காஞ்சிபுரம் கு.ப. கண்ணன் முதலியார்

0

 



தமிழ்க் கடவுள் திருமுருகனின் இளவல்களாகிய - நவவீரர்கள் வழி வந்த - செங்குந்தர்களின் தலைநாடாகிய, சிறப்பு மிக்க - காஞ்சிபுரம்,பிள்ளையார் பாளையம் , ( அக்கணம் பாளையத் தெரு )சேர்மன் சாமிநாத முதலியார் தெருவில் வாழும் , பூர்வாங்க குடி சார்ந்த ,வைக்கி வீடு ( அ) டிப்பு வீடு திரு.குமரப்ப முதலியார், குப்பம்மாள் குமாரர் திரு.பரசுராம முதலியார் .

 திரு.பரசுராம முதலியார் - அமிர்தம்மாள் தம்பதியர்க்கு  26- 6-1938 அன்று முதல் மகனாக திரு.கு.ப.கண்ணன் அவர்கள் பிறந்தார்.

1961-ம் ஆண்டு, திருமதி.மணியம்மாள் அவர்களை திருமணம்  புரிந்து , 3- ஆண்கள் ,1- பெண் குழந்தைகளைப் பெற்று ,வளர்த்து சிறப்புடன் வாழச்செய்தார்.

 1965-வருடம் தி.மு.க.நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் , கலந்து சிறை சென்றார்.1967-ல் அறிஞர் அண்ணா அவர்களை முதல்வராக்கி , தி.மு.க.ஆட்சி அமைத்தது.1996-ம் வருடம் பிள்ளையார் பாளையம் நகர மன்ற உறுப்பினரானார்.                  சொற்பயிற்சி மன்றம் 10 -ஆண்டுகள் நடத்தி ,பலரை

 பேச்சாளராக்கினார்.         பிள்ளையார் பாளையம் மூவேந்தர் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினராகவும் ,காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகச் சங்க உறுப்பினராகவும் , அகில இந்திய கைத்தறி மையம் ஆலோசனைகள் குழு உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

 ஆரம்பப் பள்ளி படிப்பு -5 -வது வகுப்பு வரை படித்தார்.இளம் வயதிலேயே ,தந்தையுடன் கைத்தறி நூல் நெசவுத் தொழில் புரிந்தார்.பன்னிரண்டாவது வயது முதல், பிறருக்கு உதவிகள் புரிந்தும் , பொதுநல வாழ்விலும் ஈடுபட்டார்.திராவிட கழக ஆர்வலராகி ,பின்னர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகி அரசியல் வாழ்வில் ஈடுபட்டார்.

தி.மு.க-வில் சிறப்புடன் செயல்பட்டமையால், பிள்ளையார்  பாளையம் - வட்டச் செயலாளராக 3 முறையும் , பொருளாளராக 1 முறையும் பொறுப்பேற்று கடமையாற்றினார்.தி.மு.க.- இவரை தலைமையக சிறப்பு பேச்சாளராக நியமித்தது !

சேர்மன் சாமிநாத முதலியார் ஆரம்பப் பள்ளி ஒரு மண்டபத்தில் நடந்தது.பிள்ளையார் பாளையம் பெற்றோர் சங்கம் அமைத்து ,ரூ.2 /இலட்சம் வசூலித்து ,புதுகட்டிடம் உருவாக்கி , நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் - அறிஞர் அண்ணா பேரவை- புரவலராக இருந்து 10- வருடங்கள் நடத்தினார்.பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை20 - வருடங்கள் நடத்தினார்.

மேற்படி நற்பணிக்காக , மூன்று நாடகங்களில் தானும் நடித்து ரூ.12 /ஆயிரம் வசூலித்து தந்தார்.சேர்மன் சாமிநாத முதலியார் தெருவில்,அறிஞர் அண்ணா நூலகம் அமைய பெரும்பாடுபட்டார்.

1996-ம் வருடம் , நகர மன்ற உறுப்பினராக தொண்டு புரியும் போது ,பிள்ளையார் பாளையம் பகுதியின் மையத்தில் அமைந்த , ஓட்டுக் கட்டிடத்தில் நடந்துவந்த- சேர்மன் சாமிநாத முதலியார் உயர்நிலைப் பள்ளிக்கு ,பல வகுப்புகள் உள்ளிட்ட ,இரண்டு மாடி கட்டிடம் சுமார் ரூ. 43/இலட்சம் மதிப்பீட்டில் , கட்டப்பட குழு அமைத்து , அரும்பாடுபட்டு உருவாக்கினார்.மேல்நிலைப் பள்ளியாக்க முழு முயச்சி மேற்கொண்டார்.பெற்றோர் , ஆசிரியர் சங்கத் தலைவராக 15 / வருடங்கள் இருந்து, வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.

