பெயர் : வே.வடிவவேல் முதலியார்
யூனிட் : Q V O M S & M குரூப் 1 E
தகப்பனார் பெயர் : வேலாயுத முதலியார்
தாயார் பெயர் : சித்திரை வடிவு
மரபு : செங்குந்த கைக்கோள முதலியார்
ஊர் : சங்கரநாராயனர் கோவில் (சங்கரன்கோவில்)
ஜில்லா : திருநெல்வேலி (தற்ப்போதய தென்காசி மாவட்டம்)
மாகாணம் : சென்னை
இராணுவத்தில் சேர்ந்த தேதி : 01.04.1942
இராணுவத்தில் விலகிய தேதி : 15.03.1946
இராணுவத்தில் வகித்த பதவி : சாப்பர் (Elite Combat Engineer )
இராணுவத்தில் விலகிய காரணம் : இந்திய பட்டாளம் உடைக்கப்பட்டது
மெடல்கள் : Over seas batch 1939 - 45
Star : Burma star
பணியில் சேர்வதற்க்கு முன் செய்த தொழில் : நெசவு
தெறிந்த மொழிகள் : தமிழ்,ரோமன்,உருது
Trade & Qualifications : Fitter (Technical role in the Royal Engineers)
வணக்கம் எனது பெயர் பாலகிருஷ்ணன் எனது தந்தையார் பெயர் என்ன வடிவேல் முதலியார் முன்னாள் ராணுவ வீரர் என்னுடைய தகப்பனார் உடைய தகப்பனார் தாத்தா வேலாயுதம் முதலியார் இவர் நெல்லை மாவட்டம் பழைய பேட்டை சேர்ந்தவர் என்னுடைய தந்தையாருடைய தாயார் சித்திரை வடிவு இவர் சங்கரன்கோவில் வட்டம் சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் இவர்கள் திருமணம் முடித்து சிறிது காலத்தில் எனது தாத்தா வேலாயுதம் மரணம் அடைந்து விட்டார்கள் அதைத் தொடர்ந்து என்னுடைய பாட்டி வளர்ப்பில் இருந்தார்கள் சிறு வயது முதல் வறுமையின் பிடியில் எனது தகப்பனார் குடும்பம் இருந்த காரணத்தால் மூன்று வகுப்பு வரைசங்கரன்கோவில் படித்தார் பின்னர் பின்னர் ஓட்டல் தொழிலில் பணி புரிந்தால் அப்பொழுது ராணுவத்திற்கு இந்திய ராணுவத்திற்கு சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பை ஏற்று இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் சங்கரன்கோவில் ஏழு வயது முதல் திரு விஜி பிச்சை முதலியார் அவர்கள் நட்புடன் இருந்தார்கள் ராணுவத்திலிருந்து விடை பெற்ற பின் மீண்டும் நெசவுத் தொழிலில் இறங்கினார் வீட்டில் கைத்தறி நெசவு செய்தார் அப்பொழுது சண்முகத்தம்மாள் மனைவியாக ஏற்றுக் கொண்டு நெஜத்தொழில் புரிந்து வந்தார்கள் குழந்தைகள் 16 குழந்தைகள் பெற்று தற்போது ஒன்பது குழந்தைகளுடன் தனது குடும்பத்தை மிகவும் கஷ்டத்தில் நடத்தினார் பின்னர் நண்பர்உதவியுடன் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை தொடங்கினார் அந்தப் பகுதியில் செங்குந்தர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் ஹோட்டலில் நடந்தது இந்த ஓட்டலில் வறுமையில் வாடும் நெசவாளர்களுக்காக மிகக் குறைந்த விலையில் இட்லி தோசை வழங்கப்பட்டது மேலும் எங்களுடைய ஹோட்டலில் கருப்பட்டி காபி மிக பிரபலமாக பேசப்பட்டது ஹோட்டல் தொழில் கொண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார் எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் எங்கள் குடும்பத்தில் இருவர் மட்டுமே அரசு வேலை மற்றவர்கள் அனைவரும் நெசவுதொழில் இன்று வரை செய்து வருகிறோம் என்னுடைய தந்தையார் பர்மா போரில் இரண்டு தங்க மடல்கள் பெற்றார்கள் மேலும் உலகில் நடந்த புனே நகரில் நடைபெற்ற போரில் குண்டடி பட்டு மீண்டும் கொண்டு அகற்றப்பட்டு பணியில் இருந்தார்கள் மீண்டும் போரில் வெற்றிக்காக மீண்டும் ஒரு தங்க மடல் வாங்கினால் 1946 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது
வீரபாகு வம்சம்
வன்னீஸ்வரர் சாஸ்த்தா