பிறப்பு:
சேலம் மாநகரில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் சங்கர முதலியார் - தாயார் உண்ணாமலை அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக 23-3-1941 -ல் நீதியரசர் ஜெகதீசன் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய ஜெகதீசன் பள்ளிப் படிப்பை முடித்து, சட்டக் கல்லூரியில் நுழைந்து சிறப்பாக படித்து வழக்கறிஞர் படிப்பை படித்து முடித்தார்.
வாழ்க்கை
உள்ளூரிலேயே வழக்கறிஞராகி, மாமன் மகள் திருமதி.மோகனா அவர்களை மணந்து, இரண்டு மகள்கள், ஒரு மகனும் பெற்று வளர்த்து , நல்ல கல்வியைக் கொடுத்து, சிறப்புடன் வாழ செய்துள்ளார்.
நீதியரசர் ஜெகதீசன் தந்தையும், இவரும் சொந்த ஊரில் ஒரே தொழில் செய்தால் சிறப்பல்ல எனக் கருதி நீதியரசர் ஜெகதீசன் சென்னைக்கு குடியேறி அங்கு சிறப்பாக வழக்கறிஞர் தொழிலை செய்து வந்தார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகி, உண்மை, நேர்மையுடன் தொழில் புரிந்து, மேன்மேலும் வளர்ந்து புகழ் பெற்றார். பல துறை நண்பர்கள் நட்பு கிடைத்தது.புகழ் பெற்றவர்களும் இவரிடம் ஆலோசனைகள் கேட்பர். தங்கள் வழக்குகளை இவர் பொறுப்பில் தருவார்கள்.
திறமையின் வெளிப்பாடுகளால் வளர்ச்சியால் - நீதிபதி பதவி, இவரைத் தேடி வந்தது. ஏற்க விருப்பம் இல்லை. வழக்கறிஞர் தொழிலில் சுதந்திரம், தன்னுரிமை மனச்சான்று படி நடத்தல், நண்பர்கள் பிரிவு - இவைகளுக்கு விளைவிக்கலாம் என்ற சந்தேக உணர்களே - காரணங்கள்.
பிறிதொரு காலத்தில், பல உச்ச மற்றும் உயர் நீதிபதிகளின் அறிவுறுத்தல்களை ஏற்று , சென்னை (வளாக அளவிலான பணிபுரிய ஒப்புதல் தந்து) உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஏற்றார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. பராசரன் அவர்கள் சென்னை ஜூனியராக பணியாற்றியுள்ளார்.
நீதிபதியாக பொறுப்பேதற்கு முன் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய பல வெற்றிகளை அரசிற்கு தேடித்தந்தார். பொன்னையன் அமைச்சராக இருக்கும்போது தமிழக அரசு மது விற்பனை வழக்கு ஒன்றில் வெற்றி பெற்றாலும், இந்த வழக்கில் தரப்பில் அரசு மீது தவறு இருந்ததால் மனச்சான்றுக்கு கட்டுப்பட்டு அரசு வழக்கறிஞர் பதவி விலகினார். இவர் போன்ற திறமையான வழக்கறிஞராக அரசுக்கு வேண்டுமென அமைச்சர் பொன்னையன் பலமுறை வேண்டுகோள் விடுத்த பின்பும் இவர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பதவி விலகினார்.
நீதியரசர் ஜெகதீசன் - எந்த சூழலிலும் நேர்மையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்தார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில் அவர்கள் தொடர்புடைய புகழ் பெற்ற நட்சத்திர ஓட்டல், விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டதை கண்டறிந்து ஆளுங்கட்சி என்று அவர்களுக்கு ஆதரவாக இருக்காமல் அந்த ஓட்டலை இடிக்க ஆணை பிறப்பித்தார். தமிழக அரசுவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார். இதன்மூலம் நீதியரசர் ஜெகதீசனின் தொழில் நேர்மை தெரிகிறது.
அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த பொழுது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வளர்ப்பு மகன் திருமண விழாவில் அளவு மீறிய மின் அலங்கார விளக்குகளுக்கு ஆட்சேபணை வழக்கில் மணமக்கள் மனம் பாதிக்காமல் இருக்க, திருமண நாள் தள்ளி, உடன் அப்புறப்படுத்த ஆணையிட்டார்.
