செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
சுதந்திர போராட்ட வீரர், மக்கள் சேவகர், பனப்பாக்கம் சேர்மன் மற்றும் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் MLA வான வெற்றி பெற்ற
பனப்பாக்கம்பிறப்பு மற்றும் வாழ்க்கை
வட ஆற்காடு மாவட்டத்தில் பனப்பாக்கம் கிராமத்தில் நெசவு செய்யும் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் ஆகஸ்ட் 21, 1912 இல் பிறந்தார்.
பட்டம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள்.
தனது சிறு வயதிலேயே சுதந்திர உணர்வு கொண்ட இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக கட்சிப்பணி சுதந்திரப் போராட்டங்கள் செய்து வந்தார்
தமிழ்நாடு காங்கிரஸ் குழு வில் பதவி வகித்தார். வட ஆற்காடு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர், 1946-56.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு கொண்ட இவருக்கு 1934 இல் நீதிமன்ற சிறை.
மீண்டும் ஆகஸ்ட் 1942 அன்று நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் தீவிரமாக மக்களைத் திரட்டி ஈடுபட்டனர் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சடையப்ப முதலியார் முயற்சியால் உருவான பனப்பாக்கம் அரசு மருத்துவமனையின் திறப்பு விழா பத்திரிக்கை |
தியாகி எஸ்.சி.சடையப்ப முதலியார் அவர்கள் பனப்பாக்கம்
கிராம மக்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தில்
சேர்ந்து மகாத்மா காந்தியடிகளின் வழியிலும், பெருந்தலைவர்
காமராசர் அவர்களின் வழியிலும்
எண்ணற்ற
அறப்போராட்டங்களைச் செய்தவர். அதற்காக பலமுறை சிறைக்கும்
சென்றவர். இவ்வேளையில்
அவர் சுதந்திரத்திற்காக செய்த போராட்டங்களையும், சத்தியாகிரக
செயல்களையும் நினைவு கூர்வோம்.
1935 -ல்
மதுவிலக்குப் போராட்டம். 1940 -ல் தனி
சத்தியாகிரகம். இதற்காக கைது செய்யப்பட்டு சென்னையிலும்,
திருவள்ளுரிலும் சிறை வைக்கப்பட்டார். 1942 -ல் ஆகஸ்ட் புரட்சி
(வெள்ளையனே வெளியேறு இயக்கம்) இப்போராட்டத்திற்காக தேசிய
பாதுகாப்புச் சட்டப்படி வேலூர், தஞ்சாவூரில் 3 ஆண்டுகளுக்கும்
மேலாக சிறைத் தண்டனை பெற்றார். 1947 -ல் நம்
விடுதலை அடைந்த பின்னர் கிராம முன்னேற்றத்திற்காக 1950 -ல்
மாவட்ட ஜில்லா கமிட்டி மூலம் (District Board) உயர்தர ஆரம்ப
பாடசாலையைக் கொண்டு வந்தார். பிறகு இது உயர்நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது இது அரசு ஆண்கள்
மேனிலைப் பள்ளியாக உள்ளது.
1957 -ல் காமராசர் அவர்கள் வழிகாட்டுதலில் சட்டமன்ற
உறுப்பினராக ஆக்கப்பட்டார். 1958 -ல் மருத்துவ
திறந்து வைக்கப்பட்டது. 1960 -ல் பேரூந்து நிலையமும்
தொடங்கப்பட்டது. இவற்றை தமிழக முன்னால் முதலமைச்சர் திரு.
எம்.பக்தவச்சலம் அவர்களைக் கொண்டு திறந்து வைத்தார். எந்த
ஒரு விழாவாக இருந்தாலும் விழா முடியும் வரை மேடையை விட்டு
இடையில் எழுந்து செல்லாத சபை நாகரீகம் தெரிந்தவர்.
பேரூராட்சி மன்றக் கட்டிடத்தின் கால்கோள் விழா அன்றைய
பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பி.கக்கன் அவர்களைக் கொண்டு
மன்றக் கட்டிடத் திறப்பு விழாவை திரு.இராமையா அவர்களைக்
கொண்டும் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகள் ஊராட்சி
மன்றத் தலைவராகவும், பேரூராட்சி மன்றத் தலைவராகவும் பதவி
ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித்
தலைவராகவும், செயலாளராகவும் சுதந்திர காலத்திற்கு முன்பும்,
பின்பும் பல ஆண்டுகள் பதவி வகித்தவர்.
