நாராயணசாமி முதலியார் - அ.
(20 - நூற்றாண்டு)
இவர் தொண்டைவள நாட்டில் பனைப்பாக்கம் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் அம்பலத்தாடி முதலியார் என்ப வருக்கு அருமைப் புதல்வராகத் தோன்றியவர். இவர் சிவப் பிரகாச ஐயர் என்னும் அறிஞர்பாற் கல்வி கற்றுச் சிறப்புற்றார். ஊரார்கள் விரும்பியபடி தாம் பிறந்த ஊரின் புராணத்தை இவரும் எல்லப்ப முதலியார் என்பவருஞ் சேர்ந்து இனிய செய்யுட் களாகப் பாடி முடித்தனர். அப்புராணம் 5க படலங்களையும் கககூஎ திருவிருத்தங்களையும் உடையதாக விளங்குகின்றது. நூலில் ஓவியப் பாடல்களும் அமைந்துள்ளன. அட்டாவதானம்
அகரவரிசை
எசஎ
பூவை கலியாணசுந்தர முதலியார், ஐயன்பேட்டைச் சிவப்பிரகா சையர், பாலூர் வேலுத்தேசிகர், காஞ்சி நாகலிங்க முதலியார், காஞ்சிபுரம் சோணாசல பாரதியார் ஆகியோர் இந் நூலுக்குச் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்.
"ஈகை யானரில் கன்னனே உறுத்தனா குவானர் வாகை விற்றிறத் திராகவன் பின்றரு வானான் தோகை மாதரில் திலோத்தமை அழகினில தோற்பள் மாக மீதுயர் மாளிகை மறுகிடை வரினே."
என்பது திருநகரச் சருக்கத்தில் ஒரு பாட்டு.