சட்டமன்ற தேர்தல் காலம் - முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கட்கு - திரையுலக அனைத்து துறையினர் ஒன்றி இணைந்து பொன் விழா நடத்த திட்டமிட்டதற்கு, அ.தி.மு.க.அரசு அனுமதி தர மறுத்தது. விழா நடத்த அனுமதி கோரிய வழக்கு நீதியரசர் முன் வந்தது. தமிழ் திரையுலகம் எடுக்கும் விழா ! திரு.கருணாநிதி அவர்களை தலைவராகக் கொண்ட தி.மு.க.எடுக்கும் விழா அல்ல !தி.மு.க.வைக் கேட்டு இவ்விழா எடுக்கப் படவில்லை. இதுவே - கருத்தாழமிக்க தன்னுடைய வசனங்களால் தமிழ்ப் படங்களின் போக்கும் பெருமளவிற்கு மாற்றிய, ஒரு கதாசிரியர், வசனகர்த்தாவுக்கு எடுக்கப்படும் விழா. எனவே, மாநில அரசு அனுமதி மறுத்ததை ரத்து செய்கிறேன் என அரசு செயல் தவறு என துணிந்து தீர்ப்பு வழங்கி, காவல்துறையினர் பாதுகாப்போடு அவ்விழாவை நடக்க உத்தரவு செய்தார்.
பல்வேறு விதமான வழக்குகளில், உண்மைகளைக் கண்டறிந்தும், சட்டநெறிகளைத் தழுவியும், நடுநிலையுடன் தீர்ப்பு வழங்குவார். அப்படிப் பட்ட செயல்பாடுகள் சிறப்பாகவும், தனித்தன்மை கொண்டதாக இருந்தன. நீதிமன்ற வளாகத்தில் நடக்கும், வழக்குகள் நடத்துபவர் கால விரயம், கட்டுக்கடங்காத செலவு, வீண் செலவுகள் போன்ற வற்றை மனதில் கொண்டு, வழக்கை காலம் கடத்தாமல் தீர்ப்புகளை வழங்குவார். நீதியரசரின் கண்டிப்பு, கருணை, வழக்கை விசாரிக்கும் முறை என பலவற்றிலும் சிறந்து விளங்கினார்.
நீதிமன்ற பரிபாலனத்தில் ,பொய்யான வழக்குகள், ஏமாற்று வேலைகள், திட்டமிட்டு வழக்கை காலதாமதம் படுத்துதல் - இவரிடம் செல்லாது, எடுபடாது ! வழக்கை தள்ளுபடி செய்வார்.
நீதியரசர் ஜெகதீசன் முன் - எத்தனையோ சிக்கலான வழக்குகள் வந்த போதிலும், தனக்கே உரிய, தனித்திறத்தால் தீர்ப்பளிப்பார்.! இவர் தீர்ப்பை மேல் முறைகேடுகளுக்கு எடுத்துச் சென்றாலும், இவரது தீர்ப்பு சரியானது என உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு சமயம் - தலைமை நீதிபதி திரு. லிபரான் அவர்கள் நீதியரசரை தன் அறைக்கு அழைத்து, உங்களுக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு செய்யட்டுமா எனக் கேட்க - எனது நீதிபரிபாலனத்தில் - நீதி, நேர்மை, நியாயம், நடுநிலை தவறியது இல்லை ! எனக்கு எதுவும் நேராது - எனக் கூறி, பாதுகாப்பைத் தவிர்த்தார்.! இறையருள் மீதும் ,மனச்சாட்சி மீதும் எத்தகைய நம்பிக்கை !
பார் அசோசியேசன் செகரட்டரியாக பதவி ஏற்று, பார் அசோசியேசன் 125 / -வது ஆண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினார்.
