பா விஜய் செங்குந்தர்

0


தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
 
பிறப்பு:
பாலகிருஷ்ணன் விஜய்  1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பாலகிருஷ்ணன் முதலியார்  - சரஸ்வதி தம்பதியருக்கு  கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). 

இவரின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 

2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். 

இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். 

முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பா. விஜய் நடித்த படங்கள் தொகு ஆண்டு திரைப்பபபடம் 2010 ஞாபகங்கள் 2011 இளைஞன் பா. விஜய் பெற்ற விருதுகள் தொகு ஆண்டு பெற்ற விருதுகள் 2000 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 2001 தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது 2001 ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது 2001 வெரைட்டி விருது 2001 பாலர் ஜூனியர் சேம்பர் விருது 2002 லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது 2002 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது 2003 சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது 2003 வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது 2003 சன் பீம் கல்வி நிறுவன விருது 2004 ட்ரைனிட்டி விருது 2004 சன் பீம் கல்வி நிறுவன விருது 2004 த.மு.எ.ச. துறைமுகம் விருது 2004 தேசிய விருது 2005 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது 2005 பாரத் அசோசியேஸன் விருது 2005 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது 2005 எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது 2005 சென்னை நண்பர்கள் விருது 2005 வெரைட்டி விருது 2005 தினகரன் விருது 2005 பிலிம் டுடே விருது 2006 எம்.ஜி.ஆர். விருது 2006 மலேசிய ஜி.எம்.டி. விருது 2006 தஞ்சை செங்குந்தர் மகாசன விருது 2006 செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது 2006 கÏர் ரோட்டரி கிளம்ப்பின் மொழிக்காவலர் விருது 2007 கலைமாமணி விருது 2007 ராஜீவ்காந்தி – முப்பனார்விருது 2007 கலைவித்தகர் - கண்ணதாசன் விருது 2007 இளம் கவி அரசர் விருது - கனடா 2007 பாரத் சினி விருது 2008 எம்.ஜி.ஆர். - சிவாஜி விருது 2008 திரை இசை விருது 2008 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த தொலைக்காட்சி பாடலாசிரியருக்கான விருது 2008 ப்லீம்பேர் விருது 2009 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் 2009 ப்லீம்பேர் விருது 2009 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது 2009 பாரத் சினி விருது 2010 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது சிறந்த பாடலாசிரியர் மற்றும் நடிகருக்கான விருது ஞாபகங்கள் 2010 சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான இசையருவி விருது சர்வம் திரைப்பட பாடல் 2011 சிறந்த பாடலாசிரியருக்கான எடிசன் விருது 2011 BIG FM சிறந்த வெற்றிப் பாடல் விருது 2011 தமிழ்நாடு திரைப்பட சங்க விருது 2011 சிறந்த தொலைக்காட்சி தொடர்ப்பாடல் விருது 2011 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது 2012 ராஜ் டிவி அகடவிடம் விருது 2012 லயன்ஸ் கிளப் சிறந்த கலைஞர் விருது 2012 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது 2012 நியூ ஃபிலிம் இந்திய நிறுவன விருது 2012 BIG FM 2012 சிறந்த பாடலாசிரியருக்கான Mirchi Music விருது பா விஜய்-ன் படைப்புகள் தொகு எண் படைப்பு விளக்கம் 01 இந்தச் சிப்பிக்குள் 02 சுதியோடு வந்த நதி 03 நந்தவனத்து நட்சத்திரங்கள் 04 நிழலில் கிடைத்த நிம்மதி 05 போர்ப் புறா 06 ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது 07 உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று) 08 உடைந்த நிலாக்கள்(பாகம் இரண்டு) 09 உடைந்த நிலாக்கள்(பாகம் மூன்று) 10 சில்மி~pயே முழுமையான காதல் கவிதை தொகுப்பு 11 வானவில் பூங்கா (துபாயில் வெளியிட்டது) 12 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் ஒன்று) 13 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் இரண்டு) 14 நம்பிக்கையுடன் 15 கண்ணாடி கல்வெட்டுகள் - கல்கி தொடர் 16 அரண்மனை இரகசியம் (நாவல்) 17 பா.விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று) 18 பா.விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு) 19 உடைந்த நிலாக்கள் பகுதி ஒன்று (ஒலிநாடா) 20 பா.விஜய் கவிதைகள் (ஒலிநாடா) 21 வினாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா) 22 கடவுள் வருகிறான் ஜாக்கிரதை (கவிதை) 23 காதல்@காதலிகள்.காம் (கவிதை) 24 பெண்கள் பண்டிகை (கவிதை) 25 இரண்டடுக்கு ஆகாயம் (கவிதை) 26 ஐஸ்கட்டி அழகி (கவிதை) 27 காகித மரங்கள் (கவிதை) 28 கைதட்டல் ஞாபகங்கள் (கவிதை) 29 அடுத்த அக்னி பிரவேசம் (கவிதை) 30 இருநாவல்கள் (நாவல்) 31 போர்ப்புறா - வாழ்க்கைத்தேடி வானம்பாடிகள் 32 18 வயசுல - முழுமையான காதல் கவிதை தொகுப்பு 33 வள்ளுவர் தோட்டம் 34 மஞ்சள் பறவை 35 பேச்சுலர் ரூம் 36 கறுப்பு அழகி 37 ஆப்பில் மாதிரி உன்னை அப்படியே 38 இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு) 39 நண்பன் நண்பி 40 ஒரு கூடை நிலா 41 கண்ணே நீ கயாஸ் தியரி 42 நட்பின் நாட்கள் 43 செய் 44 சமர் 45 ஞாபகங்கள் 46 பா.விஜய் ஓர் பார்வை 47 மோது முன்னேறு 48 தோற்பது கடினம் 49 என் பாட்டுக்கரையில் 50 சௌபர்னிகா

Post a Comment

0Comments
Post a Comment (0)