செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத்தோன்றல்⚜️
⚜️குலத்தோன்றல்⚜️
சுதந்திரப் போராட்ட வீரர், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க முன்னாள் தலைவர், திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் சீர்மிகு திருவாளர் கா. அ. சண்முக முதலியார்
(2-11- 1885 - 17.07.1978)
திருப்பத்தூர் சீர்மிகு திருவாளர் கா. அ. சண்முக முதலியார்
(2-11- 1885 - 17.07.1978)
அன்றைய மெட்ராஸ் மாகாணம் ஒன்று பெற்ற வட ஆற்காடு மாவட்டத்தில் திருப்புத்தூர் என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் மரபில் வசதி வாய்ந்த நூல் மற்றும்
கைத்தறித் துணை வாணிகத்தில்
சிறந்து விளங்கிய கா. அருணாசல முதலியாருக்கும்.
துணைவியார் முத்துவேடியம்மாள்
ஆகியோருக்கும் 2-11-
1885ல் சண்முக முதலியார்
தோன்றினார். இவருக்குப்பின் ஆண்
மக்கள் இருவர். பெண் மக்கள் மூவர்
பிறந்தனர். சிவனையும் முருகனையும் தீவிரமாக வணங்கும் செங்குந்தர் கைக்கோளர் பிறந்திரந்தாலும் வைணவ மதத்தின் கொண்ட ஈர்ப்பின் காரணமாக வைணவ மதத்தை இவர் தீவிரமாக பின்பற்றினார் மேலும் வைணவ நூல்களை பல எழுதியுள்ளார்.
இளமையில் கல்வி:
சண்முகருக்கு 5 ஆண்டுகள்
நிறைந்த பின்னர் அவரை
திருப்பத்தூர் ஆஞ்சநேயர் கோவில்
நாகப்ப நாயுடு திண்ணைப் பள்ளிக்
கூடத்தில் சேர்த்தனர். அங்கு சில
காலம் பயின்றார், மாரியம்மன் கோவில்
பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார்,
பின்னர் சாமி செட்டித் தெருவில்
உள்ள கல்யாணராமய்யர் பள்ளிக்
கூடத்தில் சேர்ந்து பல ஆண்டுகள்
படித்தார்.
பொதுத்தொண்டு:
1915ம் ஆண்டில் திருப்பத்தூரில்
முதன்முதலாக பெஞ்ச் மாஜிஸ்திரேட்
கோர்ட் அமைந்த போது.
திரு.சண்முகனார் அவர்கள் கௌரவ
மாஜிஸ்ட்ரேட் ஆக நியமிக்கப்பட்டார்.
5 ஆண்டுகள் அப்பணியாற்றிய பிறகு,
1920ல் முதல் வகுப்பு பெஞ்ச்
மாஜிஸ்ட்ரேட் ஆக நிமனம் பெற்றார்.
ஜில்லா போர்டு - நகர் மன்றம்
1924ல் அப்பதிவியிலிருந்து
விலகி. ஜில்லா போர்டு உறுப்பினர்
தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
1927ல் திருப்பத்தூர் நகர மன்றத்
துக்கு ஓர் உறுப்பினராக நியமிக்கப்
பெற்றார். அந்த ஆண்டிலேயே நகர்
மன்றத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்
பட்டார். 1930ல் திருப்பத்தூரில்
“பிளேக்" என்னும் கடும் நோய்
ஏற்பட்டு, மக்கள் எல்லோரும்
வெளியூர் சென்று விட்டனர். தலைவர்
என்ற முறையில் இவர் பாதிக்கப்பட்ட
இடங்களுக்கு எல்லாம் சென்று
தேவையான உதவிகளைச் செய்தார்.
1933ல் மீண்டும் நகர் மன்றத்
தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
தாலுகா போர்டு
1930ம்
முதல்
திருப்பத்தூர் தாலுகா போர்டில் அங்கம்
வகித்து வந்தார். 1933ல் தாலுகா
போர்டுக்குத் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1933ல்
ஜில்லா போர்டு தேர்தலிலும் நின்று
வெற்றி பெற்றார். 1936ம்
ஆண்டுடன்
ஜில்லா போர்டு உறவு முடிந்தது.
காந்தீயக் கொள்கையில் பற்று
சண்முகர் தமது மணி விழா
நினைவாக காந்தி கட்டட நிர்மாண
அறக்கட்டளை நிறுவி, அதற்கு
ரயில்வே ரோடில் உள்ள தனது 0.80
செண்ட் நிலத்தை நன்கொடையாகக்
கொடுத்தார். காந்தியடிகளின்
கொள்கைகளைப் பரப்ப கால்கோள்
செய்யு முகத்தான், இலவச திருமணம்,
நூல் நூற்பு வேள்வி, இந்த கலாசாரப்
பிரச்சாரம் போன்றவை நிகழச்
செய்தார். அன்று அவர் கொடுத்த 0.80
செண்ட் நிலம் இன்று ஒரு கோடி
ரூபாய் மதிப்பு பெறும். இவர் பல்வேறு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளார்.
