விழுப்புரம் மாவட்டம் வேட்டைவலத்திற்கு அருகில் கண்டாச்சிபுரம் என் என்ற சிற்றூர் ஒன்று இருக்கிறது. அவ்வூரில் செங்குந்த முதலியார் மரபில் தோன்றியவர் அழகானந்தர்.
அவர் நல்லொழுக்கமும், தெய்வ பக்தியும் கொண்ட ஆசார சீலர். இயல்பாகவே பற்றற்றவராகவும் பரம சாதுவாக வும் இருந்தார். ஒருநாள் அவர் தெருவில் தறி நெய்து கொண்டிருந்த போது, தீண்டப்படாதப் பெண்மணி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்த ஆகாரத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டார்.
அதைக் கண்ட உறவுக்காரர்கள் தாங்க முடியாத ஆத்திரம் அடைந்தனர். ஒருவர் அழகானந்தர் கன்னத்தில் ஓங்கி அறைந்தே விட் டார். அந்த ஆகாரத்தைத் துப்பி விடும்படி அனைவரும் கட்டாயப்படுத் தினர். அவரும் துப்பினார். என்ன அதிசயம்? அவர் வாயிலிருந்து நறு மணம் கமழும் மலர்கள் கீழே விழுந் தன! அவரை அடித்தவர் இதைக் கண்டு மிக்க வேதனைப் பட்டார். சுற்றி யிருந்தவர்கள் அவர் காலில் விழுந்து கும்பிட்டனர். அவர் ஒரு மகான் என்பதை அறிந்து, தங்கள் தவற்றை மன்னித்தருளும்படி கேட்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அழகா னந்தர் அந்த ஊரில் வெகு நாட்கள் இருக்கவில்லை. அடுத்த அடுத்த ஊரில், யோக சித்திகள் நிரம்பப் பெற்ற ஓர் அம்மையார் இருப்பதை அறிந்து, அவரைக் குருவாக அடைந்து, உப தேசம் பெற்றுக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். நான்கு வீடுகளில் உணவை யாசித்து உண்மை யான துறவியாகப் பவழக் குன்றின் அடிவாரத்தில் வாழ்ந்து வந்தார். அழகானந்தரிடம் அபூர்வ சக்திகள் இருப்பதை அறிந்த சிலர், அவரிடம் வந்து, உடல் நோயும், மன நோயும் நீங்கி, சாந்தி பெற்றுச் செல்வது வழக்கம். ஒரு சமயம் போளூரை அடுத்த முருகப்பாடி என்ற ஊரிலிருந்து ஒரு ராயர் அழகானந்தரைத் தரிசிக்க வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த ராயர், சுவாமிளின் திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் சொறிந்தார். "உங்களைத் தான் தெயவமாக நம்பி யிருக் கிறேன். எப்படியாவது என் நோயைத் தீருங்கள்" என்று கதறி யழுதார். அழகானந்தர் அருகில் கிடந்த ஒரு எச்சில் சுருட்டை எடுத்துப் பற்ற வைத்து, அப் புகையை ராயரின் வாயில் ஊதினார். அவ்வளவுதான். மந்திரம் போட்டது போல் ராயரின் நெடு நாளைய வயிற்று வலி மாயமாக மறைந்து விட்டது. அவரது மகிழ்ச் சிக்குக் கேட்பானேன்? ராயர் பெரும் செலவந்தர். பணத் தைக் கொண்டு வந்து அழ அழகானந்த தரின் காலடியில் கொட்டினார். சுவாமிகள் அதைத தொடவில்லை. மாறாக, பவழக் குன்றின் மீதுள்ள பவழகிரீச்வரர் ஆலயத்திற்குத் திருப்பணிகள் செய்யும்படி ராயரிடம் கேட்டுக் கொண்டார். அப்படியே செய்து வைத்தார் ராயர். பின்னர் வருடா வருடம் கோயில் ஆராதனைக் காக நெல் மூட்டைகளும் அனுப்பி வைத்தார். ஸ்ரீ ரமண பகவான் தவமிருந்த குகை ஆனால், நாளடைவில் ராயர் குடும் பத்தினர் செய்து வந்த உதவி குறைய ஆரம்பித்தது, கடைசியில் அது நின்றே போய் விட்டது. தற்போது, மடம் தான் கோயிலை நிர்வகித்து வருகிறது. இடிந்து போயிருக்கும் இக் கோயிலில் இ திருப்பணி செய்ய வசதியில்லை என்று கூறிய ஸ்ரீ அம்பலவாண சுவாமிகள், ஸ்ரீ காமகோடி பெரியவர்களின் அருளாசி கிடைத்தால் ஆலயத்தில் அருளா திருப்பணியும் குட முழுக்கும் நடந் தேறிவிடும் என்று கூறினார். பவழக்குன்று மடத்தில் இருக்கும் முருகானந்த சுவாமிகளையும் சந்தித் துப் பேசினேன். தொண்ணூறுக்கு மேல் வயதான அவர், போளூரில் விட்டோபா சுவாமிகளைத் தரிசித்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். அம் மகான் எப்படி உட்காருவார் என்று தாம் உட்கார்ந்து காட்டினார். ஸ்ரீ அழகானந்த ஞானதேசிகர் அவர் கள் 1884-ம் வருடம், சுபானு வருஷம் கார்த்திகை மாதம் உத்திர நட்சத்திரத்தில் விதேக முக்தி அடைந்தாரென்று அவரது சமாதி நிலையத்தில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது: ஆனால் அவா் எப்போது திருவண்ணா மலைக்கு வந்தார் என்பதோ, எத்தனை வயது வரை வாழ்ந்தார் என்பதோ சரியாகத் தெரியவில்லை. பின்னர் குன்றின்மீதுள்ள ஆலயத் தைத் தரிசிக்க நாங்கள் ஏறிச் சென்றோம். நூறாவது படி ஏறியதும், வடப்புறத்தில் காணப்பட்ட ஒரு போர்டை படித்தபோது எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது! பஞ்ச மூர்த்தி கோயில் பவளக் குன்று 1944-ம் வருஷம் முதல் இங்கிருக்கும் சாது இம் மலையில் தபஸ் செய்து கொண்டிருப்பவர். என்று அதில் எழுதியிருந்தது. போர்டு போட்டு விளம்பரப்படுத் திக் கொண்டு தவம் செய்யும் சாது வைக காண வேண்டும் என்று துடித் தோம்! ஆனால் 'கேட்'" பூட்டப்பட் டிருந்தது. "கூப்பிடலாமா?" என்றார் பாப்ஜி. "வேண்டாம், அவர் தவத்தைக் கலைத்த பாவம் நம்மைச் சேர்ந்து விடப் போகிறது'' என்று எச்சரித் தார் சுந்தரம்.