தாரமங்கலம் செங்குந்தர்

0

 தாரமங்கலம் சேலம் மாவட்டம்: தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் பொதுவில் வசூலித்த அரசாங்கத்திடமிருந்து வாங்கப்பட்ட இடம் அங்கு பெரும் சிரமத்திற்கிடையே கட்டப்பட்டது. செங்குந்தர் பள்ளி கமிட்டியை தனியாக தொடங்கி இன்று ஆலமரம்போல் வளர்ந்துள்ளது. கஞ்சகோட்டு திரு. குமரு முதலியார் திருமண மண்டபத்திற்கு இலவசமாக கொடுத்த இடம் தற்போது தான் நீண்ட தீர்வுக்கு பிறகு பள்ளி கமிட்டியிடமிருந்து பூவேழ் நாட்டு நாட்டாண்மை திரு. இனியன் அவர்கள் வசம் வந்துள்ளது. திருமண மண்டபத்தில் திரு. எம். செந்தில்நாதன் தாத்தா திரு பி.மே.வை. செல்லப்ப முதலியார் அவர்கள் தலைவராக 1983 முதல் 2007 வரை இருந்து மண்டபத்தை திறக்க உதவினார். அதோடு செங்குந்தர் கல்வி கழகத்தின் உதவி தலைவராக 1977 முதல் 2007 வரை பதவி வகுத்தார் திரு. குமறு முதலியார் கட்டிடத்தில் இனி என்ன மாதிரியான கட்டிடம் கட்டுவதென முடிவு செய்வார்கள் என தெரிய வருகிறது. அத்துடன் தாரமங்கலத்தில் சொந்தங்கள் சேவைக்கு மூன்று பிரிவாக அதாவது திருமண மண்டப கமிட்டி, கல்வி கமிட்டி. ஊர் நாட்டாண்மை என சேவையில் போட்டியிட்டு வளமாக்கி வருவது வரலாற்றில் உள்ள ஆவணம். செங்குந்தர் குலக் கற்புக்கரசி முத்தாயம்மாள் சிலை தாரமங்கலத்தில் சாவடியில், தீபாய்ந்த நாச்சியாராக செங்குந்த குலமே தெய்வமாக கருதி வழிபாடு செய்து வருகிறது. இவரது விவரம் வருமாறு அக்காலத்தில் பெண்கள் இரவிக்கை போன்ற உள் ஆடைகளை அணிவது பழக்கமில்லை. பாவடி தோப்பில் கஞ்சி தோய்த்திருக்கும் தனது கணவருக்குக் கஞ்சியைத் தலையில் சுமந்தவாறு செல்லும் போது தான் கட்டியிருந்த சேலை அவிழ்ந்ததால் பிறந்த மேனியாக நிற்க வேண்டியதை எண்ணி தன் மானம் போனதாக கருதி அதே இடத்தில் தன் உடலில் தீயிட்டுக் கொண்டு உயிர் துறந்தார். அவ்வாறு உயிர் துறந்த இடத்தில் கற்புக்கரசியான தீப்பாய்ந்த நாச்சியாராக அப்பெண்மணியான முத்தாயம்மாளுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் தாரமங்கலம் தி எஜூகேஷன் போர்டு 1946-ல் துவங்கப்பட்டது. அது 1978 -இல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போர்டின் கீழ் 2004 -இல் செங்குந்தர் ஆசிரியர் பள்ளியும் 2006 ஆம் ஆண்டு செங்குந்தர் பி.எட். கல்லூரியும் 2008 - இல் எம்.எட் கல்வியியல் கல்லூரியும் 2014-இல் சி.பி.எஸ்.ஈ. பள்ளியும் 2017-இல் செங்குந்தர் மழலையர் குருகுல பள்ளியும் தொடங்கப்பட்டு திறம்பட நடந்து வருகிறது இது செங்குந்தர் இனத்திற்கே பெருமை. இங்கே அமைந்துள்ள செங்குந்தர் திருமண மண்டபம், மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. போர்டு மூலமாக தினந்தோறும் 100 ஏழைகளுக்கு இலவசமாக இரவு உணவு வழங்கப்படுகிறது. எனக்குத் தெரிந்து தாரமங்கலம் சங்கம் மூத்தோர் வகுத்த பாதையில் பயணிக்கிறது. இன்றைய தாரமங்கலம் செயற்குழு உறுப்பினர் திரு. எம். செந்தில்நாதன் தாரமங்கலம் சங்கத்தின் தூணாக செயல்படுவது பெருமைக்குரியது. சென்னை மாவட்ட சங்கம்: 26-03-1972 -இல் திரு. சி. பாலசுப்ரமணியன், அவர்களை. தலைவராகவும் திரு. சரவணவேலு, அவர்களை செயலாளராகவும் பொறுப்பேற்றனர். அது பின்னாளில் 1989 - இல் சென்னை பெருநகர் செங்குந்த மகாஜன சங்கமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திரு. எஸ்.டி. பொன்னுசாமி தலைவராகவும், திரு. பொ.த.சாமிநாதன், செயலாளராகவும் திரு. டி ஆறுமுகம், அவர்கள் துணைச் செயலாளராகவும் பணிசெய்து சமுதாய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும் 1990-இல் மே மாதம் 12, 13, தேதிகளில் சென்னை காமராஜ் அரங்கில் மாநாடு நடத்தியதும், நெசவாளர் சிறப்பு மாநாடு (எழுச்சி பேரணி) பனகல் பார்க் 08-12-1998 சென்னை மாவட்ட மாநாடும் சிறப்பாக நடத்தியது சென்னை சங்கத்தின் வரலாறு ஆகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)