சங்க காலம் முதல் வரலாறு சிறப்புடன் வாழ்ந்துவரும் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் முருகப்பெருமானின் தலை தளபதிகளாக இருந்த வீரபாகு உள்ளிட்ட நவ வீரரகள் ஒன்பது பேர் வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று பல கால கல்வெட்டு, செப்பேடு, இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் கூறுகிறது.
இதுநாள் வரை வீரவாகு உள்ளிட்ட நவ வீரர்களுக்கு பத்திரிக்கைகளில் பயன்படுத்துவதற்கு முறையான ஓவயம் இல்லாத காரணத்தினால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு முயற்சியால் இவர்களுக்கு ஓவியம் உருவாக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் செங்குந்த கைக்கோளர் சமுதாய மக்கள் தங்களின் திருமண பத்திரிக்கை, கோவில் விழா பத்திரிக்கை, பேனர்களில் இந்த வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களின் படத்தை பயன்படுத்தவும்.
Photo Download link: https://drive.google.com/file/d/1nY18_hGxXrZYt5YYQ54F9nF6zSHrrOVj/view?usp=drivesdk
இந்த செங்குந்த கைக்கோளர் சமுதாய மக்களின் பிறப்பு, திருமணம், இறப்பு, மற்றும் கோவில் சடங்கு மற்றும் பாரம்பரியம் போன்ற இடங்களில் பாடப்படும் விருத்தம் பாட்டுக்கள் மற்றும் வாக்கியங்களும் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சத்தில் வந்தவர்கள்தான் செங்குந்த கைக்கோளர் என்ற தகவல்களை உறுதிப்படுத்துகின்றனர்
இந்த வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சத்தில் வந்தவர்கள் தான் செங்குந்த கைக்கோளர் சமுதாய மக்கள் என்பதனால் ஆறுபடை வீடு ஆறு கோவில்களிலும் இவர்களுக்கு சிறப்பு மண்டகப்படி, கொடி சேலை கொடுத்து திருவிழாவை தொடங்கும் உரிமை, சூரசம்ஹாரம் செய்யும் உரிமை, மடம், மண்டபம் வைத்துள்ள ஒரே தமிழ் சமூகமாகம்.
முருகப் பெருமானின் முதல் கடவுளாக வணங்கும் ஒரே தமிழ் மக்களான செங்குந்த கைக்கோளர் சமூகமாகும் இந்த மக்கள் வாழும் அனைத்து ஊர்களிலும் தங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையில் ஆயிரக்கணக்கான முருகன் கோவில்களை கட்டி இன்றுவரை வழிபட்டு வருகின்றனர்.
தொல்லியல் துறை கல்வெட்டு செப்பேடு ஆதாரங்கள்👇👇
https://senguntharmudaliarhistory.blogspot.com/2020/04/blog-post_12.html
நவவீரர்கள் பட்டியல்
1. வீரபாகு செங்குந்தர்
2. வீரகேசரி செங்குந்தர்
3. வீரமகேந்திரர் செங்குந்தர்
4. வீரமகேஸ்வரர் செங்குந்தர்
5. வீரபுராந்தர செங்குந்தர்
6. வீரராக்கதர் செங்குந்தர்
7. வீரமார்த்தாண்டர் செங்குந்தர்
8. வீரரந்தகர் செங்குந்தர்
9. வீரதீர செங்குந்தர்
இந்த ஓவியம் உருவாக்க நிதி உதவி செய்தவர்கள்
மலேசியா சுரேந்தர் முதலியார்
மனோஜ் குமார் முதலியார்
செய்யாறு விழிவேந்தன் முதலியார்
சேலம் சஞ்சீவி முதலியார்
சிவகிரி கவிபாரதி முதலியார்
விருதாச்சலம் கோகுல் முதலியார்
பழனி மனோஜ் முதலியார்