தி.மு.க.கொள்கை அடிப்படையில் சாதி  மறுப்பு கொள்கையை கடைபிடித்தவர்க்கு 1983 -ம் ஆண்டு பிள்ளையார் பாளையத்தில் நடந்த சம்பவம்-சாதி சமுதாய ஆர்வத்திற்கு திசை திருப்பியது! பிள்ளையார் பாளையம் பகுதிக்கு - கிழக்கிலும் ,மேற்கிலும் வாழ்ந்த வேற்று சாதியினர்,அர்த்தமற்ற முறைகளில்- பிள்ளையார் பாளையத்தவரிடம் தகராறு ,வம்பு , வன்முறைகளில் ஈடுபட்டனர்.தாம் வாழ் பகுதி சமுதாயத்தினரிடம் மாற்றார் வன்முறைக்கு வரவே ,தம் மக்களைக் காக்க , செங்குந்தர் சாதி ஆர்வத்தில் குழுவுடன் களம் இறங்கி , மாற்றாரை சமாதானத்திற்கு வரும்படி செய்தார்.

தலைமைச் சங்க குடியாத்தம் மாநாட்டில் - இளைஞர் அணித் தலைவராகி சிறப்புரை ஆற்றினார்.மாநில சங்க அமைப்பாளராக பொறுப்பு வகித்தார்.

நமது தலைமைச் சங்கத்தில் - தலைவர் திரு  J.சுத்தானந்தன் அவர்கள் தலைவராக இருந்த சமயம் - துணைத் தலைவராக -3 ஆண்டுகளும், அவர் காலத்திற்குப் பிறகு 3 ஆண்டுகளும் துணைத் தலைவராகத் திகழ்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டச் சங்க பொருளாளராக பொறுப்பேற்று ,தலைவர் , செயலாளர் உடன் இணைந்து , காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்தர் சமுதாய கூடம் - ரூ.30 / இலட்ச ரூபாய் மதிப்பில் உருவாக பெரிதும் பாடுபட்டார்.பல ஆண்டுகள் நிர்வாகம் செய்து வளர்ச்சி பெறச் செய்தார்.



செங்குந்தர் குல நல -  ஆர்வத்தின் தொடர்ச்சியாக தலைவர் திரு.M.P.நாச்சிமுத்து முதலியார் அவர்கள் காஞ்சிபுரம் வருகை தந்து , மாநாட்டு ஏற்பாடு குழு அமைத்து ,திரு.கு.ப.கண்ணன் அவர்களை தொண்டர் படைத்தலைவராக நியமனம் செய்தார்.மாநில 14 - வது மாநாடு காஞ்சியில் மிகச் சிறப்பாக நடந்தது.துணைத் தலைவர் திரு.J.சுத்தானந்தன் அவர்களிடம் நெருங்கிய நட்பு ஏற்பட்டது ! தலைமைச் சங்க தொடர்பு வளர்ந்தது ! தலைமைச் சங்க- செங்குந்த மித்திரன் இதழ் வளர்ச்சிக்கு ரூபாய்.ஒரு இலட்சத்திற்கு மேல் சந்தா தொகை சேர்த்துத் தந்த பெருமை இவருக்கு உண்டு !

 தமது வாழ்நாளை பொதுநலத் தொண்டிற்காக அர்ப்பணித்தவரின் நல்லுரை - பிறருக்கு உதவுவதிலும் , பொதுநலத் தொண்டுகள் புரிவதிலும் இனமறியாத வகையில் மனதிற்கு மகிழ்வு ஏற்படுகிறது ! இறைவனின் அருளாசிகளும் பெறுகிறோம் ! வாழ்வோம் ! பிறரை வாழ வைப்போம் !

வயது முதிர்வு காரணமாக, பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெற்ற போதிலும்,சங்க விழாக்கள் , பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன், தம்மை நாடக வருபவர்கட்கு தன்னால் இயன்ற உதவிகளும் தொடர்ந்து செய்து வருகிறார்.

 தலைவர் திரு. J.சுத்தானந்தன் அவர்கள் வழி காட்டியபடி -திருமுருக.கிருபானந்த வாரியார் அறக்கட்டளை நிறுவி,பத்து ஆண்டுகளுக்கு மேலாக- மாணவ , மாணவியர்க்கு- ஊக்கப் பரிசுகள் தரும் வாழ்க்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

பேரறிஞர் அண்ணா தோற்றத்தில் திரு.கு.ப.கண்ணன் அவர்கள்


தகவல் உதவி : காஞ்சி.துரை.சௌந்தரராசன்.திரு.K. சுடர்மணி ,  திரு.K.சிற்றரசு.

வெளியீடு செங்குந்தர் வரலாறு மீட்பு குழு





Post a Comment

0Comments
Post a Comment (0)