திருப்புத்தூர் செங்குந்தர் மரபைச் சேர்ந்த கந்தப்ப முதலியாருக்கு மகனாகப் பிறந்தவர் குமாரசாமி முதலியார்
இவர் பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார் அதில் திருப்புத்தூர் புராணம், செங்குந்தர் வேற்பதிகம், திருக்குறள் விளக்கமென்னும் தென்கயிலாய சதகம்போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்
திருப்புத்தூர்ப் புராணம் 411 பாடல்களைக் கொண்டது.
செங்குந்தர் வேற்பதிகம், செங்குந்தர்களின் சிறப்பையும்,
அவர்களுடைய வேலின் சிறப்பையும் விளக்குவது.
இப் பெரியார் செங்குந்தப் புலவர் சங்கத்தின் முதன்மையான உறுப்பினர்களி லொருவர். இவர் தந்தையாராகிய கந்தசாமி முதலியாரென் பார் இவரது இளமைப் பரு வத்திலேயே இரண்டு கல் தொலை விலுள்ள ஆதியூரிலிருந்து திருப் பத்தூரில் வந்து குடியேறினார். இவர் தமது சொத்தாகக் கருதிய சில அந்தாதிகளையும் புராணங் களையும் கொண்டுவந்து சில காலந் தாமே யவற்றைப் படித் துப் பின்னர்த் துர்க்கை செட் டியாரென்றதமிழ்ப்புலவரிடத்தில் இலக்கிய விலக்கணங்கள் பயின் றார்.தாம் கற்றவற்றைத் தமது மைத்துனர் முனிசாமி முதலி யார் என்பவர்க்குச் சொல்லிக் கொடுத்து அவரையும் புலவ ராக்கினார். இளமையிலேயே துறவுபூண்ட இம் முனிசாமி முதலியார் செய்த சில தோத் திரப் பாக்களுந் தனிப் பாடல்களும் இன்றும் அவர் குடும்பத் தினரிடத்திலுள்ளன. கந்தசாமி முகலியாரின் மகனாகிய குமாரசாமி முதலியார் தமது தந்தை யாரிடம் பாடங் கேட்டுப் பெரும் புலவரானார். இவர் தமது மரபாகிய செங்குந்த குலத்தில் மிகுந்த பற்றுடையவரா தலால் சென்னையில் நிறுவப்பட்டிருந்த செங்குந்தப் புலவர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து குலத் தொண்டு செய்து வந்தார். பாட்டும் உரையும் எழுதுவதில் மிக வல்லுநராயிருந்த அச்சங்கத் துறுப்பினர்களாகிய திருமழிசை வீரசைவ முத்துசாமி முதலியார், இரட்டைத்தலை வடிவேலு முதலியார், சிதம்பரம் இரத்தினசபாபதி முதலியார்ளிடத்து நெருங்கிய தொடர் புடையவராயிருந்தார். சில சதகங்கள், முசுகுந்த விலாசம், செங்குந்த புராணம், தசாரண்ய மான்மியம் என்னும் திருப்பத்தூர்ப் புராணம், குடியேற்றத் தல புராணம், பனசைத் தல புராணம் முதலிய நூல்கள் இவராலியற்றப்பெற்றன. திருப்பத்தூர் உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியராக இருந்த இவர் சைவப் பற்றும் சைவாசாரமும் நிரம்பவுடைய வர். நோயிலா யாக்கையொடு எழுபத்து நான்காண்டுவாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்.
ஆ.கு. முருகைய முதலியார் மேற்கூறிய குமாரசாமி முதலியாரின் புதல்வராக இப்போ துள்ள திருப்பத்தூர் முருகைய முதலியார் தமது தந்தையாரிடத்தில் இலக்கிய இலக்கணங்கள் பயின்று வாணியம்பாடி, நர்மபுரி திருப்பத்தூர் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகத் தொண்டாற்றி பிறகு ஓய்வு பெற்றுள்ளார். எல்லா நற்குணங்களும் அமையப்பெற்றவர். இவர் தம் மாணவராக ஆங்காங்குத் தமிழ்ப் புலமை நடாத்துபவர் பலராவர்.
1. திருப்பத்தூர் புராண மூலமும் உரையும் click
