டி.ஏ. ஆதிமூல முதலியார் ex Chairman

0



செங்குந்தர் கைக்கோளர் மரபினர்கள் பெரும்பான்மையாக வாழும் குடியாத்தம் நகரின் முன்னாள் நகர்மன்றத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் 

 இவர் குடியாத்தம் நகரில் வளர்ச்சிக்கும் அப்பகுதி செங்குந்தர் நெசவாளர்களின் வளர்ச்சிக்கும் உழைத்தவர்

குடியாத்தம் செங்குந்த கைக்கோளர் குல தியாகி D.A. ஆதிமூலம் முதலியார் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் தீவிர ஈடுபட்டு, தன்னலமற்ற பொதுத் தொண்டு புரிந்தவர். தனது 90 வயதிலும் நாட்டு முன்னேற்ற வேட்கை யுடன் வாழ்ந்து வருகிறார். 

துருகம் ஆறுமுகம் செங்குந்தர்- குப்பம்மாள் தம்பதியருக்கு 1-1-1904 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்து திண்ணைப்பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் படித்து சென்னையில் சீனியர் கேம்ப்ரிட்ஜ் பயின்று கொண்டிருந்தபோது உத்தமர் காந்தி, சரோஜினி நாயுடு, சத்திய மூர்த்தி, காமராஜர் போன்ற தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு, படிப்பை நிறுத்திவிட்டுக் காங்கிரஸ் கட்சியின் தீவிரத்தொண்டர் ஆனார்.

1924ல் இவரது பெற்றோர், முனியம்மாள் என்ற நங்கையை மணம் செய்துவைத்து இவருடைய கவனத்தை நெசவுத் தொழிலுக்குத் திருப்ப முயன்றனர். ஆனால் மற்ற மூன்று மகன்களும் தொழில் புரிய, இவர் மட்டும் கட்சிப்பணியில் முழுநேரமும் ஈடு பட்டிருந்தார்னார். 

1930ல் உத்தமர் காந்தி உப்பு சத்தியாக் கிரகம் அறிவித்தபோது, இவர் குடியாத்தத்தில் ஒரு தொண்டர்படை அமைத்து, அதன், தளபதியாக ஒரு பெரிய ஊர்வலம் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கலங்கி காவல் துறையினர் இவரையும் மற்றும் ஐந்து பேரையும் சிறைப்படுத்தினர். 

மக்கள் கொந்தளித்து 7 கள்ளுக்கடைகளை யும் 6 சாராயக்கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தினர் ஊரே அல்லோல கல்லோலப் பட்டது. உள்ளூர்ச் சிறையில் வைக்கப் பயந்து ஆந்திரப் பகுதியிலிருந்த பெல்லாரி சிறைக்கு ஆறுபேரையும் கொண்டு சென்றனர். 

இராஜாஜி முதலிய தலைவர் களுடன் அந்தச் சிறையில் ஒரு ஆண்டு இருந்து விட்டு வெளிவந்தார். 

இவர் 1937ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்த போது குடியாத்தம் நகராட்சித் தேர்தலில் நீதிக் கட்சியைத் தோற்கடித்து நகராட்சி துணைத்தலைவர் ஆனார். 1939ல் இரண்டாம உலகப்போர் மூண்டதும் அனைவரும் பதவி விலகினர். 

1942, ஆகஸ்ட்டு 9 ஆம் தேதி பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், என்ற முறையில் கலந்துகொண்டார். Quit India (வெள்ளையனே வெளியேறு)' Do or Die (செய் அல்லது செத்துமடி) என்ற உத்தமர் காந்தியின் இறுதி அறை கூவலை ஏற்று வெள்ளையர் ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டார். பம்பாயிலிருந்து தலைமறைவாகிக் குடியாத்தம் வந்த ஏழு தீவிரவாத நண்பர்களைக் கொண்டு ரயில் நிலையம் போகும் வழியில் உள்ள செதுக்கரை கிராமத்தில் தந்திக்கம்பிகளை அறுக்க ஏற்பாடு செய்தார். 

தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டு அந்த வட்டாரத்தில் காவல் துறைக்குப் பெரும் பீதி ஏற்பட்டது, சுமார் 10 மாதங்கள் தலைமறைவாக இருந்தார். மாறுவேடத்தில் ஊர் ஊராகச்சென்று காவல் துறை உணர்ச்சியூட்டி வந்தார். கடைசியாக, பட்டு என்ற கிராமத்தில் இருப்பதைத் துப்பறிந்து காவல்துறை படையுடன் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 

விசாரணைக் காலத்தில் குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் சிறைச்சாலை வைத்துத் துன்புறுத்தி காவல் சென்று களில் துறையினர் பழி தீர்த்துக் கொண்டனை விசாரணை முடிவில் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டார். 