சட்டமன்றம்
1937ஆம் ஆண்டில் சென்னை
மாநிலச் சட்டப்பேரவைக்கு காங்கிரஸ்
கட்சியின் சார்பாக சண்முகனார்
அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்
பட்டார். நீதிக்கட்சி சார்பாகவும் மக்கள்
கட்சி சார்பாகவும் இரு வேட்பாளர்கள்
போட்டியிட்டனர். மும்முனைப்
போட்டி. மூன்று மாதங்கள் தேர்தல்
வேலைகள் நடைபெற்றன. பெருவாரி
யான வாக்குகள் பெற்று சண்முகனார்
வெற்றி பெற்றார். காந்தியடிகளின்
அறப்போராட்டம் காரணமாக நாட்டில்
அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதனால் 1941ல் சட்டப் பேரவை
அரசால் கலைக்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் பெரியவர் சண்முகனார் மீது பெரும் பற்றை வைத்து இருந்தார்.தொண்டை மண்டலம் வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார்.
1954-ல் பெருந்தலைவர் காமராசர் சொந்த மாவட்டத்தில் புறக்கணிக்கபடும் போது பெரியவர் சண்முகனார் குடியாத்தம் போட்டியிட சொல்லி அங்கே ஏற்கனவே MLA ஆக இருந்த செங்குந்தர் சமூக அருணாசல முதலியார் இராஜினாமா செய்ய சொன்னார்.சொந்த சமூகத்தை சார்ந்தவர் என்று பாராமல் சொன்னார் என்று குறிப்பிட தக்கது.
செங்குந்த முதலியார் அதிகமாக இருக்கும் குடியாத்தம் தொகுதியில் தேர்தலில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இந்த இடைத்தேர்தலால் தான் காமராஜர் முதலமைச்சராக வர முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நல்ல முதல்வர் தமிழகம் பெற பெரியவர் சண்முகம் முதலியார்,
அருணாசல முதலியார் தியாகமே காரணம்.
நூற்பு ஆலைகளில் - பங்கேற்பு
20ஆம் நூற்றாண்டில் முற்பகுதி
யில் கோயம்புத்தூரில் நூற்பு ஆலைகள்
தொடங்கப்பட்டன. 1924ம் ஆண்டு
கோவையில் தொடங்கப்பட்ட
ஸ்ரீரங்கவிலாஸ் மில்லில் சண்முகனார்
பங்குதாரராகச் சேர்ந்து டைரக்டரா
கவும் ஆனார். பின்னர் பயனீர்
மில்லிலும் பங்குதாரர் ஆகி டைரக்டர்
பதவி வகித்தார். திருப்பூரில் ஆலை
அமைக்க ஆவன செய்தார். அந்த
மில்லில் பல ஆண்டுகள் டைரக்டரா
கவும் இருந்தார்.
நூற்பு ஆலைகளின் தொடர்பு
இருந்ததால், நூல் வியாபாரத்தை
குடியேற்றத்தில் தொடங்கினார்.
அவ்வூர் செங்குந்தர்கள் பலரோடு
சேர்ந்து "கலைமகள் பருத்தி அரைவை
ஆலை" தொடங்கினார்.
திருமகள் நூற்பு ஆலை - நிர்வாகத்
திறமை
குடியேற்றத்தில் ஒரு நூற்பு ஆலை
தொடங்கினால் நல்ல இலாபம் வரும்
என் று அறிந்த சண்முக முதலியார்
ஏராளமான செங்குந்த பிரமுகர்க
ளோடு தொடர்பு கொண்டு
திருவாரூர்
வள்ளல் சபாபதி
முதலியார், காஞ்சி நாகலிங்க முனிவர்
முதலியவர்களோடு தொடர்பு
கொண்டு சுமார் 7 லட்சம் ரூபாய்
திரட்டி "திருமகள் நூற்பாலை"
ஒன்றை நிறுவி 1937 முதல் 1965
வரை சிறப்பாக நிருவகித்தார்.
சண்முக முதலியார் மற்றும் பல செங்குந்தர் சமூகப் பிரமுகர்கள் சேர்ந்து திருமகள் மில்ஸ் அரசு கல்லூரி ஆரம்பிப்பதற்காக 47 ஏக்கர் நிலம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை 1964ஆம் ஆண்டு நன்கொடையாக வழங்கினர்
செங்குந்த சமுதாயப் பணி
திரு , கா.அ.சண்முக முதலியார்
அவர்கள் திருப்பத்தூரில்
தோன்றிய செங்குந்த குல மக்களின்
முன்னேற்றத்தில் இளமை முதல்
ஆர்வம் காட்டி வந்தார்.