ETERNAL AND EVER GROWING PROBLEM OF ENCROACHMENTS - என்கிற புத்தகத்தை நீதியரசர் ஜெகதீசன் அவர்கள் எழுதி, வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர் திரு காந்தி அவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து கௌரவித்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் - இவரது தந்தை திரு.A. சங்கர முதலியார் அவர்கள் பெற்ற ஃபிரிமேனஸரியில் உயர்ந்த ரேங்க் -இவரும் பெற்றது - சிறப்பு
வழக்கறிஞர் தொழிலில் வயது உச்ச வரம்பு இல்லை நீதிபதி - அரசு பணியாளர் பணி ஓய்வு வயது உண்டு ! காலம் - தன் கடமையைச் செய்ய தவறுவது இல்லை! முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருந்து - சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணி செய்தார் 2003 - மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
பிரியா விடை தரும் வகையில் - பிரிவு உபசாரங்கள் தந்த குழுக்கள் வரிசை :-
மெட்ராஸ் பார் அசோசியேஷன், உயர் நீதிமன்றம், அட்வகேட் அசோசியேஷன், மெட்ராஸ் ஐ கோர்ட் அட்வகேட் அசோசியேஷன் (மெகா அசோசியேஷன்), உயர் நீதிமன்றத்தில் லாரன்ஸ் சேம்பர் - முதலியன.
பிரிவு உபசார விழாவில் -சீனியர் வழக்கறிஞர்களாக இருந்த திருவாளர்கள் பி.எச். பாண்டியன், காந்தி, ஆர். கிருஷ்ணமூர்த்தி, கே. எஸ். நடராஜன், மோகன், பராசரன், ஆர். சண்முகசுந்தரம், ஜி. மாசிலாமணி, டி.ஆர்.மணி மற்றும் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் திரு என். ஆர். சந்திரன் போன்றவர்கள் வாழ்த்தியது - பெருமைக்குரிய நிகழ்வு !
நீதியரசர் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகள் இன்னம் உள்ளன. நீதிமன்ற உச்ச, உயர் நீதிபதிகள் பட்டியல் மிக நீளமானது. புகழ் படைத்த பல செல்வந்தர் இவரின் புகழ், பெருமைகள் அறிந்து இவருடன் நட்பு கொண்டு பழகினார்கள் !
சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் நீதியரசராக பணி புரிந்தார்! குறைந்த கால பணியில் - நிறைவான பேரும் , புகழும் பெற்றார்- என்பது தனிச் சிறப்பாகும் !
இந்திய நீதிபரிபாலனம் - துறையில் , நீதியரசர் அவர்கட்கு ஒரு தனி மரியாதை - இன்றளவும் உள்ளது !
மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் , தலைமை நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் உள்பட, இவரது நேர்மையும், வழக்கை கையாளும் திறத்தையும் அறிந்து பாராட்டி, இவருடன். நட்புடன் பழகினார்கள் - என்பது குறிப்பிடத் தக்கது.
உண்மை, நேர்மை, திறமை மிகுந்த நமது நீதியரசர் ஜகதீசன் அவர்களை மத்திய அரசாங்கம் இண்டலகசுவல் பாராட்டி அப்பீல் போர்டு -(அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீடு அமைப்பு ) தலைவர் பதவி தந்தது. வெறும் மூன்று ஆண்டுகளில் 830 - வழக்குகளை இவரது தலைமையிலான தீர்ப்பாயம் தீர்த்து வைத்தது !
நமது மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் - அகில இந்தியத் தலைவராக விளங்கும் செயின்ட் ஜான் அவசர ஊர்தியில் தமிழக தலைமைப் பதவியை தமிழக ஆளுநர். மேதகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் கரங்களால் உத்திரவு பெற்று, தொண்டு புரிகிறார்.
தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் நீதியரசர் அவர்களைப் பாராட்டி, விருது தருகிறார்கள்! மற்றும் உச்சமன்ற நீதிபதிகள், மாநில உயர் நீதிபதிகள், பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறும் - நமது நீதியரசர்! வண்ணப் படங்களில் - கண்கொள்ளா காட்சிகள் !
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தொடர்பு:
நீதியரசர் - பொறுப்பில் இருந்த போதிலும், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க வளர்ச்சிக்கும், சொத்து பாதுகாப்புக்கும் துணை நின்றார் முன்னால் தலைவர் M.P. நாச்சிமுத்து முதலியார், தொடர் தலைவர் J. சுத்தானந்தன் முதலியார் அவர்களும் ஆலோசனைகள் தருவாா். விற்பனை செய்ய இருந்த - வள்ளல் சபாபதி முதலியார் வளாகத்தை தக்க வைத்து - பதிவாளர் திரு.C.K. குமாரசாமி அவர்களைத் தாளாளராக்கி - மெட்ரிகுலேசன் பள்ளி தொடங்க வைத்தார்.
