தக்கோலம் ஏ.ஜே. ராமசாமி முதலியார் exMLA

0

 செங்குந்தர் கைக்கோள முதலியார்                குலத்தோன்றல்

சுதந்திர போராட்ட தியாகி, மொழிப் போராட்ட தியாகி, ஊழல் எதிராக போராடியவர், மூன்று முறை MLA வான வெற்றி பெற்ற

தக்கோலம் 
ஏ.ஜே. ராமசாமி முதலியார்
(07.07.1927 - ?.?.??)


பிறப்பு மற்றும் வாழ்க்கை
 அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் தக்கோலம் என்னும் கிராமத்தில் செங்குந்தர் கைக்கோளர் குலத்தில்  ஜகன்னாதன் செல்லப்ப முதலியார் என்பவருக்கு மகனாக 7 ஜூலை 1927 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு குடும்பம் விவசாயம் மற்றும் ஜவுளித் தொழிலை செய்து வந்தனர். தக்கோலம் வாரிய தொடக்கப் பள்ளியில் கல்வி கற்று பின்பு ஒன்பதாம் வகுப்பு வரை அரக்கோணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். திருமணத்திற்குப் பின் இவருக்கு மூன்று மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர்.

சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.

தக்கோலம் நேதாஜி பள்ளியின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.

உற்சாகம் கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

 காங்கிரஸிலிருந்து விலகி அறிஞர் அண்ணாதுரை முதலியார்  அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1949-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.

1950-ம் ஆண்டில் தி.மு.க. பொது மன்றத்தின் உறுப்பினரானார்.

1964-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் காஞ்சீபுரத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நான்குத் திங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றார்.

அதன் பின் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு நான்கு மாதங்கள் சிறையில் இருந்தார்.

அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு எம்எல்ஏ ஆன இவர் பிறகு அண்ணா மறைவுக்குப் பின் மு.கருணாநிதி முதல்வராக பல ஊழல் செய்ததால் அவரை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்தியவர். தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் இவரை திமுகவில் இருந்து நீக்கினர் அதனால் இவர் அதிமுகவில் இணைந்தார்.

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் மாகாண சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் மாகாண சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.





மேலும் இவர் குலதெய்வம், மறைந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழுக்கு வாட்சப்பில் 7826980901  அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.



Post a Comment

0Comments
Post a Comment (0)