திருவண்ணாமலையும் - செங்குந்த_முதலியார் சமூகமும்

0


#திருவண்ணாமலையும் - செங்குந்த_முதலியார் சமூகமும்* 

1. அண்ணாமலையார் கோவிலில் *கார்த்திகை தீபத்தின்* போது மலை தீபம் ஏற்றுவது தேவையான நெய் பொருட்களை கடலூர் மாவட்ட *முதனை (முதல் நெய்) கிராம செங்குந்த கைக்கோளர்* மக்கள் தான் தொன்று தொட்டு வழங்கி வருகின்றனர். முதலில் இங்கு இருந்து நெய் வருவதால் இந்த கிராமத்தை முதலில் நெய் என்று அழைத்தனர் பின்னாளில் முதனை என்று மருவியது.



2. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான #வீரபாகு நவவீரர்கள் வம்சத்தினருக்கு திருக்கார்த்திகை தீப பெருவிழா மூன்றாம் திருநாள் மண்டகப்படி மற்றும் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணி முதல் 6-00 மணி வரை அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். சாமி முதலியார் மற்றும் ராமு முதலியார் குடும்பத்தின் மண்டகப்படி ஆகும். தான் ராஜ (ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல் மண்டகப்படி ஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும் அந்தக் குடும்பத்தின் அபிஷேக ஆராதனை நடந்த பிறகு உற்சவமூர்த்திகள் உலா வருகிறார்கள். மேலும் பல காலமாக கொடியேற்றம் செய்யும் உரிமை வீரபாகு நவ வீரர்கள் வம்சமான செங்குந்தர் மரபினருக்கே இருந்தனர்.

3. திருவண்ணாமலையார் கோவிலில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்கள் வம்சத்திராண செங்குந்தர் மரபினர் #கந்தசஷ்டி_சூரசம்ஹாரம் பெருவிழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்யும் மண்டகப்படி மற்றும் #மகாசிவராத்திரி தினத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜை மண்டகப்படி, வரும் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை விழா மண்டபத்தில் நடைபெறும். பெருநிலக்கிழாரான சாமிமுதலியார் குடும்பத்தினர் தொன்று தொட்டு பாரம்பரியமாக அண்ணாமலையாருக்கு இறைபணி செய்து வருகின்றனர் .

4.திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ஆனி பிரம்மோற்சவம் மற்றும் ஆடிப்பூரம் உற்சவம் மண்டகப்படிகளை செங்குந்தர் மரபினர் தொன்று தொட்டு வருகின்றனர். அதேபோல் சித்திரை  வசந்த உற்சவம் 9 திருநாள் மண்டகப்படி செங்குந்தர் மரபினரே செய்து வருகின்றனர். மேலும்  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் அறங்காவலர்களாக செங்குந்தர் சமூகம் சார்ந்த டி.எஸ்.முத்துக்குமாரசுவாமி முதலியார், ஆர்.அருணகிரி முதலியார், எம்.சுவாமி ராஜ் முதலியார் ஆகியோர் சிறப்பாக ஆன்மீகப் பணி செய்து வந்தனர்.

5.திருவண்ணாமலை செங்குந்த கைக்கோளர் மரபில் தீவிர முருக பக்தரும்,திருப்புகழ் உள்ளிட்ட பல நூல்கள் அருளிய தமிழ்,வடமொழி புலமைபெற்ற முருகனடியார் #அருணகிரிநாதர் சுவாமிகள் பிறந்துள்ளார். 

6.அண்ணாமலையார் கிரிவலப்பாதையில் நம் சமூகத்துக்கு தொன்மையான ஒரு செங்குந்தர் மடமும், முருகன் கோவிலும் உள்ளது. 

7. திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் செங்குந்தர் சமூகத்துக்கு ஒரு மண்டபம்,வணிக வளாகம்,மூன்று சத்திரங்கள் உள்ளன. மேலும் கோவிலுக்கு அருகில் திமிரி தலைவர் வகையறா செங்குந்தர் விழாவுக்கு ஒரு சத்திரமும், வாழைப்பந்தல் ஊர் செங்குந்தர் மரபினருக்கு ஒரு சத்திரமும் உள்ளது.