கல்வியில் நமது இளைய தலைமுறையினர் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. மாநில, மாவட்டச் சங்கங்கள் நடத்தும் ஊக்கப் பரிசு தரும் விழாக்களில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து, தானும் பல இலட்ச்சக்கணக்கில் நிதி உதவி பங்களிப்பு தருவார். பல லட்சங்கள் அவரால் பரவலாக தரப்பட்டுள்ளது. மேலும், கொரானா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் மாவட்டச் சங்க வழி - வறுமையில் வாடும் செங்குந்தர் நெசவாளர்கட்கு, பரவலாக சில இலட்சங்கள் நன்கொடையாக அளித்துள்ளார்.
அம்பா சங்கர் கமிஷன் ஆய்வின் போது, அடித்தள செங்குந்த நெசவாளர் நிலை வீடியோ படமெடுத்து, கமிஷன் முன்வைத்து, மேற்பட்டோர் பட்டியலில் இணைக்க இருந்த நம்மை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் தக்க வைக்க - தலைவர் J. சுத்தானந்தன் அவர்கட்கு ஆலோசனைகள் தந்து, வெற்றி பெற வைத்தார்.
2019 -ல் டாக்டர் ந. கோவிந்தசாமி செங்குந்தர் நூற்றாண்டு விழாவில் கலந்து, சிறப்புரை ஆற்றினார். விழாவில் - புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து செங்குந்தர் மற்றும் புதுச்சேரி மாநில செங்குந்தர் அறக்கட்டளைத் தலைவர் திரு.வி.பி.ராமலிங்கம், திருமதி வசந்தா சுத்தானந்தம், பின்னி மில் அதிபர் சேர்மன் திரு.நந்தகோபால், SES Trust தொண்டு மன்றத் தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன், திரு. ஆரணி சிவா - போன்றவர்கள் இவரிடம் வந்து கலந்து பேசினார்கள்.
நமது நீதியரசர் குடியாத்தம் கல்விக்காவலர் திரு.கே.எம்.கோவிந்தராசனார் பிறந்த நாள் விழாவில் பல ஆண்டுகள் தவறாது கலந்து கொண்டு சிறப்புரை வழங்குவார்.
நமது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க பல மாநாடுகளில் - சிறப்பு அழைப்பாளராக கலந்து, சங்க நலம், சமுதாய நலம் கருதும் நல்லுரைகள் ஆற்றுவார். மாநாடு ஒன்றில், நீதியரசர் T.N.சிங்காரவேலு அவர்கட்கு, "செங்குந்தர் சுடரொளி" விருது வழங்கி, கௌரவித்தார்.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய T.R.ராமசாமி IAS, திரு.சங்கரசுப்பையன் IAS, திரு.ஞானசம்பந்தம் IPS, திரு.P.K. சுவாமிநாதன் செங்குந்தர்., அவர்களுடன் நட்பு பாராட்டினார்.
தொண்டு மன்றத்தில் இணைய வைத்தார்.
செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் (SES Trusr) தொடங்கவும், தமிழக அரசு சலுகைகள் பெறவும் D.A.S. பிரகாசம் செங்குந்தர் IAS அவர்கட்கு ஆலோசனைகள் நல்கினார்.
நீதியரசர் மாண்புமிகு ச.ஜெகதீசன் அவர்களின் ஆலோசனை பெற்றுதான் தொண்டு மன்றம் 1984இல் ஆரம்பிக்கப்பட்டது, இது வரலாறு, அதோடு 1981 இல் சங்கரன்கோயிலில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்த மகா ஜன சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுகுழுவில் சபாபதி பள்ளி இடம் ரவுடிகளின் தொந்தரவு காரணமாகவே விற்க தீர்மானம் இயற்றியதை தனி ஒரு நபராக நமது அன்புக்குரிய நீதியரசர் . மாண்புமிகு.ச.ஜெகதீசன் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு சபாபதி பள்ளி உருவாக்கப்பட்டது இதுவும் வரலாறு நீதியரசரின் துணை சங்கத்திற்கும் சமுதாயத்திற்கும் இன்று வரை பலமான அரணாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
வாரியார் சுவாமிகள் மீது - பக்தி
செங்குந்தர் குல திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு விழாவில் அறநிலையத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசு செங்குந்தர் அவர்கள், E.S.S. இராமன் செங்குந்தர் ex MLA, மாண்புமிகு. இராம.வீரப்பன் அவர்களுடன் கலந்துரை யாடினார்!
