டாக்டர் வை. இரத்தினசபாபதி செங்குந்தர்

0


 ஐந்துறை வித்தகர், பேராசிரியர் முனைவர் வை. இரத்தினசபாபதி செங்குந்தர் அவர்கள்

வித்துவான், பி.ஓ.எல்., எம்.ஏ., பிஎச்.டி.,


தமிழ் தெரிந்தால் சைவம் தெரியாது. சைவம் தெரிந்தால் தமிழ் தெரியாது. இரண்டும் தெரிந்தாலும் வள்ளலாரின் சன்மார்க்கம் தெரியாது. இம்மூன்றும் தெரிந்தாலும் தத்துவம் (பிலாசபி) தெரியாது, வீரசைவம் தெரியவே தெரியாது என்பது தான் நாட்டின் இன்றைய பொதுநிலை. இந்நிலைக்கு விதிவிலக்காக, மொழிப் புலமையோடு சமயப்புலமையும் பொதுஅறிவும் நிரம்பியவராய் உள்ள அறிஞர்கள் மிகச் சிலரே. அச்சிலருள் தலைசிறந்த ஒருவராக இன்று நம்மிடையே விளங்குபவர் டாக்டர் வை. இரத்தினசபாபதி அவர்களாவார்.


கல்லூரிகளில் தமிழ்த்துறைத் தலைவராய், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராய், சைவ சித்தாந்தத்துறைத் தலைவராய்ப் பேரோடும் புகழோடும் சிறப்பாகப் பணியாற்றிய இவர் வீரசைவர் ஆதலின் இயல்பாகவே அதிலும் வித்தகர். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கத்திலும் எம் போன்றாரால் பாராட்டப் பெறும் அளவுக்கு அறிவாற்றல் பெற்றவர்.


தமிழ், சைவம், தத்துவம், வீரசைவம், வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கம் ஆகிய ஐந்து துறைகளிலும் வித்தகராய் விளங்கும் இவரை ஐந்துறை வித்தகர் (Five in one ) என்று நாம் பாராட்டுவதுண்டு.


ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு 1950, 60-களில் திருச்சிராப்பள்ளி யில் நாம் நகரமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய காலத்தில், திருச்சிராப்பள்ளி சூசையப்பர் கல்லூரியில் "கோனார் ஐயா" வித்துவான் திரு. ஐயன்பெருமாள் கோனார் அவர்களும், தேசியக் கல்லூரியில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன், எம்.ஏ., அவர்களும் தமிழ்த்துறைகளை அணிசெய்த காலத்தில், திருச்சிராப்பள்ளிக்குப் புதுவரவாகப் புலவர் இருவர் வந்தனர். ஒருவர் புலவர் கீரன். இன்னொருவர் வித்துவான் வை. இரத்தினசபாபதி. இருவரும் திருச்சி டுடோரியல் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக ஆனார்கள். குறுகிய காலத்திலேயே மாணவர் உள்ளங்களிலும் பொதுமக்களது உள்ளங்களிலும் இடம் த்தார்கள்


திருச்சிராப்பள்ளி உறையூரில் வரிகீச பக்த ஜசையை றொரு பழஞ்சபை, சமரச சுத்த சன்மார்க்க சங்கம் பதையும் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டு “வாசே பக்த ளையர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்ற புதுப்பெயரில் படத் தொடங்கிற்று. உறையூர்ப் பெருமக்கள் இரத்தின பயதியாரை அதன் தலைவராக்கினர். சபை (சங்கம்) தப்பொலிவு பெற்றது.


வாரக்கூட்டங்கள், மாதக்கூட்டங்கள், தொடர் சொற் பொழிவுகள் மாவட்ட அளவினது என்று சொல்லத்தக்க காவுக்குப் பெருவிழாவாக ஆண்டு விழாக்கள் நடத்தப்பெற்றன. பள்ளம் மாணவரான இவர் 18-ஆம் பட்டம் சந்நிதானத்தை அழைத்து ஆண்டு விழாக்களைச் சிறப்புடன் நடத்தினார். குன்றக்குடி அடிகளாரும் பலமுறை அழைக்கப் பெற்றார்.


இவ்வாறு கல்லூரியிலும் சங்கத்திலும் பொதுமக்கள் தியிலும் புகழோடு பணியாற்றியவர், மேற்படிப்புக்காக ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். ண்ணாமலையில் பி.ஓ.எல்., எம்.ஏ., பிஎச்.டி பட்டங்களைப் புற. அங்கேயே தமிழ்த்துறையிலும் தத்துவத்துறையிலும் யார் அந்நாளில் காவிரிப்பூம்பட்டினத்தில் பூம்புகார் பாவைக் கல்லூரி குன்றக்குடி அடிகளார் தலைமையில் பேரவையின் ஆட்சியில் இயங்கியது. அதிலும் சில போசிரியராய், பொறுப்பு முதல்வராய்ப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறை பேராசிரியராகவும், அதன்பின் சைவசித்தாந்தத்துறையின் ராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.


