மயிலாடுதுறை செங்குந்தர் செப்பேடு

0

 மயிலாடுதுறை செப்பேடு



செப்பேட்டின் காலம்: 16ஆம் நூற்றாண்டு, நரசிம்மர் ஆட்சிகாலம் (விஜயநகர பேரரசு)
 
இச்செப்பேடு எழுதியவர்: நாவினால் மழ எடுத்த ஞானப்பிரகாச சுவாமிகள்
 
செப்பேட்டில் உள்ள செய்தியின் சுருக்கமான விளக்கம:
நெசவு மற்றும் போர்களில் குலத் தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்த செங்குந்த கைக்கோள முதலியார்  என்னும்   முருகப் பெருமானின் படைத்தளபதிகள் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வழி வந்த சமூகத்தின் வரலாற்றை திருச்சேஞ்ஞலூரைச் வேளாளர் ஆதரித்தைச் சேர்ந்த நாவினால் அலுவலக ஞானப்பிரகாச சுவாமிகள் ஓலை சுவடியில் பிரசங்கங்களாக இயற்றியதற்காக செங்குந்தர் கைகோல சமூகத்தினர் இவரை குருவாக ஏற்று இவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை பற்றி விளக்கும் செப்பேடு.  

இவரை எட்டுக்கால் பீடத்தில் மீது இடங்கை பாவாடை விரித்து, இருபுறமும் விளக்கு வைத்து, பாதபூசை செய்து 1. தறிக்கு ஒருபணம் 2. தலைக்கட்டுக்கு ஒரு பணம் 3. நன்மைக்கு ஒரு பணம் 4. தீமைக்கு ஒரு பணம் 5. மூக்கூத்திக்கு ஒரு பணம் என  72 செங்குந்தர் நாட்டுக் கைக்கோளரும் தருவதெனத் தீர்மானித்து மரியாதை செய்தனர். மேலும் இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் உள்ள எந்த இடத்திற்கும் சென்றாலும் இவரைப் பாவாடை (துணி) விரித்து வரவேற்று உபசாரம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானங்கள் காஞ்சிபுரம் ஏகாம்பர் கோயிலில் முகவாயில் எழுந்தான் என்ற மண்டபத்தில் கூடி எடுக்கப்பட்டு “சமயச் செப்பேடு“ என்ற பெயரில் செப்பேடாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
செப்பேட்டின் நகல்:
  • உ கணபதி துணை சிவ மீறுபை சண்முகன் துணை
  • ஸொஸ்திஸ்ரீ மன்மகா மண்டலேசுவர முவராய க
  • ண்ட நரைசிங்கராயர் பிரதிராஜிய பரிபாலந
  • ம் பண்ணி யருளா நின்ற சாலீய வாகன சகாப்த்த
  • ம் காஎ கலியுகாப்த்தம் சசூகூா அம்சு யி
  • தின் மேல் செல்லா நின்ற விஜய ள பங்குனி
  • உஉ குருவாரம் அசுவதி ஷ்சுஷத்திரமும் சித்தயோகமும்
  • சுபகரணமும் கூடிய சுபதினத்தில் ஸ்ரீகாஞ்சிபுர
  • யேகாம்பரனாத சுவாமி சன்னிதியில் முகவாயி
  • லெழுந்தான் மண்டபத்தில் செங்குந்தர் மற்றுள்ளா
  • ருங் கொறைவற கூடியிருந்து திருச்சேஞ்ஞலூர்
  • சுத்த சைவாசாரியராாகிய னாவினால் மழுவெடுத்த
  • ஞானப்பிரகாச சுவாமியாரவர்களுக்கு உரித்தி
  • ர புத்திரர் ஆணுக்கேறாய்ப் பிறந்தோர் மெயிமீசை
  • யிருந்தோர் வீரர் பாணனென்றும் பொற்கோவில்