8. திருவண்ணாமலையில் முதலில் 150 வருடத்திற்கு முன்பு விக்டோரியா இந்து பள்ளி என்ற பெயரில் பள்ளிகூடம் மக்களுக்காக கட்டிக் கொடுத்தது செங்குந்தர் குல சாமிமுதலியார் அவர்கள் தான்.

9. திருவண்ணாமலையில் மருத்துவமனை முதலில் கட்டியது செங்குந்தர் குல பூதமங்கலம் ஜமீன்தார் குடும்பம்தான்.

10. திருவண்ணாமலையில் செங்குந்தர் சமூக மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் இங்கு செங்குந்தர் குலத்தைச் சேர்ந்த டி.எஸ்.முத்துகுமாரசுவாமி முதலியார் முன்னாள் தலைவர் (பிரிட்டிஷ் காலம்)(திருவண்ணாமலை நகர தந்தை என்று அழைக்கப்படுபவர்) முறை நகர்மன்றத் தலைவராகவும், சு. முருகையன் முதலியார்.exMP.,exMLA, மூன்று முறை நகர்மன்றத் தலைவராகவும், தி. வீ. தேவராஜா முதலியார் ஒருமுறை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவராகவும் (முன்னாள் எம்எல்சி) , தே. பட்டுசாமி முதலியார் முன்னாள் எம்.பி மற்றும் ஒருமுறை நகர்மன்றத் தலைவராகவும், டி.எஸ்.சாமிநாத முதலியார் ஒரு முறை நகர்மன்ற தலைவராகவும், அ. இராமு முதலியார் முன்னாள் தலைவர் வெற்றி பெற்று பொதுசேவை ஆற்றி உள்ளனர். அதாவது திருவண்ணாமலை நகரில் அதிகமுறை நகர்மன்றத் தலைவர் சேர்மனாக வெற்றி பெற்றது செங்குந்த முதலியார் சமூகம் தான்..

11.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் (விளக்கடி கோயில் தோப்பு தெரு) செங்குந்தர் மரபினர் சார்பாக பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாவின் போது ஐந்தாம் நாள் பஞ்ச மூர்த்திகளுக்கு பூ மாலை செலுத்தப்பட்டு மண்டகப்படி நடக்கிறது.

12.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் பேய் கோபுரம் அருகே காஞ்சிபுரம் செங்குந்தர் மரபினரின் குட்டிவீடு மடம் அமைந்துள்ளது. (கொடியேற்றம் நிகழும் தினத்திலிருந்து திருவிழா நடைபெறும் 10 நாட்களுக்கு மதியம் மற்றும் இரவு என இருவேளை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி காலங்காலமாக பெருந்தொண்டு செய்து வருகின்றனர்)

13.அண்ணாமலையாருக்கு வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி செங்குந்தர் மரபினர் திருக்குடை வழங்குகின்றனர். 

14.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நாயனார் மற்றும் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா மண்டகப்படி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சார்ந்த செங்குந்தர் மரபினரால் நடைபெற்று வரும் மாபெரும் செங்குந்தர் வரலாற்றில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் சொல்லி வளருங்கள்.

செங்குந்த முதலியார்கள் பூர்வீகமாக வாழும் பகுதிகள்: திரு வூடல் தெரு, ஆனைக் கட்டித் தெரு, அசலியம்மன்கோயில் தெரு, சிவன்படத்தெரு, கொச மடத்தெரு, சென்னப்ப நாய்க்கன்தெரு, சேடத் தெரு, கனகராய முதலி தெரு.


மேலும் திருவண்ணாமலை செங்குந்தர் மக்கள் மடம் கோவில் சத்திரங்கள் மற்றும் அண்ணாமலையார் கோவிலில் நமக்கு உள்ள உரிமைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 78269 80901 வாட்ஸ்அப் எண்ணுக்கு விடுபட்டுள்ள தகவலை அனுப்பவும்

















Post a Comment

0Comments
Post a Comment (0)