது செங்குந்தர் சமுதாயத்தினர் ஊர் கோவில் உருவாக்கவும், கும்பாபிஷேக நிகழ்வுகளிலும் முன் நின்று நடத்தி வருகின்றோம். பொது பொறுப்புகளிலும் முக்கியஸ்தர்களாக இருக்கின்றோம். தற்போது நமது செங்குந்தர் (மணியக்காரர் வகையறா) உறவின்முறை தலைவராக திரு. M.முருகன், செயலாளராக திரு. M.ஆனந்தகுமார் மற்றும் திரு. G.பன்னீர்செல்வம் ஆகியோர் இருக்கின்றோம். மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக திரு. R.கணேசன் உள்ளார்.
அனுப்பானடி செங்குந்தர் உறவின் முறை வரலாறு
பண்டைய மதுரையம்பதியில் பக்தர்கள் மீது பேரன்பு கொண்டு சிவபெருமான் நிகழ்த்திய 64-திருவிளையாடல்களில் 59-வது திருவிளையாடலான "நரியைப் பரியாக்கிய விளையாடல்" நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! அந்நிகழ்வுக்காக சிவபெருமானுக்கு நரிகளை அனுப்பி வைத்த காரணத்துக்காகவே. "அனுப்புநரி" என்று அழைக்கப்பட்டு, இன்று மருவி அனுப்பானடி என வழங்கும் பெருமை மிக்க ஊரில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களான செங்குந்தர் பெருமக்களால் 1933-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றளவும் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது "அனுப்பானடி செங்குந்தர் உறவின் முறை”
கூடல் மாநகரில் சூடிக்கொண்டு அருள் பாலித்து வரும் மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணத்தை அண்ணனாக முன்னின்று தாரை வார்த்து நடத்தி வைக்கும் அருள்மிகு கூடலழகர் பெருமாள் ஆண்டு தோறும், மாட்டுப்பொங்கல் அன்று விஜயம் செய்து சிறப்பு சேர்த்து வரும் பெருமை எங்கள் அனுப்பானடிக்கு உரியது. அந்நிகழ்வில் நமது சமுதாயச் சொந்தங்கள் அனைவரும் பங்கேற்று அழகரை வரவேற்பது முதல் வழியனுப்புவது வரையிலும் சீர்பாத சொந்தங்களுக்கு சிறப்பு செய்யும் நூற்றாண்டு சம்பிரதாயத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது.
நமது சமுதாயத்தை சேர்ந்த வாழும் குருமகான் அருள்திரு பூரணானந்த சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்த திருத்தலம் அனுப்பானடி புதுத்தெருவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் அவர் முக்தியடைந்த திருநாளாம் ஆவணி ரோகிணி நட்சத்திரத்தில் மஹாகுருபூஜை நடத்தப்பட்டு சிவனடியார்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் சமுதாய உறவுகள் திரளாக பங்கேற்று ஆன்மீகப்பணி செய்து வருகின்றனர்.
ஐந்து வீட்டு பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட குல தெய்வமான அருள்மிகு முத்து இருளாயி அம்மன் திருக்கோயில் அனுப்பானடி ஆறுமுக முதலியார் தெருவில் அமைந்துள்ளது. கீரைத்தண்ணி" மற்றும் "உப்புக்காச்சி" வகையறாவினருக்குப் பாத்தியப்பட்ட குல தெய்வமான அருள்மிகு பாப்பாத்தியம்மன் திருக்கோயில்" தாய் நகரில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் தொன்மையான அய்யனார் கோவில்களில் ஒன்றாக அனுப்பானடி அனைத்து சமுகத்தினருக்கும் பாத்தியப்பட்ட புஷ்பகலா பூர்ணகலா சமேத வெங்கலமூர்த்தி அய்யனார் திருக்கோயில் ஊரின் மையத்தில் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலின் முக்கியச் செயல்பாடுகளில் நமது சமுதாய முன்னோடிகள் பங்கேற்று திருக்கோயிலை மேன்மைப்படுத்தி வருகின்றனர்.
