பாம்பன் சுவாமிகள் அருளிய செங்குந்தர் நவவீரர் நவரத்தின கவிவிருத்தம்

0
அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் காஞ்சிபுரம் ஐயன் பேட்டை செங்குந்தர் மரபினர்கள் வேண்டுகோளின்படி ஐயன்பேட்டை கந்தப்பர் கோவிலில் செங்குந்தர் நவவீரர் கலிவிருத்தம் அரங்கேற்றினார்.



இதை நாகலிங்க முனிவர் முத்து விழா மலரில் பின்வருமாறு கூறுகிறார் 
 அண்மையில் முருகப்பெரு மான் திருவடியடைந்த பாம்பன் சுவாமிகள் வடமொழி தென் மொழியாகிய இருமொழிகளையும் நன்குதேர்ந்த பெரும்புலவர். ஆரவாரமற்ற மிக்க தூய்மையும் அமைதியும் நிறைந்த துறவு நிலை யில் நின்றவர். முருகன் திரு வடிகளைக் கணமேனும் மறவாத தவ நிலையினர். திருப்பா, பரிபூர ணானந்தபோதம் முதலிய பல அரிய ஞான நூல்களை இயற்றி யு த வி ய அருளாசிரியருமாவர். இப்பெரியாரைப்பற்றி யறியாத சென்னைவாசிகள் இருக்கமாட் டார்கள். காஞ்சிபுரத்தையடுத்த ஐயம்பேட்டைப் பெரியதெரு வென வழங்கும் கந்தப்பர் தெரு ய வில் திருக்கோயில்கொண்டுள்ள கந்தப்பெருமான்மீது பாடிய கந்தகோட்ட மும்மணிக்கோவை யும், நவவீரர் நவரத்தனமும் ஆகிய இரு பிரபந்தங்களையும் சுவாமிகளே கந்தப்பர் கோயிலில் அரங்கேற்றினார்கள். அதுபோது அவற்றைக்கேட்டு மகிழும் பேறு பெற்ற யான் சிறப்புப்பாயிரமாக ஒருபாடல் பாடியுள்ளேன். நூல் களைக்கேட்டு மகிழ்ந்த ஐயம் பேட்டைவாசிகள் சுவாமிகளைப் பல்லக்கில் வைத்து நகர்வலஞ் செய்வித்துப் பாராட்டினர். இவ் வரங்கேற்றத்தின்போது ஐயம் பேட்டையிற் பெரும்புலவராக விளங்கிய சூரப்பமுதலியா ரவர் களும் பிறபுலவர்களும் வந்திருந் தனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)