  • கைக்கோளரென்னுங் கொங்கெழுபத்து ரெண்டு னா
  • ட்டிலுள்ள செங்குந்தரானவரும் பண்ணிக் கொடுத்த
  • சமையச் செப்பேடு கந்தபுராணத்தில் கைக்கோ
  • ளர் வரலாற்றின் பெருமையை மிகுதியாயிப் பா
  • டி பிரசங்கித்து னாவினால் மழுவெடுத்து அரங்கே
  • ற்றி நவவீரர் வம்சம் னிச்சயித்த சுவாமிகளுக்கு ப
  • ரிசு கொடுத்துத் தீராதென்று யிரட்டை விளக்கு மிட
  • ங்கைப் பாவாடை யிட்டு யெண்கால் பீடத்தே
  • பாதார்ச்சனை பண்ணி சாயிபோகமாயி தரி
  • க்கொரு பணம் தலைக்கட்டுக்கொரு பணம் நன்
  • மைக்கொரு பணம் தீன்மைக்கொரு பணம்
  • மூக்குத்திக் கொரு பணம் யிந்த அஞ்சு பணமும் வரு
  • த்தனையாக யெந்த மண்டலத்திலுள்ள யெந்த
  • கைக்கோள துரைகளும் பாவாடை வரிசை யு
  • பசாரஞ் செய்யவும் யிந்த செப்பேடு தள்ளி ய
  • தாசினமும் ஆஷேபமுஞ் செய்ய கூடாது யிந்த
  • கட்டளை சந்திராதித்தயருள்ள வரைக்குந் தப்பா
  • து யிந்தக்கட்டளை தள்ளி யுதாசன யாசேஷப
  • ம் பண்ணின பேர்களுக்கு சிவசக்தி சண்முகன் பா
  • தத்தானை சிவசமயஞ் செங்குந்த நாட்டாராணைப்
  • படி மகா பாதகனகாயாவரவரதினரகங்களை
  • யடைவார்களென்றுஞ் சத்தியமாய் யெழுப
  • த்து ரெண்டு னாட்டிலுள்ள செங்குந்தரானவரு மேகா
  • ம்பரனாத சுவாமி சன்னிதானத்தில் னரைசிங்
  • க ராயர் முன்பாக ஞானபிப்பிரகாச சுவாமியார
  • வர்களுக்கு தாம்பூர சாசனம் பண்ணிக் கொடுத்தோ
  • மிதரக் கரியஞ்சாதியார் சோழமண்டலத்துள்
  • பூமி பாலகரும் வாதாவியைத் திறைகொண்ட
  • வன்னியரு மிவர்களறிய பொது கையொப்
  • பஞ் செங்குந்தம் உ கந்தவேள் துணை உ
 
தமிழாக தொல்லியல்_துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
➡️ (Click)
_____________________________________
 
#செங்குந்தர் #முதலியார் #கோசர் #சேவற்கொடிவம்சம் #புலிக்கொடிவம்சம் மரபுவழி கோவில்களில் #சூரசம்ஹாரம் செய்யும் வம்சம்
#கந்தப்பரம்பரை #சோழர்_படை
#தெரிந்த_கைக்கோளர்_படை
#செப்பேடு #கந்தன்









செங்குந்தர் வரலாறு மீட்பு குழு ஞானப்பழக வள்ளலார் அவர்களின் வம்சாவளியினர் வீட்டுக்கு நேரடியாக சென்று இச்செப்பேட்டின் போட்டோவை எடுத்தோம்




செப்பேட்டையில் அதிக சிற்ப வேலைபாடுகள் இருப்பதால் தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்ட தமிழக செப்பேடு பகுதி ஒன்னு புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் செங்குந்த மயிலாடுதுறை செப்பேடு


செப்பேட்டின் பின்பக்கம்


இந்த செப்பேட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர் சொல்லும் தகவல்


Post a Comment

0Comments
Post a Comment (0)