தமிழ்த் தொண்டு
சென்னை தமிழறிஞர் பேரவையின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு " பைந்தமிழ் காவலர் " என்ற பட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குமரி ஆனந்தன் அவர்களால் தரப்பட்டது. புதுச்சேரி கம்பன் விழாவில் பல முறை கலந்து சிறப்புரை ஆற்றியுள்ளார். கி.ஆ. பெவிசுவநாதம் அவர்கள் பிறந்த நாளில் - மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் கௌரவிக்கப் பட்டார்.
கலைத் தொண்டு
மைலாப்பூர் ஆர்ட்ஸ் அகாடமி தலைவராக பொறுப்பேற்று, பல விழாக்கள் நடத்தி, திரு. ஜெகத்ரட்சகன், திரு.கருமுத்து தியாகராஜ செட்டியார் பல கலைஞர்களை அழைத்து கௌரவித்தார். வெள்ளி விழாவிற்கு மேதகு. தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை அழைத்து கௌரவித்தார்.
கல்லூரி, பள்ளி - நிர்வாக தொண்டு!
சிறப்புமிக்க சென்னை - எத்திராஜ் முதலியார் கல்லூரி, பள்ளி நிர்வாகக் குழு தலைவராக, பத்து ஆண்டுகள் பணிபுரிந்து, கல்லூரி வளாக, கட்டிட வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், பிற வளர்ச்சிக்கும் பாடுபட்டார். பள்ளி நிர்வாகம் விழா நடத்தியது வருகை தந்த மேனாள் குடியரசு தலைவர். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள் இவரைப் பாராட்டினார்.
இறை பக்தி - தொண்டு
நீதியரசர் குடும்ப குல பெண் தெய்வ வீரபாண்டி அங்காளம்மன் கோயிலைப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
நமது நீதியரசர் சிறந்த பக்திமான் ! திருச்செந்தூர் தங்கத்தேர் முதல் மந்தைவெளி ஐயப்பன் கோயில் தேர் இழுப்பது வரை ஆனந்தம் கொள்வார். தன்னை நாடிவந்து கோயில் திருப்பணிகளுக்கு வேண்டிய நிதி கேட்பவர்க்கு உதவிகள் புரிவார்.
நல்லதொரு குடும்பம் - பல்கலைக் கழகம்
நமது நீதியரசருடன் பிறந்தவர்கள் ஐவர். மூன்று சகோதரிகள் இரண்டு சகோதரர்கள். அவர்கள் முறையே -ஸ்ரீமதி.திலகவதி, ஸ்ரீமதி லீலாவதி, நீதியரசர்த ஜெகதீசன், யக்கியசாமி,திரு. பெருமாள், ஸ்ரீமதி வசந்தா. அனைவரும் மணமாகி சிறப்புடன் வாழ்கிறார்கள் !
நமது நீதியரசர் - திரு.ஜெகதீசன்- திருமதி.மோகனா தம்பதியர்க்கு-இரண்டு மகள்கள், ஒரு மகன் முறையே வித்யா, நித்தியா, செந்தில். இவர்கள் திருமணமாகி நலமுடன் வாழ்கிறார்.
தம்பதியர்கள் வருமாறு :
திருமதி.வித்யா - திரு.பிரபாகர் ,
திருமதி.நித்தியா -திரு.சிட்டிபாபு ,
திரு.செந்தில் -கீர்த்தி .
அனைவரும் சிறப்புமிக்க உத்தியோகங்களில் பணிபுரிந்து, சந்ததிகளுடன் நலமுடன் வாழ்கிறார்கள்.
நீதியரசர் - திரு.S.ஜெகதீசன் - திருமதி.மோகனா அவர்கள் 50 வது திருமண நாள் Hotal Hilton- ல் நடந்தது. மாண்புமிகு நீதியரசர் திரு. வீராசாமி அவர்கள் கலந்து கொண்டார். பல VIP - கள் கலந்து கொண்டனர். 23-3 -2001 - அன்று நீதியரசரின் அறுபது வயது நிறைவு மணிவிழா - வைதீக முறைப்படி மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், VIP -க்கள் சூழ சிறப்பாக கொண்டாடப் பட்டது!
