அமர்நீதி நாயனாரும் செங்குந்தர் குலமும்

0

 

அமர்நீதி நாயனாரும் செங்குந்தர் குலமும் 

 அன்புள்ள நம் செங்குந்தர் குல சொந்தங்களே! வருடா வருடம் அமர்நீதி நாயனார் பதிமம் ஆனி மாதம் பூர நட்சத்திரத்தன்று நமது ஊர் அருள்மிகு செல்வமகாளியம்மன் திருக்கோயில் முன் வருகைபுரிந்து கோவணங்களை வற்றுச்செல்லும் நிகழ்வு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? அமர்நீதி நாயனாரின் பதிமம் வருடா வருடம் நமது ஊருக்கு ஏன் வர வேண்டும்? இந்த நிகழ்வினை, நமது 327 செங்குந்தர் பரிபாலன பஞ்சாயத்து சபை ஏன் ஏற்று நடத்தவேண்டும்? நமது செங்குந்த குல சொந்தங்கள் எவ்வாறு இந்த நிகழ்ச்சியுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதன் வரலாறு. சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பண்டைய சோழ வள நாட்டில் பழையாறை (தற்போதைய பட்டீஸ்வரம் அருகில்) என்னும் ஊரிலே வைசியர் குலத்தில் பிறந்த பெரும் செல்வந்தர் ஒருவர் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அன்னதானம் அளித்தும், கௌபீனம் (கீழ்கோவணம்) போன்றவைகளை வழங்கியும் வந்தர். அவர் பெயர் அமர்நீதி நாயனார் என்பதாகும். அவர், திருநல்லூரில் கோச்செங்கட் சோழ மன்னனால் எழுப்பப்பட்ட மாடக்கோயில் சிவத்தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருக்கல்யாண சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய வரும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டிவித்துக்கொண்டு, அவர்களுடைய சுற்றத்தார்களுடன் நல்லூரிலேயே மன மகிழ்ச்சியோடு தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். அவரின் சிவதொண்டினை சோதிக்கும் பொருட்டு ஒருநாள் சிவபெருமான் பிரமச்சாரி வேடம் கொண்டு இரண்டு கௌபீனங்களையும் கோவணங்களையும்) விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்த திருமடத்திற்கு வந்தர். அதைக்கண்ட அமர்நீதி நாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோரும் அவரை எதிர்கொண்டு வணங்கி சுவாமி! தேவரீர்!! இங்கே வருவதற்கு நான் பூர்வ ஜென்மத்தில் என்ன தவம் செய்தேனோ என்று வரவேற்றார். பிரமச்சாரி வேடம் பூண்ட சிவபெருமான் அவரை நோக்கி நீர் அடியார்களுக்கு அன்னதானம் மற்றும் கீழ் கௌபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதை கேள்வியுற்று, உம்மைக் காணவே விரும்பி வந்தோம் என்றார்.இப்போது நமது சொந்தங்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை பற்றி அறிவோம். கௌபீனம் (கோவணம்) என்பது கீழ்கோவணம் அந்த கோவணத்தை மற்ற துணிகளிலிருந்து கீழிக்காமல், கோவணமாகவே நெய்து கொடுத்த நெசவாளிகள் அனைவரும் நமது முப்பாட்டன்கள்!! நமது முன்னோர்கள் அவருக்கு கோவணம் நெய்து கொடுத்ததுமின்றி தங்களால் இயன்றவரை அவரது தொண்டுக்கு உதவி செய்துள்ளனர். அதனை பறைசாற்றும் விதமாக அவரின் பதிமம் வருடா வருடம் நாயனார் முக்தியடைந்த நாளன்று நமது ஊருக்கு வந்து, நம்மிடமிருந்து நெய்யப்பட்ட கோவணத்தை பெற்றுச்செல்லும் நிகழ்வாக நடைபெறுகின்றது. இந்த நிகழ்வு நமது ஊர் செங்குந்தர் சொந்தங்களின் சிவன் மேல்கொண்ட பக்தியினையும் அதற்கு அடியார்கள் நமக்கு அளித்த மிக பெரிய அங்கீகாரத்தையும் விளக்குகிறது. ம் இவ்வருடமும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனாரின் பதிமம் எதிர்வரும் ஆனிமாதம் 8 ஆம் நாள் (23.06.2023) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நமது ஊர் அருள்மிகு செல்வமாகாளியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடுகளும் மற்றும் ஏக தீப ஆராதனையும் - அன்னதானமும் நடைபெற உள்ளது. ஆகவே இதையே அழைப்பாக ஏற்று குறிப்பிட்ட நேரத்தில் நமது சொந்தங்கள் அனைவரும் தவறாது ஒன்றுகூடி இவ்விழாவினை சிறப்பித்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் 327 செங்குந்தர் பரிபாலன பஞ்சாயத்து சபை, சுந்தரப்பெருமாள்கோயில் ஆனி மாதம் 8 ஆம் நாள் (24.06.2023) சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் திருநல்லூர் அருள்மிகு திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான் திருமுன்னர் நடைபெறும் ஸ்ரீ அமர்நீதி நாயனார் துலாக்கோல் உற்சவம் நடைபெறும். இவ்விழாவில் நம் சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு ஈசன் திருவருள் பெற கேட்டுக்கொள்கிறோம். நந்து பிரஸ், சு.பெ.கோயில்







Post a Comment

0Comments
Post a Comment (0)