நமது கிராமத்தில் மகாத்மா காந்தி அடிகளுக்கு 1949 -ல்
தனிக்கோயில் அமைத்தவர்; அவர் பிறந்த நாளான அக்டோபர்
2 ம் நாளை பெரிய உற்சவமாகவே நடத்திக் காட்டியவர். அன்றைய
நாளில் தேச பக்திப் பாடல்களுடன் கிராமிய நடனங்களும், ஆட்டங்களும்
நடத்தி மகாத்மா காந்திஜி திருவுருவச் சிலையை தேரில் ஏற்றி வீதிதோறும்
வலம் வரச் செய்தவர். ஊரின் மையப்பகுதியில் மகாத்மா காந்திஜிக்கு
முழு உருவச் சிலையை அமைத்து அவ்விடத்திற்குக் குமரன் மேடை
என்று பெயரிட்டவர். அன்னாரின் இது போன்ற செயல்களைச் சொல்லிக்
கொண்டே போகலாம்.
அவர் தேசபக்தி மட்டுமல்லாமல் இறைவுணர்வும்
செயல்களிலும் சிறந்தவர். பனப்பாக்கம் கிராமம் அமைதியும்,
சுபீட்சமும் பெற இறை வழிபாட்டை இடைவிடாது மேற்கொண்டவர்.
அவர் காலத்தில் ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயிலில் சோமவார வழிபாடு
26-01-1952 -ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
அப்போதைய பதிவாளரும், சைவ சமயப் பாதிரியார் என்று
போற்றப்பட்டவருமான திரு. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களால்
தொடக்கி வைக்க காரணமாக இருந்தவர் திரு. தியாகி எஸ்.சி.சடையப்ப
முதலியார் ஆவார். இவ்வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் திருக்கோயிலின் மிகப் பெரிய விழாவான
பிரம்மோற்சவம் இவர் காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கூத்தப் பெருமானாகிய நடராசப் பெருமானின் வழிபாடான
ஆருத்ராவும், ஆனித் திருமஞ்சனமும் மிகச் சிறப்புடன் நடைபெற்று
வரவும், நவராத்திரி ஒன்பது நாள் விழா மிகவும் அற்புதமான
முறையில் தக்க பக்க வாத்தியங்களுடன் இந்நூலில் கண்ட
முறைப்படி சிறப்பாக நடக்க இவர் முக்கிய காரணமாவார்.
அதுமட்டுமல்லாமல் மார்கழி மாதம் ஆருத்ராவின் போது
பத்து நாட்களும் விடியற்காலை 4.00 மணிக்கே கோயிலுக்கு வந்து
திருவெம்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் மிக இனிமையாக இசை
நுணுக்கத்தோடு பாடிப் பரவசமடைவார். அத்தகையோரின்
நினைவைப் போற்றும் விதமாக அன்னாரின் நூற்றாண்டு விழா
மலர் வெளியிடப்படுகின்றது.
இவ்வாறு நாட்டுப் பற்றும், இறை உணர்வும் தமது
இரு கண்களாகக் கொண்டு வாழ்வான வாழ்வு வாழ்ந்தவர்.
இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியவர்: ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் விடுதலை நாள் விழாவில் மாணவச் செல்வங்கள் ஊர்வலம் அழைத்துச் சென்று போலோ மகாத்மா காந்திக்கு என்பார். அத்தகு விடுதலை உணர்வை இளமையில் வளர்த்து வந்த பெருமகனார் எஸ்.சி.எஸ் என அழைக்கப்பட்ட சடையப்ப முதலியார் பெருமகனார். மகாத்மா காந்தி, நேரு, காமராஜ், பட்டேல் போன்ற விடுதலை வீரர்கள் மீது அளவிலா பற்றுணர்வு கொண்டவர். அரசியல், ஆன்மீகம் இரண்டிலும் மிகுதியும் நாட்டங்கொண்டு செயல்பட்டவர்.