சதம் கண்ட குந்தர் சங்கம் - நூல் வெளியீடு புதுச்சேரி ஓட்டல் கிரீன் பேலஸில் -5-10-2019 அன்று நடந்த " சதம் கண்ட குந்தர் சங்கம் " நூல் வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்டு தென்னிந்திய மகாஜன சங்கம் செய்யத் தவறிய பணியை தனிநபராக, பல ஆய்வுகளும் கண்டறிந்து , கால வரலாறாக " சதம் கண்ட குந்தர் சங்கம் " நூலை உருவாக்கியுள்ளார். அதனை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நமது முன்னோர்கள் நமது சங்கத்தையும், சமுதாயத்தையும் எப்படியெல்லாம் தொண்டாற்றி, கட்டிக் காத்தார்கள் என்பது அறிய உதவும் அழியாத கால வரலாற்று பொக்கிஷம் ! என போற்றி மகிழ்கிறேன் ! வாழ்த்தி மகிழ்கிறேன் ! என்றார். விழாவில் உடன் -புதுச்சேரி.சட்டசபை , சபாநாயகர் மாண்புமிகு.தி ரு.வி.பி.சிவக்கொழுந்து, சந்திரயான் புகழ் இஸ்ரோ விஞ்ஞானி திரு. Dr. மயில்சாமி அண்ணாதுரை, அண்ணாமலை பல்கலைக்கழகம் , துணை வேந்தர் Dr. முருகேசன் வேலாயுதம், சமுதாய பொருளாதார தொண்டு மன்றம், தலைவர் திரு.இரா. ராமகிருஷ்ணன், NLC INDIA LIMITTED, தலைமை பொதுமேலாளர் திரு.ஆர். மோகன், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி - ஆகியோர் உடன் கலந்து சிறப்பித்தார்கள்.
நீதியரசர் - வாழ்க்கை வரலாறு - வெளியீடுகள்
நமது நீதியரசர் - வாழ்க்கை வரலாறு புத்தகம் முதன் முதலில் திரு. இராணி மைந்தன் அவர்களால் எழுதப்பட்டு விழா நடத்தி வெளியிடப் பட்டது ! அதனைத் தொடர்ந்து, அப்புத்தகத்தில் விடுபட்ட பல விபரங்களை உள்ளடக்கி , சிறப்பான புத்தகம் - புதுச்சேரி - திரு.ப.மீ.பாபுஜி அவர்களால் -புதுச்சேரியில் வெளியிடப்பட்டது !
நமது பிறப்பு -இறையருளால், இயற்பியல் சார்ந்தது ! உயிர்களின் பரிணாமங்களின் உச்சம் - மனிதர். நல்ல குலத்தில் , நல்லவர்கட்கு, நற்குணங்கள், நன்னெறி உடையவராகப் பிறத்தல் - தவப்பயன் ! பிறந்து, வளரும் நாளில் பெற்றோர் காட்டும் நல்வழியில் நடக்க வேண்டும் ! வளர்ந்து வாழும் நாளில் - அறநெறிகள், நற்பண்புகள், நன்னடத்தை வழி வாழ வேண்டும் ! பொதுநலம் போற்றி வாழ வேண்டும் ! இப்படி வாழ்ந்தால் , நாம் கடந்து வரும் பாதையில் நம் காலடிகள் பதிந்து, நம் காலத்திற்குப் பிறகும் நமது பெயரும், புகழும் நிலைத்திருக்கும் ! அப்படிப் பட்ட சிறப்பான வாழ்க்கையை நமது நீதியரசர். திரு.ச.ஜெகதீசன் அவர்கள் வாழ்ந்து வருகிறார் ! நமக்கெல்லாம - வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறார் ! நமது குலக்கடவுள் திருமுருகன் திருவருளால் - நலமும் , வளமும் பெற்று இனிது வாழ்க ! வளர்க !!
தகவல் - படங்கள் - உதவி : ராணி மைந்தன் எழுதிய "ஜஸ்டிஸ் ஜெகதீசன் வரலாறு" - புத்தகம்.
கட்டுரை எழுதியது: காஞ்சிபுரம் திரு.துரை சௌந்தரராசன்
கட்டுரை வெளியீடு: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு
நீதியரசர் ஜகதீசனின் தாத்தா ஆறுமுக முதலியார் |