1934ல் திருவாரூரில் நடைபெற்ற
செங்குந்தர் மாநாட்டில், வர்த்தக
மாநாட்டுத் திறப்பாளராகவும் 1937ல்
மதுரையில் கூடிய செங்குந்தர்
மாநாட்டுத் தலைவராகவும் 1956ல்
திருச்செங்கோட்டில் கூடிய செங்
குந்தர் மாநாட்டில் சமூக மாநாட்டுத்
தலைவராகவும் சண்முகனார் அவர்கள்
பங்கேற்றார்.
சண்முகனார் அவர்கள் 1955ஆம்
ஆண்டு முதல் தென்னிந்திய
தாம் மாணவ
செங்குந்த மகாஜன சங்கத்தின்
தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
25-12-1976 வரை தொடர்ந்து 21
ஆண்டுகள் தலைவராக இருந்து
பெரும் பணியாற்றினார்.
அப்போது சென்னை அரசு பணி
தேர்வுகளுக்கு படிக்க செல்லும் செங்குந்தர் சமூக இளைஞர்கள் தங்க வசதி கிடைக்காத காரணத்தால் இவரின் முயற்சியால் ஒரு நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அந்த இடத்தில் தான் இன்று சென்னை சேத்துப்பட்டு (வள்ளல் சபாபதி பள்ளி) இயங்கி வருகிறது.அப்போது கட்டுமானப் பணியில்
இருந்த வள்ளல் சபாபதி
இல்லத்தை தானே முன்னின்று கட்டி அதற்கு ரூ.5.000/- நன்கொடை
அளித்ததோடு, கட்டிட நிதிக்குப்
பெரும் பொருள் ஈட்டித் தந்தார்,
திருக்கோயில்கள் பணிக்காகவும்.
கல்வி நலத்திற்காகவும் இவர் அளித்த
நன்கொடைகள் ஏராளம்; ஏராளம்.
கவிஞராகத் தமிழ்ப்பணி
திரு.கா.அ.சண்முகனார் அவர்கள்
ஒரு சிறந்த கவிஞராகவும் இருந்தார்.
இவருடைய தமிழறிவு வியக்கத்
தக்கது, இயல்பாக கவியியற்றும்
இவரது திறமையை கண்டு தமிழறிஞர்
பலரும் போற்றியுள்ளனர்.
இவர்
இயற்றிய கவிதை நூல்கள் விபரம்:-
நயாளினி வெண்பா, திருமால்
போற்றி அகவல், இராமன் புகழ் அறுபது, திருமால் அவதாரம்,
திருவேங்கடமாலை, நூற்றியெட்டு
திருப்பதி போற்றி அகவல், திருமால்
வெண்பா மாலை, இராகவன் புகழ்
மாலை, திருவேங்கடப்பெருமாள்
திருப்பள்ளியெழுச்சி, சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி, திருமால் அருச்சனை
ஈடுபாடு, காங்கிரஸ் பேரியக்கத்தில்
பணி, கல்விப் பணி, வேதாந்த பாட
சாலைப் பணி, கோயில் திருப்பணிகள், நூல், புத்தாண்டு வாழ்த்துக்கள்,
இவருடைய பொது வாழ்க்கை
தேச விடுதலை இயக்கத்தின்
செங்குந்த சமுதாயப்பணி, தமிழ் பணி
கவிதைகள் இயற்றும் பணி இவை
யெல்லாம் இவருடைய பெருமை
களைப் பேசிக் கொண்டேயிருக்கும்.
செங்குந்த செம்மல், திருப்பத்தூர்
தீபம் கா.அ.சண்முக முதலியார்
அவர்களது மாபெரும் வாழ்வு 1978ம்
ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள்
(காளயுக்தி ஆண்டு ஆடிமாதம் முதல்
நாள்) திங்கட்கிழமையன்று 93வது
வயதில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க
அவரது புகழ்! வளர்க அவர் தொண்டு!
க்க்
⚜️இப்பெரியவர் விட்டுச்சென்ற சமுதாய பணியின் இவரது மூன்று தலைமுறையாகவாரிசுகளு திருவாளர். எஸ்.பி.மணவாளன் எம்எல்ஏ வாக தேர்வாகி சிறப்பு செய்தவர் பரம்பரை பரம்பரையாக சமுதாய சேவையில் முன்னணியில்
உள்ளார் என்பது மிகச்சிறப்பாக ஆகும்
சமுதாய தொண்டினை செய்து வருபவரை வணங்கி வாழ்த்துவோம்.
உள்ளார் என்பது மிகச்சிறப்பாக ஆகும்
சமுதாய தொண்டினை செய்து வருபவரை வணங்கி வாழ்த்துவோம்.
1954ல் குடியாத்தம் இடைதேர்தல் பெருந்தலைவர் காமராஜர்
தொண்டர்களோடு உணவருந்துதல் திருமகள் நூற்பாலை மாளிகையில்
விருந்தோம்பலை முதலாவதாக
இருந்து கவனிப்பவர்
கா.அ.சண்முக முதலியார்.exMLA மகன் அ.ச.பத்மநாபன் அவர்கள்
இவர் எழுதிய நளாயனி வெண்பா மின் நூல் 👇👇