இவர் பெற்ற பட்டங்கள் பதினைந்துக்கு மேற்பட்டவை. காலத்தில் முதன்முதலில் இவர் பெற்ற "ஞகாமணிப் மயிலம் மகாசந்நிதாளம் அளித்தருளியது. பெற்ற விருதுகள் பலவற்றிலும் சிறப்பானவை இரண்டு, ஒன்று இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது ரூ. 50.16 (1996), மற்றொன்று இராஜா சர் முத்தைய செட்டியார் விருது ஆதீனங்களிலும் இரட்டைச் சால்வை மரியாதை என்றொரு ரூ. 1,00,000 (2009). முன்னாளில் சங்கரமடத்திலும் பழக்கம் இருந்தது. சாமிநாதையருக்குச் சங்கரமடம் செய்தது. இவருக்கும் அதுபோன்று செட்டியார் விருதுகள் இரட்டை யாகக் கிடைத்தன.


இவரது நூற்பணிகள் பல.


1. வீரசைவம்


2. திருஞானசம்பந்தர் - ஓர் ஆய்வு - முதற் பகுதி


3. திருஞானசம்பந்தர் - ஓர் ஆய்வு - இரண்டாம் பகுதி


4. திருநாவுக்கரசர் - ஓர் ஆய்வு - முதற் பகுதி


5. திருநாவுக்கரசர் - ஓர் ஆய்வு - இரண்டாம் பகுதி


6. சுந்தரர் - ஓர் ஆய்வு - முதற் பகுதி


7. திருமுறைத் தெளிவே சிவஞானபோதம்.


இவை சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள். சுந்தரர் இரண்டாம் பகுதியையும், மாணிக்கவாசகர் இரண்டு பகுதிகளையும் இவர் எழுதாமல் நின்றுவிட்டது ஒரு பெருங்குறையே.


8. சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் இதுவும் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடே


9. வள்ளலார் நோக்கில் மாணிக்கவாசகர்


10. வள்ளலாரின் உத்தரஞானசிதம்பரம்


இவ்விரண்டும் சைவசித்தாந்தப் பெருமன்ற வெளியீடுகள் வள்ளலார் மாணாக்கர் வழித்தோன்றல் திரு சி.எஸ். குப்புராஜ் அவர்கள் துணைத்தலைவராக இருந்த காலத்தில் வெளியிடப் பெற்றவை.


11. அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை.


இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் வெளியீடு, டாக்டர் மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை போன்ற அமைப்பில் அமைந்தது. இவர் எழுதிய நூல்கள் முப்பதிற்கும் மேற்பட்டலை


படித்துச் சுவைத்த சிலவற்றை மட்டுமே மேற்காட்டி னோம்.


கடலூர் வண்டிப்பாளையம் இவரது பிறப்பிடம். பிறந்த 09.06.1929. தொடக்கக் கல்வி ஞானியாரடிகளிடத்தில். வித்துவான் படிப்பு மயிலம் தமிழ்க் கல்லூரியில். இன்றய மயிலம் சந்நிதானமும் பேரூரடிகளாரும் இவரது பகுப்புத் தோழர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்து வித்துவான் பட்டத்துடன் திருச்சிராப்பள்ளிக்கு வழி விசாரித்துக் கொண்டு மத்துசேர்ந்த இவர் இன்று நாடறிந்த நல்லறிஞராய் ஐந்துறை வித்தகராய்ப் புதிய பஞ்சபுராணராய் ஞானப்பழமாய் விளங்கு தார் இவர் திருச்சிராப்பள்ளிக்கு வந்த காலத்திலிருந்து இன்று வரை, 50 ஆண்டுகளுக்கு மேலாக இவரது வளர்ச்சியையும் வாழ்வையும் பணிகளையும் நாம் நன்கறிவோம்.

அண்மையில் இவரது பொழிவுகளின் விரிவு நூலுருப் பெற்று வெளிவந்துள்ளன. சன்மார்க்கம் முதற் பாகம், இரண்டாம் பாகம் - முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் சிசிவு என நான்கு நூல்கள் முறையே 2006; 2007; 2008; 2009 தைப்பூச நாள்களில் வெளிவந்தன. வணிகவரித் துறையின் யுதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேரன்பர் திரு அயா, அரங்கன் அவர்கள் இந்நூல் தொடர்களை வெளியிட்டு கிறார். இத்தொடரின் அடுத்த பிரிவு நூல் 2010-இல் வெளிவரவிருப்பதை நாமும் எதிர்நோக்கியுள்ளோம்.



Post a Comment

0Comments
Post a Comment (0)