திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் பிரபலமான குடும்பம்.
டி.வி.தேவராஜ முதலியார்.
தேவராஜ முதலியாரின் அப்பா வீராசாமி முதலியார். வீராசாமி முதலியார் திருவண்ணாமலை நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர்.
தேவராஜ முதலியார் 110 ஆண்டுகளுக்கு முன்பு 18 ஏப்ரல் 1908 ஆண்டு பிறக்கிறார். 1944ல் தன்னுடைய 36 வயதில் பஸ் தொழிலை தொடங்குகிறார். அந்த சிறிய வயதில் திருவண்ணாமலையின் எட்டு சாலைகளிலும் நாற்பத்து இரண்டு சொந்த பேருந்துகளை" இயக்கி மோட்டார் மன்னர் என்று பெயரெடுத்தவர்.
அதிகமாக படிக்காதவர் ஆனால் அற்புதமாக பேசுவார் திருமண வீடுகளில் 16 பேறுகளான புகழ், கல்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்று விவரமாய் விளக்கமாய் பேசுவார்.
பதினெட்டு ஆண்டுகள் 1953, 1959, 1965, என மூன்று முறை தமிழக மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்தவர்.
திருவண்ணாமலை நகர்மன்ற தலைவராகவும் வெற்றி பெற்றவர்
முறுக்கு மீசைக்காரர், திருவண்ணாமலையில் "பாண்டியாக்" என்ற விலை உயர்ந்த காரை வைத்திருந்தவர்.
அந்தக் காலத்திலேயே சென்னையில் புரசைவாக்கத்தில் சொந்தமாக வீடு வைத்திருந்தார், புரசைவாக்கம் ஹோட்டல் சரவணபவன் குடும்பத்தினர் இப்போது அந்த வீட்டில் தான் வாடகைக்கு இருக்கிறார்கள் அந்த இடம் இன்றைக்கும் இவருடைய பேரன் வசம்தான் உள்ளது.
சென்னையில் உள்ள ஜெயின் கல்லூரி தொடங்குவதற்கு ஆரம்பத்தில் நிதி கொடுத்து உதவியவர். திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இவருடைய பரிந்துரையில் ஜெயின் கல்லூரியில் சேர்ந்து படித்த வரலாறும் உண்டு.
தேவதாசிகள் ஒழிப்பு சட்டம் மேலவையில் கொண்டு வந்த போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அதை நிறைவேற்ற மிகவும் பாடுபட்டார்.
அவர் ரமணரிஷியுடன் இறக்கும் வரை அவரோடு தொடர்பு கொண்டிருந்தார், திருவண்ணாமலையில் அவர் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இன்னொரு எம்எல்சியும் இருந்தார் அவர் தியாகி நா. அண்ணாமலைப் பிள்ளை அவரும் இவரும் சேர்ந்து முதல்வர் காமராஜருடன் தொடர்பு கொண்டு சாத்தனூர் அணை கட்ட முயற்சி எடுத்து சாதித்தவர்கள்.
ஆரம்பத்தில் தேவராஜ முதலியார் நாத்திகராக இருந்தார் பின்னர் ஆத்திகராக மாறி" யான் கண்ட மறை " " யான். கண்ட மதம்" என்று இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்
இலக்கிய ஆர்வலரான இவர் வட ஆற்காடு மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராகவும் இருந்தார்.
பல நாடகங்களும் எழுதியுள்ளார் இவர் முயற்சியால் திருவண்ணாமலையில் "நூலகம் "
" சப்-கோர்ட் " ஆரம்பித்தார்கள்.
1952ல் சட்ட மன்ற தேர்தலில் தாமரைப்பூ சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
தேவராஜ் முதலியார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் திமுக தலைவர்களில் ஒருவரான ப.உ.ச அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
1965ல் உள்ளாட்சி சார்பாக தேர்ந்தெடுக்க வேண்டிய சட்ட மேலவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தது.
முஸ்லீம் லீக் வேட்பாளரை எதிர்த்து தேவராஜ முதலியார் போட்டியிட்டார்.
அந்த நேரத்தில் தேவராஜ் முதலியாரின்
நண்பரான திமுகவைச் சேர்ந்த ப. உ. ச.
முஸ்லீம் லீக் வேட்பாளரை ஆதரிக்காமல் தேவராஜ முதலியாரை ஆதரித்ததால்
தேவராஜ முதலியார் வென்றார். இதனால் அறிஞர் அண்ணாவுக்கு. ப.உ.ச மேல் வருத்தம் கூட உண்டு. தேவராஜ் முதலியாருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவர் ஞானப்பிரகாசம்
இளையவர் தே. பட்டு சாமி. மூத்தவர் ஞானப்பிரகாசம் பஸ் அதிபர் மோட்டார் தொழிலில் இருந்த அவர் சாகும் வரை இருந்து மரித்துப் போனார்.
இளையவர் தே. பட்டு சாமி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை நகராட்சி தலைவராகவும் வந்தவாசி நாடாளுமன்ற உறுப்பினராகவும்(MP) பதவி வகித்தவர்.
சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை நகரத்திற்கு இவர் நகர மன்ற தலைவராக இருந்த போது குடிநீர் வந்தார்.
அமைதியான மனிதர், 1977ல் திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் ப.உ.சவிடம் போட்டியிட்டு . ப.உ.ச 27148 ஓட்டும் இவர் 25786 ஓட்டும் பெற்று 1362 ஓட்டு வித்தியாசத்தில் பட்டு சாமி ப.உ.ச.விடம் தோற்றுப் போனார்.
இவருக்குஅந்தக் காலத்தில் ஆனைக் கட்டித் தெருவில் சிவாஞ்சிகுளமேற்கு கரையில் பெரிய மாடி வீடு ....
பாலசுப்ரமணியர் தியேட்டர் என்ற சினிமா தியேட்டருக்கும் உரிமையாளரான இவருக்கு அமரேசன், அம்பிகாபதி, குணசேகரன் என்ற 3 ஆண் பிள்ளைகள்.
பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த அமரேசன் அம்பிகாபதி
தாத்தா தந்தையைப் போல அரசியலில் தீவிரமாக இல்லையென்றாலும் திருவண்ணாமலையில் நல்ல பிள்ளைகள் என்று சொல்லும்படி அவர்கள் குடும்ப பெருமையை குறைவில்லாமல் காத்து வருகிறார்கள் ...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் வில்வராணி சிவசுப்ரமணியர் கோவில் இவர்களின் குல தெய்வமாகும்.
தேவராஜ முதலியாரின் பிறந்த தேதி மறைந்த தேதி மற்றும் இவரின் முழு வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்புக்குழு வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.