நாட்டுநலப்பணி : டால்ஸ்ட்டாய் அவர்கள் அரசியல்வாதிக்கு நாட்டுப்பற்று வேண்டும்; நாட்டுப்பற்றோடு கூடிய அரசியல் நாட்டங்கொண்டவரே உண்மையான அரசியல் நடத்துவார்கள். மற்றவர்கள் தன்னலமே. அரச பதவிபெற காண்பார்கள் என்றுரைத்தார். அதுமட்டுமா ? நாட்டையாளும் தகுதி தத்துவவாதிக்குத் தான் உண்டு என்றார். அதே நேரத்தில் தத்துவவாதி அரசாள விரும்பமாட்டான், அரசியலிலிருந்து ஒதுங்கியே நிற்பான். மக்கள் நலன்கள் பற்றிய சிந்தனையே அவனுக்கு மிகுந்து நிற்கும் என்றார். அத்தகு தகுதி வாய்ந்தவர் தாம், அவரைப் பின் பற்றிய நம் நாட்டுத் தந்தையாம் மகாத்மா காந்தி அவர்கள். அந்த காந்தி மகானின் மீது உண்மையான பற்று மிக்கவர் ச.சி.சடையப்பனார். ஆம் ! நாட்டுப்பற்று மிக மிக அதிகம் கொண்டு நாட்டு நலத்தையே முதல் பணியாக மதித்து சட்டசபைக்குச் சென்று பணியாற்றியவர் நம் தலைவர் அவர்கள். தம் குடும்பம், தம்மக்கள், உற்றார், உறவினர்கள் என்பது எல்லாம் புறந்தள்ளப்பட்டு தேசிய வளர்ச்சி நலமே முன் நின்றது அவர் வாழ்க்கையில் என்றால் மிகையாகாது. இது ஊர் அறிந்த உண்மை. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. என்பது நம் அற நூலாம் வள்ளுவம். அதற்குரிய வாழ்வை வகுத்து வாழ்ந்தவர் ச.சி.சடையப்ப முதலியார் அவர்கள்.
கல்விப்பணி : மாணவர்கள் கல்வி நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஏன் -ல் மேநிலைப் பள்ளி பனப்பாக்கத்தில் அங்கீகாரம் பெற வீடு வீடாகச் சென்று பணம் வசூல் செய்து அரசாங்கத்துக்கு செலுத்திய பெருமைக்குரியவர். தற்போது நடைபெற்று வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளுக்கு இடம் ஒதுக்கி நீண்டகால நோக்கோடு செயல்பட்ட அவர்தம் திறமையும் தற்போது விளங்கும்.
இறைபணி : அரசு விழா, பள்ளி விழா மற்றும் ஆன்மீக விழா எதுவாயினும் பனப்பாக்கம் வரும் விருந்தினர்களுக்கு அன்போடு உணவளித்து பெருமை சேர்க்கும் பெருந்தகையாளர். ஆடவல்லான் இவரது குடும்ப வழிபடு கடவுள். அருள்மிகு மாயூரநாதர் சவுந்தரநாயகி திருக்கோயில் சோமவார வழிபாட்டில் தோய்ந்து நின்றவர். எங்கள் புதுப்பேட்டை சிறு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே கோடை விடுமுறையில் 10 நாள்கள் பெரியபுராண தொடர் மலர். சொற்பொழிவு அவர் தலைமையில் தான் நடைபெற்று வந்தது. அதற்குத் துணையாக நல்லூர்ப்பேட்டை புலவர் ப.உநடேசனார் இருந்து வழிகாட்டுதல் செய்தார்.
விடுதலை வீரர் : கல்வித் தொண்டாகட்டும், நாட்டு நலப்பணியாகட்டும் தன் நேரடிப் பார்வையில் முன் நின்று நடத்தி பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர் ச.சி. சடையப்ப முதலியார் அவர்கள். துணிவு மிக்க விடுதலைப் போராட்ட வீரர் அவர். தியாகி. சண்முகம், தியாகி.சம்பந்தம் ஆகியவர்கள் மற்றும் பலர், இவருடன் விடுதலை போராட்டத்துக்குத் துணை நின்று பெருமை பெற்றவர்கள். திருமுறை பாடுங்கால் உணர்வு தோய்ந்து இசை வெளிவரும். இன்னும் எவ்வளவோ அவரைப் பற்றிய சிந்தனைகள் விரிப்பில் பெருகும்.
நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் : இந்தக் காலத்தில் ஒருவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கீழ் மட்ட தலைவர்களில் இருந்து மேல் மட்டத் தலைவர்கள் வரை பலரை பலமுறை நடையாய் நடந்து மிகவும் சிரமப்பட்டு சீட் வாங்குவதை எல்லா கட்சிகளிலும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் 1957 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் காமராஜரே முன்வந்து தன்னை நேரில் வந்து பார்க்கச் சொல்லி ஆள் மூலம் சொல்லியனுப்பிய போது திரு. தியாகி சடையப்பமுதலியார் தலைவரை பார்க்க புறப்பட்ட போது அவருடைய குடும்பத்தார் மற்றும் நெருக்கமான உறவினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரு. சடையப்பமுதலியாரை தேர்தலில் நிற்க வேண்டாமென்றும், திரு.காமராஜரைப் போய் பார்க்க வேண்டாம் என்றும் சொன்னார்கள். ஏற்கனவே சிறைக்கு சென்றதால் நம் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் பெரியதாக உள்ளது, இப்பொழுது தேர்தலில் நின்றால் அதற்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி வரும். எனவே தேர்தலில் யார் சொன்னாலும் நிற்க வேண்டாம் என்று சொன்னார்கள். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரும் அதை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் காமராஜரே சொல்லி அனுப்பிய பிறகும் தான் அவரை போய் பார்க்காமல் இருப்பது சரியல்ல. அது மரியாதை குறைவான செயல். அதனால் நீங்களும் வாருங்கள் நாம் நேரில் சென்று காமராஜரிடம் நம்முடைய நிலைமையை நேரில் சொல்லிவிட்டு வருவோம் என்று சொல்லி முக்கியமான ஒரு சிலரை அழைத்துக் கொண்டு காமராஜரை நேரில் போய் பார்த்து தங்கள் நிலைமையை சொன்னார்கள். காமராஜர் அவர்கள் எப்பொழுதும் நேர்மையானவர்கள், நம்பிக்கையானவர்களை கைவிடமாட்டார். அந்த வகையில் காமராஜர் அவர்கள் சடையப்பமுதலியாரை சிறையில் அவரின் நேர்மையையும், பண்பையும் பார்த்து அவர்மீது மிகவும் பரிவுகாட்டியிருக்கிறார். அதனால் திரு காமராஜர் அவர்கள், திரு. சடையப்பமுதலியாரும் அவருடன் வந்தவர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தானே முன்வந்து நீதான் அரக்கோணத்தில் வேட்பாளர், போய் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் வேலையைப் பார். யாரும் அவரை தடுக்க வேண்டாம் வெற்றி உனக்கே, நான் இருக்கிறேன், கவலைப்படாதே என்று வாழ்த்தி அனுப்பினார். அதற்கு மேல் யாரும் மறுப்பு சொல்ல முடியாமல், வந்து தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அந்த தேர்தலில் தியாகி சடையப்பமுதலியார் அவர்கள் அரக்கோணம் தொகுதியிலிருந்து மிகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரின் வெற்றி ஒரு சரித்திர வெற்றி. ஆம் ! அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரைப் போல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. இது சரித்திர வெற்றியாகும். இது அவரின் சாதனை வெற்றி. இவர் சட்டமன்ற பணிகளை செவ்வனே செய்து முடித்தார். நேர்மையானவராகவும், ஊழலற்றவராகவும் வாழ்ந்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்று மாவட்டத்திலேயே மிகவும் உயர்ந்த தலைவராக திகழ்ந்தார். ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும், பின்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பல்லாண்டு பணியாற்றினார். காமராஜர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்ததால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும் அனைவரும் இவரிடம் மிகுந்த மரியாதையுடனும், நட்புணர்வுடனும் பழகி வந்தார்கள். அதேபோல் அமைச்சர்களும் இவர் மீது பற்றும், பரிவும் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர் தன்னலம் கருதா பொதுநலத்தொண்டர் என்பதால் அமைச்சர்களும், அதிகாரிகளும் இவர் எந்த நேரத்தில் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை மறுக்காமல் செய்து தந்தார்கள். மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தங்களால் எதையாவது சாதிக்க முடியாமல் போனால் இவரின் உதவியை நாடி இவர் மூலமாக தங்கள் காரியங்களை பூர்த்தி செய்து கொண்டார்கள். நேர்மையான செயலாக இருந்தால் கண்டிப்பாக அதை பூர்த்தி செய்து கொடுப்பார். சட்டத்துக்கு புறம்பானதாக இருந்தால் அதை எந்தக் காரணத்தை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளமாட்டார்.