1942 ஆச ஸ்டு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் குடியாத்தத்தில் இவர் ஒருவர் மட்டுமே. ஆகஸ்டு தியாகி என்று மக்கள் குறிப்பிட ஆரம்பித்தனர். 

1943க்குப் பிறகுதான் தன் வாழ்க்கை யில் முதல் முதலாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார். அதுவரை கூட்டுக்குடும்பம். இவரையும் இவரது மனைவி மற்றும் மகனையும் கவனித்துக் கொண்டது. சம்பாதிக்கவில்லை என்ற குறையிருந்தா லும் இவரது பெற்றோர்களும் சகோதரர் களும் இவர் நாட்டுக்கு உழைப்பது பற்றிப் பெருமைப்பட்டனர். 

நெசவுத்தொழில் தொடர்பான சாயமருந்து மூன்று மாவட்டங் களில் விற்பனை செய்யும் வியாபாரத் தைத் தொடங்கினார். பொதுப்பணியும் தொடர்ந்தது. 1947ல் நாடு விடுதலை பெற்றபின் தியாகிகளுக்கு நிலம் வழங்கப்பட்டபோது, தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். 

1952ல் குடியாத்தம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் மக்கள் மெச்சும் வகையில் பணி புரிந்தார். 

மற்றும் குடியாத்தம் நகரக் கூட்டுறவு வங்கியின் தலைவராக 1952 முதல் 12 ஆண்டுகள் பணிபுரிந்து அதற்குச் சொந்தக் கட்டிடம் அமையவும் மக்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கவும் பாடுபட்டார் மேலும் படவேட்டம்மன் கோயில் காவலர் குழுத்தலைவராக இருந்து அந்த கோயிலுக்குச் சொத்து சேர்த்து வைத்தார், கே.வி. குப்பம் அருகில் உள்ள மகாதேவ அடிவாரத்தில் ஆடிக்கிருத்திகை தோறும் 50 ஆண்டுகளாகத் தண்ணீர்ப்பு பந்தல் நடத்தி வருகிறார். சிறிய மடமும் கட்டியுள்ளார். மலை அங்கே ஒரு 

படிப்பில் ஆர்வமுள்ளவர். ஆசிரியர் களும் வியக்கும் வகையில் ஆங்கிலத்தில் பேசவல்லவர். ஊர் இளைஞர்களுக்கு உயர் கல்வி பயில ஊக்கமளித்து வந்தார். சிறை வாசம், தலை மறைவுக் காலத்திலும் தன் மகனின் படிப்பு தடைப்படாமல் பார்த்துக் கொண்டு M.A- வரை படிக்கவைத்தார், காங்கிரஸ் மந்திர் சாலையில் தான் புதிதாகக் கட்டிய கட்டடத்தை நூலகமும் படிப்பக மும் நடத்த அரசுக்கு நன்கொடையாக அளித்தார். கட்டடம் இப்போது சுமார் ரூ. 5 இலட்சம் பெறுமா னமுள்ளது. இவரது துணைவியார் 1982ல் மறைம் தார். வயதாகி விட்டதால் வியாபாரத்தை நிறுத்திக் கொண்டார். இறுதி காலத்தை  சென்னையில் உள்ள தன் வீட்டில் தன் ஒரே மகன் D.A.S. பிரகாசம் I.A.S. (ஓய்வு) அவர் களுடன் வசித்து வந்தார். 

இவர் மகன் D.A.S. பிரகாசம் IAS ஆரம்பித்தது சமுதாய பொருளாதார துண்டு மன்றம் (SES trust) என்ற அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான செங்குந்த கைக்கோளர் இன மக்கள் கல்வியறிவு பெற்றனர்.


ஆதிமூலம் முதலியார் அய்யா தானமாக கொடுத்த வீடு நூலகமாக உள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட இந்த நூலகம் பல விருதுகளை பெற்றுள்ளது.






இவரின் பிறந்த தேதி மறைந்து தேதி முழு வாழ்க்கை வரலாறு, குலதெய்வம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு +91 85239 45181 தகவலை அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)