சேலம் K.R. மாணிக்க முதலியார்

0

 


மெட்ருஸ்காரர் என்று பெருமை யோடு புகழப்பட்ட செங்குந்த கைக்கோளர் குல அன்புச் செல்வர் (அமரர்) K. இராமசாமி முதலியார்க்கு 29-9-1912ல் திரு. K. R. மாணிக்க முதலியார் அவர்கள் மூத்த மைந்த ராகப் பிறந்தார். 

சிறு வயதிலேயே இனிய பண்புகள் இவரிடம் அரும்பி மிருந்தன. ஓடி விளையாடு பாப்பா - நீ, ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா-ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்று பாடிய பாரதியின் அறிவுரையை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டு இனிய பண்பாளராகத் திகழ்ந்தார். 

அம்மாப்பேட்டையில் நான்காவது வகுப்புவரை பின் படித்தார். சென்னைக்குச் சென்று 6 வது வகுப்பு வரையே படித்தார். மேலே பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத சூழ்நிலை. படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க இவர் வேண்டியதாயிற்று.

பதினேழாவது வயதில் திருமணம் நடந்தது. தந்தையார் இவரது குடும்பப் பொருப்பை இவரே நடத்த வேண்டுமென்று எண்ணித் தனிக்குடித் தனம் வைத்தார்.

மாதச் சம்பளம் ரூ.25/- க்கு நமது சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கப் பொரு ளாளர் திரு S. P. சம்பந்த முதலியார் அவர்கள் தந்தையார் (அமரர்) S. பழனியாண்டி முதலியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தச் சம்பளம் குடும்பத்தை நடத்தப் போது மானதாக இல்லாததால் தந்தையார் இவருக்கு ஓய்வு நேரத்தில் ஊதியம் தரக்கூடிய துணைத்தொழில் ஒன்றை ஏற்பாடு செய்தார். 

ஜப்பான் நாட்டுச் சுவர்க்கடிகாரங்களை வாங்கி நம் குலத் தவர் வீடுகளில் விற்று வரச் செய்தார். ஒரு கடிகாரம் ரூ. 8, 10க்குத் தான் விற்கும். மாதத்தில் சராசரி 10 கடிகாரம் கடனுக்கு விற்று மாதா மாதம் வசூலித்துக் கொள்வார். சேலத்தில் தவணை முறை விற்பனையை முதன் முதல் துவக்கியவர் இவரே யாவார். 

பின்னர் 1936ல் (அமரர்) T. K. வைத்திலிங்க முதலியார் நூல் கூட்டாளியாக சேர்ந்து வாணிகத்தின் நெளிவு - சுளிவுகளைத் கடையில் தெரிந்து கொண்டார். 1939ல் தனியாகவே நூல் வியா பாரம் செய்யத் துணிந்தார். அன்பும் பண்பும் இவரிடம் சிறந்த ஆற்றலை உண்டாக்கி வளர்த்தன. வாணிகம் வளர்ந்தது.

இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. 1947-1949 1951-1952 அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி & விற்பனை சங்கத்தின் தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. 

சிறப்பும் பொறுப்பும் மிக்க பதவியிலமர்ந்து 'கூட்டுறவே நாட் டுயர்வு'' என்ற கொள்கைக்கு நீரூற்றி வளர்த்தார். 1952-1954 வரை அருள்மிகு குமரகிரி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலை வராகவும் இருந்து "அறவினை ஓவாது சொல்லும் வாயெல்லாம் செய்து வந்தார். குமரன் அருள் கூடி வந்தது. 

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நூல் வியாபாரிகள் சங்கத்தின் தலை வராக சுமார் 12ஆண்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறார். வியாபாரப் பெரு மக்கள் இவரது தலைமையை விரும்பிப் போற்றுகின்றனர். 

திருப்பூர் S. R. C. மில்லில் சுமார் 4ஆண்டுகளாக இயக்குனராக இருந்து வருகிறார். 1978 ல் அம்மாப் பேட்டையை அடுத்த உடையாப்பட்டி யில் ''கந்தகிரி ஸ்பின்னிங் மில்' 6000 கதிர்களைக் கொண்டதாக விளங்குகிறது. ஆலைக்கு மேனேஜிங் டைரக்டராக அமைந் துள்ளார். 

அம்மாப்பேட்டை செங்குந்தர் கல்யாண மண்டபம் கட்டத் தொடங்கிய நாள் முதல் நிர்வாகப் பொறுப்பில் பெரும்பங்கு கொண்டுள்ளார். 1980 முதல் கல்யாண மண்டப கமிட்டித் தலைவராக விளங்குகிறார். இத்தகு சீர்மை வாய்ந்தவர்க்கு ஆண் மக்கள் இருவரும், பெண்மக்கள் மூவருமாவர். மூத்தமகன் திரு. M.இராஜாமணி B.A. நூல் வியாபாரம் திரு. நூல் * மை) கின்றனர். பெண் மூவரும் செய்து வருகிறார். 

இளைய மகன் M. சிகாமணி B. Sc., ஈரோட்டில் வியாபாரத்துடன் கூட்டாகத் தானிய மண்டியும் நடத்துகின்றார். "தம்மினும் தம் மக்கள் அறிவுடை என்ற திருக்குறள் கருத்துக்கு இலக்கியமாக இவர்கள் விளங்கு மக்கள் திருமணமாகி எல்லாவித சௌபாக்கி யங்களுடன் இனிது வாழ்கின்றனர். மங்கையராய் பிறக்க நல்ல மாதவம்'' செய்தவர்களாவர். அம்மாப்பேட்டை காமராஜ் நகர் காலனிக்கருகில் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள் வெட்ட வெளி ஆலயம் இக்கட்டுரை நாயகரின் தந்தையாரால் நிர்மானிக்கப் பெற்றது. 

அதன் நிர்வாகமும் இவரிடமே இருந்து வருகிறது. அங்கு மாதந் தோறும் பூச நட்சத்திரத்திலும், தைப்பூசத்திலும், புரட்டாசி சித்திரா நட்சத்திரத்திலும் ஏழைகளுக்கு உணவு வினியோகம் இவர் பொறுப்பில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் துணைத்தலைவராக இருந்து, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கப் பொன்விழாவையும், சேலம் மாவட்ட செங்குந்தர் சமூக மாநாட்டையும் சிறப்பு மிக்க வகையில் நடத்தத் திட்டமிட்டு வந்துள்ளார். 

உழைப்பால் உயர்ந்த உத்தமரை உள்ளன் போடு போற்றுவோம்! உடை செயல்பட்டு.

இவரின் மறைந்த தேதி இவரின் வாழ்க்கை வரலாறு இவரின் கூட்டம் பெயர் குலதெய்வம் பெயர் மற்றும் போட்டோக்கள் போன்ற தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு What's app எண்ணுக்கு அனுப்பவும்  78269 80901




Post a Comment

0Comments
Post a Comment (0)