சங்கரண்டாம்பாளையம் பழனிச்சாமி புலவர்

0

 




💥பைந்தமிழ் வளர்த்த

    பழனிச்சாமி புலவர் 💥

     அன்றைய தமிழாசிரியர்கள் பலர் மிகச் சொற்ப சம்பளம் பெற்றும் தங்கள் கைகளால் நெய்த நூலாடையை தமிழ்த்தாய்க்கு அணிவித்து அழகு பார்த்துள்ளனர்.

 

      அவர்களில் மிகச் சிறப்பான ஒருவர்-

💥 திருப்பூர் க.பழனிச்சாமி புலவர். (22 - 9 - 1909)

தந்தை : கருந்தும்பிப் புலவர்

தாய்     : அம்மணி அம்மாள்

துணைவியார்: லட்சுமி அம்மாள்

மகன்கள்-மயில்வாகனன், விபுலானந்தன். பெண்மக்கள் நால்வர்.

ஒட்டக்கூத்தர் செங்குந்தர் மரபைச் சேர்ந்த கருந்தும்பிப் புலவர் சங்கரண்டாம்பாளையம் ஆதீனப் புலவராய் இருந்தவர்.

பழனிச்சாமிப் புலவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்.


      1970 வரையிலுமான அவரது சிறப்பான தமிழ்ப்பணியில் பயன்பெற்றப் பள்ளிகளாக

திருப்பூர் நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளி

K. S. C உயர்நிலைப்பள்ளி

வதம்பச்சேரி-சொக்கஞ்செட்டியார் - மல்லம்மாள் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியன இருந்துள்ளன.


🔥இவர் இயற்றிய நூல்கள்🔥

1) கொங்குச் செல்வி

2) ஆறுமுகவேல் ஆடல்-1500 விருத்தங்கள்

ஃ தொகுத்து எழுதியவை:--

     தேவாங்க புராண உரை


ஃ பதிப்பித்தவை ஃ

 1)அலகுமலைக் குறவஞ்சி - என்கிற

    ஓதாளர் குறவஞ்சி

2) திருமுருகன்பூண்டித்தலபுராண உரை

3) செஞ்சேரிமலை தலபுராணம்

4) கொங்கு வேளாளர் - மங்கலவாழ்த்து

ஃ இவர் எழுதி பதிப்பிக்கப்படாமல் :--

1) சங்கரண்டாம்பாளையம்பட்டக்காரர் -

    வேணாவுடையார் வரலாறு

2) ரத்னமூர்த்தி விரலி விடுதூது

3) அப்பர மேயர் தலபுராண உரை


 🔥 திருப்பூரில் இவரிடம் தமிழ் கற்றோர் எண்ணற்றோர். இருந்தும் இவர் கொங்குச் செல்வி நூலை அச்சிடத் தன் மனைவியின் நகையை அடகு வைத்தவர் அதனை மீட்கவே முடியாமல் போனது ஒரு சோகம்.


🙏சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர்🙏

       முன்பு நான் எழுதிய "கொங்குக் குலங்கள்" வரலாறு நூலை பார்த்துவிட்டு

மறைந்த சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் அவர்கள் தம் அரண்மனைக்கு என்னை அழைத்து/தம் முன்னோர்களின் விருதுகள், படைக்கலன்கள், சோழன் அளித்த "பொன்னூஞ்சல்"முதலியன காட்டியதோடு/ மதிய உணவும்  உண்ண வைத்து/ தட்டில் தட்சணை வைத்து பழம் புலவர்களை மரியாதை செய்யும் பெருமையை எனக்குச் செய்த நிகழ்வை நான் என்றும் மறக்க முடியாது. 

     மேலும் தங்கள் ஆதீனம் பற்றிய வரலாற்றை எழுதவும் வேண்டினார், என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது வருத்தமே

 . இருப்பினும் பழனிச்சாமிப் புலவர் எழுதி வெளியிடாமல் இருக்கும் அவ்வாதீனம் பற்றிய நூல்களைத் தேடி வெளியிடலாம்.

       --கவிஞர் சிவதாசன்

        


Post a Comment

0Comments
Post a Comment (0)