முதலிலேயே சொன்ன சாமி முதலியார்
குடும்பத்தில் சாமி முதலியார் கூடப் பிறந்தவர் பங்காளி அருணகிரி முதலியார்
சாமி முதலியாருக்கு சிவன் மடத்தெருவில் வீடு என்றால் அவருடைய தம்பி அருணகிரி முதலியாருக்கு அசலி அம்மன் கோயில் தெருவில் பிரமாண்ட வீடு
திருவண்ணாமலை செங்குந்தர் குல இராமு முதலியாருக்கு மகனாக 19ஆம் நூற்றாண்டில் பிறந்தார் அருணகிரி முதலியார்.
அருணகிரி முதலியாருக்கு
ஏ. ராமு முதலியார்
ஏ.நடராசன்
ஏ.அண்ணாமலை என்ற ஆண் பிள்ளைகளும்
அமராவதி, சரஸ்வதி என்ற இரண்டு மகளும் இருந்தனர்
இதில் மூத்த மகன் ஏ. ராமு முதலியார் அவருடைய பெரியப்பா மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியாரைப் போலவே திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக இருந்தார்
ஏ. ராமு முதலியாருக்கு
மகான் சேஷாத்திரி ஆசிரம தலைவர் & திருவண்ணாமலை கோவில் அறங்காவலர்
ஆர்.முத்துக்குமாரசாமி
வழக்கறிஞர் ஆர்.கோவிந்தராஜ் (பைனன்சியர்)
டாக்டர் .ஆர்.அருணகிரி (குழந்தை மருத்துவர்)
ஆகிய மூன்று பிள்ளைகள்
அருணகிரி முதலியார் குடும்பத்திற்கு அசலிஅம்மன் கோயில் தெருவில் வீடுகள் கனடகள்
சாவல் பூண்டி -சமுத்திரம் - அத்தியந்தல் போன்ற ஊர்களில் நஞ்சை புஞ்சை நிலங்கள் இருந்தது
இன்னொரு மகன்ஏ.நடராசன் நகர மன்ற திமுக உறுப்பினராக இருந்தார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய அறங்காவலராக இருந்தார்
அருணகிரி முதலியாருடைய ஒரேமகள்அமராவதி அம்மாள்
இவர் நகர மன்ற உறுப்பினராக இருந்தார்
இவருடைய கணவர் எஸ்.முருகையன்
திருப்பத்தூரை பூர்வீகமாக கொண்டவர்
அருணகிரி முதலியார் பெண்ணான அமராவதி அம்மாளை
திருமணம் செய்து கொண்டார் துரிஞ்சாபுரம் கலசபாக்கம் தொகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினராகவும்
திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும்
திருவண்ணாமலை நகரமன்ற உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர்
வட ஆற்காடு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர்
மிக எளிமையானவர்
திருவண்ணாமலை பகுதிகளில் திராவிட இயக்கத்தையும்
திராவிட முன்னேற்ற கழகத்தையும் வளர்த்த முன்னோடிகளில் முதன்மையானவர்
அந்தக்காலத்தில் திருவண்ணாமலையில் ஒரு குடையை கையில் பிடித்தபடி நடந்தும் குதிரை வண்டியில் பயணித்தும் மக்களுக்கு பரிந்துரை செய்து பணியாற்றியவர்
மற்றொரு பிரமுகர் வக்கீல் நாராயணசாமி முதலியார்
திருவண்ணாமலையின் மிகச் சிறந்த கிரிமினல் வழக்கறிஞர்
பிராமணர்கள் வழக்கறிஞர்களாக கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுக்கு ஈடாக திருவண்ணாமலையில் புகழ் பெற்று விளங்கியவர்
நான் பல முறை அய்யங் குளத் தெருவில் உள்ளஅவருடை பெரிய வீட்டிற்கு என் அப்பாவோடு போய் இருக்கிறேன்
எப்போது பார்த்தாலும் வக்கீல் வீட்டில் கூட்டம் நிறைந்தே இருக்கும்
நெடிய உருவம் யாரையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை
எப்போது பார்த்தாலும் எதையாவது சிந்தித்த வண்ணம் பரபரப்பாகவே இருப்பார்
திருவண்ணாமலை நீதிமன்றங்களில்
10 வழக்கு நடக்கிறது என்றால் அதில் 6 அல்லது 7 வழக்குகளில் திருவண்ணாமலையின் இன்னொரு கிரிமினல் வழக்கறிஞர்
ரங்காச்சாரியும் இவரும் எதிர் எதிர் வாதாடி களாக இருப்பார்கள்
இறக்கும் வரைதிருவண்ணாமலை
பால் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தார்
இலக்கிய ஆர்வலர்
அந்தக் காலத்தில் ப.உ.சண்முகம் அவர்களுடன் சேர்ந்து திருக்குறள் வகுப்புகள் நடத்தியவர்
தேரடித் தெருவில் உள்ள திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் பள்ளி (இப்போது பெண்கள் பள்ளி) யின்சென்ட்ரல் ஹாலில் இவர்களின் திருக்குறள் வகுப்பு நடக்கும்
ஏராளம் பேர் இலக்கிய ஆர்வலர்கள் வருவார்கள் சின்ன வயதில் நானும் கூட பார்த்து இருக்கிறேன்
பாடங்களை கேட்டு இருக்கிறேன்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று திருவண்ணாமலையில் நடைபெறும் அருணகிரிநாதர் திருவிழாவில் அவரைப் பேச அழைத்தால் அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பேசுவார்
ஒரு முறை அருணகிரிநாதர் விழாவில்
" அறம், பொருள், இன்பம், வீடு, "என்ற
தலைப்பில் சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்
நாராயணசாமி முதலியார் " வீடு" குறித்து கடைசியாகப் பேச வந்தார்
மக்கள் எல்லோரும் எழுந்து வீட்டுக்குப்
போய் விட்டார்கள் என்று வேடிக்கையாக சொல்வார்கள் இது அவர் குறித்த அந்தக் காலத்து "ஜோக்"கும் கூட
இவருடைய மகன் பாண்டியன்
அந்தக் காலத்தில் புகழ் பெற்ற சிவாஜி ரசிகர் மன்ற தலைவர்
பஸ் அதிபர்
திருவண்ணாமலை வரலாறு புத்தகத்தில் மேலே கூறப்பட்ட ராமு முதலியார் பற்றிய செய்தி |
மேலே கூறப்பட்ட ராமன் முதலியாரின் மகன் திருவண்ணாமலை கோவில் அறங்காவலராக இருந்த முத்துக்குமார சுவாமி முதலியார் |