சிவகாமி அம்மாள் செங்குந்தர்

0


இந்திய விடுதலை போராட்ட வீரர்,  நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நடத்திய INA Force என்ற இந்திய தேசிய இராணுவ படையின் பாலசேவா பிரிவில் (இளையோர் பிரிவு) பணியாற்றியவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தியாகி சிவகாமி அம்மாள் செங்குந்தர் அவர்கள், 

இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய வீராங்கனை, தியாகி சிவகாமி அம்மாள் தருமபுரி மாவட்டம் அன்னசாகரத்தில் 14,04,1933ல் செங்குந்த கைக்கோளர் குலத்தில் மாரிமுத்து முதலியார் - சின்னத்தாய் தம்பதியினருக்கு வீர மகளாக பிறந்தார். இவரது அண்ணார் பரமானந்தம் முதலியார் ஆவார். 

சிவகாமி அம்மாளுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கியவர் பரமானந்தமே ஆவார். சிவகாமி அம்மாளுக்கு ஒன்றரை வயதாகும் போதே அவரது குடும்பத்தினர் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றிருந்தனர், 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் 21 ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை போது, போஸ் அவர்கள் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய இராணுவம் என்ற அமைப்பினை உருவாக்கி, இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஜப்பான் நாட்டு உதவியுடன் தாக்குதல் நடத்தினார். 

அந்த காலகட்டத்தில் 1942ம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தின் பாலசேவா பிரிவில் 11 வயதான சிவகாமி அம்மாளும், 15 வயதான பரமானந்தமும் இணைந்தனர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில், குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்களை முகாமிற்கு தூக்கி வந்து சேர்க்கும் பணியில் சுமார் மூன்றரை ஆண்டுகள் இருவரும் ஈடுபட்டிருந்தனர், இவர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வீரமங்கை, ஜான்சி ராணி என்று சிறப்புற அழைக்கப்பட்ட இராணி இலட்சுமிபாய் போன்று வேடமிட்டு மேடை நாடகங்களில் தேசபக்தி பாடல்களை பாடி விடுதலை விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்தியும், அதன் மூலம் கிடைத்த வருவாயை இராணுவத்தினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அளித்தனர். 

சிங்கப்பூரில் நடைபெற்ற இவரது ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை நாடகத்தையும், ஜான்சி ராணி படையின் அணிவகுப்பையும் பார்வையிட்ட நேதாஜி வெகுவாக பாராட்டியும் உள்ளார். மேலும் இவரது நாடகத்தை பார்த்த மக்கள் தங்களையும் இந்திய தேசிய இராணுவத்திலும், ஜான்சி ராணி படை பிரிவிலும் சேர்த்து கொள்ளும்படி வேண்டுமளவுக்கு இவரது ஆர்டர், அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், மற்றும் உடற்பயிற்சிகள் அமைந்திருந்தது என்று கூறினால் அது மிகையல்ல. 

நேதாஜி அவர்கள் வெள்ளையர் எதிர்ப்புக்காக உருவாக்கிய INA படைப்பிரிவின் மகளிர் படையினருக்கு ஜான்சி ராணி படை என பெயரிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் தனது குடும்பத்தினருடன் இந்தியா திரும்பிய சிவகாமி அம்மாளுக்கு 06.06.1949ல் குப்புசாமி அவர்களுடன் திருமணம் நடந்தது, திருமணமான 2 ஆண்டுகளிலேயே கணவரையும் தாய் தந்தையரையும் அடுத்தடுத்து பறிகொடுத்தார். 

அதன்பின் பரமானந்தமே பக்கபலமாக இருந்துவந்தார். 2004ம் ஆண்டு அவரது அண்ணாரையும் பறிகொடுத்தார். சிவகாமி அம்மாள் மற்றும் அவரது அண்ணார் பரமானந்தம் ஆகியோரின் இந்திய விடுதலை போராட்ட பங்களிப்பினை பலரும் பாராட்டி மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றளவும் தியாகி சிவகாமி அம்மாள் அவர்கள் சுதந்திர நாள், குடியரசு நாள், தேசத்தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மரியாதையும் அஞ்சலியும் செய்தவண்ணம் உள்ளார். 

தருமபுரியை அடுத்த அதகபாடி அருகே ஏ. செக்காரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தின் சுற்று சுவரில் திருவள்ளுவர், காந்திஜி, நேருஜி, நேதாஜி, பகத்சிங், பாரதியார், சுப்ரமணிய சிவா, விவேகானந்தர், அன்னை தெரசா, அப்துல்கலாம் போன்ற தேசிய தலைவர்களது வர்ணப்படங்களின் வரிசையில் தியாகி நம்ம பூதகடூர் சிவகாமி அம்மாள் அவர்களது படமும் வரையப்பட்டு, அவரது வாழ்க்கை வரலாற்று குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளது அவரின் தியாகத்தை பறைசாற்றுகிறது.








சிவகாமி அம்மாள் சம்பந்தப்பட்ட  தகவலகள் போட்டோக்கள் கிடைத்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு  எண்ணுக்கு

 அனுப்பவும்

இந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்புக் குழுவிற்கு வந்து உதவியவர்: இருளப்பட்டி கார்த்திக் முதலியார் 

Post a Comment

0Comments
Post a Comment (0)