இவர் ஒரு நல்ல நகர மன்றத் தலைவர்: பனப்பாக்கத்தில் முறையான பள்ளிக்கூடம் இல்லாததால் இவர் தலைவராக வந்த பிறகு தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் தொடக்கப்பள்ளியை தொடங்கினார். பின்பு பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதற்காக பள்ளியை விரிவுபடுத்த வேண்டி இருந்ததால், பனப்பாக்கம் கிராமத்தின் பொதுமக்கள் பேராதரவோடு மாடு மேய்ச்சல் புறம்போக்காக இருந்த மிகப் பெரிய மைதானத்தில் பல அறைகள் கொண்ட மிகப் பெரிய கட்டிடம் கட்டி அதை கல்வி மந்திரி கனம் திரு. மாதவமேனன் அவர்கள் தலைமையில் முதலமைச்சர் திரு. காமராஜர் அவர்களை கொண்டு திறப்பு விழா செய்தார். சிறிய பள்ளியாக தொடங்கப்பட்ட பள்ளி பின்பு நடுநிலைப்பள்ளியாக உயர்ந்து பின்பு உயர்நிலைப் பள்ளியாகவும், அதைத் தொடர்ந்து மேநிலைப் பள்ளியாகவும் உயர்ந்து ஆயிரக் கணக்கில் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளியாக உரு எடுத்தது. அதற்காக முதலமைச்சர் திரு. காமராஜ், முதலமைச்சர் திரு. பக்தவத்சலம், நிதி அமைச்சர் திரு. சி.சுப்பிரமணியம் போன்றவர்களின் ஒத்துழைப்பால் பல கட்டிடங்களை கட்டி பள்ளியை மேலும், மேலும் விரிவுபடுத்தினார். இன்று மிகப்பெரும் கட்டடங்களைக் கொண்ட பள்ளியாக உருவாகியிருப்பதற்கு அவரின் சீரிய முயற்சியே காரணம். அதேபோல் பனப்பாக்கத்திற்கென சொந்தமாக ஒரு சிறப்பானதாகவும் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ளதான ஒரு பெரிய மருத்துவமனை கட்டிடத்தையும் கட்டி அதை அரசிடமே ஒப்படைத்தார். அதைப்போலவே பேரூராட்சிக்கென்று ஒரு கட்டிடத்தை சிறப்பான முறையில் கட்டி அதை அப்போதைய ஊராட்சித்துறை அமைச்சர் திரு. பூவராகவன் அவர்களைக் கொண்டு திறப்பு விழா செய்தார். அந்த காலத்தில் மாவட்டத்திலேயே சிறந்த பேரூராட்சி மன்ற கட்டிடம் என்றும், குறிப்பாக பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கத்தை அவர் வடிவமைத்ததை பார்த்தவர்கள் எல்லாம் இதுபோல் இந்த மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை என்றும் பாராட்டினார்கள். அவர் காலத்தில் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் மிகவும் வலுவானதாகவும், நூறு ஆண்டுகள் ஆனாலும் ஒரு ஓட்டை, ஒழுகல் அல்லது வெடிப்பு போன்ற எந்த குறைபாடுகளும் நேராதபடி மிக நேர்த்தியாக கட்டப்பட்டன. அதனால் தான் தற்போது அதே கட்டிடத்தின் மேல் மேலும் ஒரு அடுக்கு மிகப் பிரம்மாண்டமானதாகக் கட்டி முடித்து இருக்கிறார்கள். இவைகள் எல்லாம் திரு. தியாகி சடையப்பமுதலியாரின் சாதனைகள் ஆகும். இவர் கடவுள் பக்தி நிறைந்த ஆன்மீகவாதி : அவர் காலத்தில் பல கோயில்களை சீரமைத்தார். சில கோயிகளை புதுப்பித்து குடமுழுக்கு செய்தார். குறிப்பாக பனப்பாக்கத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீ மாயூரநாதப் பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அதிலும் மேற்படி கோயிலில் இருக்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானை தன்னுடைய குல தெய்வமாகவே போற்றி மகிழ்ந்தார். மேற்படி ஆலயத்தில் பல வருடங்கள் பிரம்மோத்சவம் செய்து சிறப்பித்தார். அது சமயம் தமிழ் நாட்டில் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்கள், நாதஸ்வர வித்வான்கள், தேவார இசை ஓதுவார்கள், பிரபலமான ஆண், பெண் பாடகர்கள், நாடக, நாட்டிய கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் இவர்களையெல்லாம் வரவழைத்து மேற்படி விழாவை சீரோடும், சிறப்போடும் நடத்துவார். அதுபோலவே கடவுளர் சிலைகளை எல்லாம் மிகவும் சிறப்பாக அலங்காரம் செய்து தானும் மகிழ்ந்து, மக்களையும் மகிழ்விப்பார். மிகப்பெரிய ஊர்களுக்கு இணையாக கச்சேரி, வாணவேடிக்கை எல்லாம் நடத்தி மிகப் பிரம்மாண்டமாக திருவிழாவை நடத்துவார். அனைவரும் பார்த்து பிரமித்து பாராட்டுகின்ற வகையில்தான் விழாவை நடத்துவாரே தவிர யாரும் முகம் சுளிக்கின்றவாறு விழவை நடத்தமாட்டார். அதை போன்ற விழா நடத்துவதற்கு அவருக்கு நிகர் அவர் ஒருவரே. அவரால் இந்த ஊர் பெருமை பெற்றது. அவர் காலத்தில் தான் இந்த ஊருக்கு மின்சாரம் கொண்டுவரப்பட்டது. தெருவெங்கும் விளக்குகள் பொறுத்தப்பட்டன. மணல் சாலையாக இருந்த சாலைகள் செப்பனிடப்பட்டு கிராவல் போடப்பட்ட சாலைகளாகவும், ஓரிரு இடங்களில் தார் சாலையாகவும் ஆனது. பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினசரி தெருவெங்கும் துப்புரவு செய்யப்பட்டது. ஊர் முழுவதும் சாலைகளின் இரு புறத்திலும் கருங்கற்களைக் கொண்டு கழிவு நீர் வழங்கப்பட்டது. பின்பு அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தெருக்குழாய்கள் மூலம் தியாகி திரு. சடையப்பமுதலியார் அவர்கள் எல்லா நிலைகளிலும் ஓர் உயர்ந்த மனிதர். நல்ல பண்பாளர், உத்தமர். ஊழலற்ற அரசியல்வாதி, ஊழலையே செய்யத் தெரியாத ஒரு நல்ல மனிதர், உண்மையான தேசபக்தி கொண்ட தியாகி, காந்தியவாதி இப்படி அவரைப் பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
கால்வாய் கட்டப்பட்டது. மேநிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. இங்கே நான் குறிப்பிட்டவைகள் எல்லாம் ஏதோ சம்பிரதாயத்துக்காக சொன்ன வார்த்தைகள் அல்ல. நானே நேரிடையாக அவரோடு பல்லாண்டுகள் மிகவும் நெருக்கமாக பழகி பார்த்து நேரில் அறிந்து கொண்டவைகள்தான். இவை அனைத்தும் என் ஆழ் மனத்தில் அவரைப் பற்றி பதிந்த உண்மையான சுவடுகள். எனக்கு அவர் தலைவராகவும் இருந்தார், வழிகாட்டியாகவும் இருந்தார், என்றும் நினைத்து போற்றுகின்ற நண்பராகவும் இருந்தார். தமிழ் நாட்டில் கர்மவீரர் காமராஜரின் ஆட்சிக் காலம் ஒரு பொற்காலம் என்று சொல்வார்கள். அதுபோலவே பனப்பாக்கத்திற்கு தலைவர் தியாகி திரு.ச.சி.சடையப்பமுதலியாரின் காலம் ஒரு பொற்காலம். இதில் அணுவளவும் சந்தேகமில்லை.
பனப்பாக்கம் பேரூராட்சி மன்றத்தின் முகப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருந்த தலைவர் தியாகி திரு. ச.சி.சடையப்பமுதலியார் அவர்களின் திருஉருவச் சிலையை அமைப்பது அவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிப்பதுபோல் ஆகும். அதுதான் இந்த ஊர்மக்கள் அவருக்குச் செய்கின்ற நன்றியாகும். இந்த எனது ஆவலை அனைத்து மக்களின் உள்ளங்களிலும் சென்று சேர்க்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீமாயூரநாதன் பெருமானின் பொன்னார் திருவடிகளை போற்றி பணிந்து வேண்டுகிறேன். தலைவர் தியாகி திரு. ச.சி.சடையப்பமுதலியாரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி மகிழும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காந்தீயம் வாழ்க, காமராஜ் புகழ் வாழ்க, தியாகி. திரு. சடையப்பமுதலியார் புகழ் ஓங்குக. நன்றி ! வணக்கம்.