ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்..,Kt.,CIE

0

செங்குந்தர் கைக்கோள முதலியார்

குலத் தோன்றல் 

ராவ்பகதூர்  ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்.,KT.,CIE

19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும் செல்வந்தர் & வணிகர், துபாசி, அரசியல்வாதி மற்றும் கொடைவள்ளல் ஆவார்.

இந்திய தேசிய காங்கிரஸின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராகவும், அதற்கு செயல்வடிவம் கொடுத்துவரும் ஆவார்.

(13 அக்டோபர் 1840 – 6 மார்ச் 1911)

ஆரம்ப கால வாழ்க்கை
ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் 1840 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் காஞ்சிபுரம் மானாம்பதி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட செங்குந்த கைக்கோளர் குலத்தில் கட்டிட ஒப்பந்தக்காரருக்கு மகனாகப் பிறந்தார்.
இவருக்கு தையல் நாயகி அம்மாள் மற்றும் லேடி ஜானகி அம்மாள் என்ற இரண்டு மனைவிகள். இவர் டைம்ஸ் அண்டு கோ(டைம்ஸ் & கோ) நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்து பின்பு துபாஷி ஆக உயர்ந்தார்.

வகித்த முக்கிய பதவிகள்:

நகராட்சி ஆணையர், மெட்ராஸ் – 1877

துணைத் தலைவர், மெட்ராஸ் மகாஜன சபா

மெட்ராஸின் ஷெரிப் – 1886, 1887, 1905

மெட்ராஸ் சுகுனா விலாஸ் சபாவின் முதல் ஜனாதிபதி

இந்திய பஞ்ச தொண்டு நிவாரண நிதியத்தின் குழு உறுப்பினர் – 1897

மக்கள் சேவை

1870 களில் சவலை ராமசாமி முதலியார் பிரிட்டிஷ் ஆட்சி மெட்ராஸ் மாகாணத்தில் மக்களுக்கு இருந்த அறப் பணிகளுக்காக அறியப்பட்டவர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பார்க் டவுனிலும், திருக்கழுக்குன்றத்தில் சத்திரம் கட்டினார், அதில் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக செய்து கொடுத்தார்.

இந்திய நாட்டு பிரிட்டிஷ்காரர்கள் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் அடிப்படை சுகாதார நிலையம் கூட இல்லாத நிலையில் சொந்த தொலைவில் இவரது முதல் மனைவி ராணி தையல் நாயகி அம்மாள் நிறைவாக சென்னை ராயபுரம் (RSRM HOSPITAL), காஞ்சிபுரம் , திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பரங்குன்றம், கடலூர் மற்றும் கேரளா என பல ஊர்களில் மருத்துவமனை கட்டி கொடுத்தார்.

பத்தொன்பதாம் பள்ளியில் படிப்பறிவு இல்லாத மக்களுக்கு படிப்பு அறிவை வளர்க்க மெட்ராஸில் ஒரு பெரிய நூலகம் கட்டிக் கொடுத்தார்.

இவர் கடலூரில் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு மருத்துவமனை ஒன்றை மக்களுக்காக கட்டிக் கொடுத்தார்.இவர் கட்டி கொடுத்த அனைத்து மருத்துவமனைகளும் இன்று அந்தந்த ஊர் நகராட்சி அமைப்புகளால் இயக்கப்படுகிறது.

1884 ஆம் ஆண்டு சவலை ராமசாமி முதலியார் அவர்களால் மெட்ராஸ் சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரில் ஒரு பெரிய சத்திரம் கட்டப்பட்டது. இந்த சத்திரம் 1967 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டது. அதன்பின் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஏ ஜி மற்றும் ஓடி அமைப்புகளால் எடுக்கப்பட்டு தற்போது வரை சில மக்கள் சேவைகளை செய்து வருகிறது.

1902 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மன்னர் எட்வர்ட் VII மற்றும் ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் மெட்ராஸ் நகரத்தின் பிரதிநிதியாக சவலை ராமசாமி முதலியார் தேர்வு செய்யப்பட்டார் லண்டன் மாநகருக்கு அழைப்பு விடுத்தனர். மன்னர் நோய்வாய்ப்பட்டபோது முடிசூட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் அங்கிருந்து ஜூலை மாதம் சவலை ராமசாமி முதலியார் இந்தியாவுக்குத் திரும்பினார், அடுத்த மாதம் மீண்டும் திட்டமிட்டபடி முடிசூட்டு விழாவை மீண்டும் நடைபெற்றது விழாவில் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் லண்டன் சென்று கலந்து கொண்டார்.

இந்திய சுதந்திர இயக்கத்தில் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்

பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சி உருவாக காரணமாக இருந்த மெட்ராஸ் மகாஜன சபை என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்தது. அதற்கு நிதி உதவியும் அளித்து, சபாவின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்

சவலை ராமசாமி முதலியார் இந்திய தேசிய ஒன்றியத்துடன் தொடர்புடையவர், மேலும் 1885 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் இந்தக் காட்சியை 72 நபர்கள் கொண்ட குழு இங்கிலாந்து சென்று ஆரம்பித்தனர் அந்த 72 நபர்களில் சவலை ராமசாமி முதலியாரும் ஒருவர். இவர் பரிந்துரை செய்தவரே இந்திய தேசிய காங்கிரசு முதல் தலைவர் ஆனார்.

ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் 1887 இல் மெட்ராஸில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது அமர்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.அவர் காங்கிரஸ் வரவேற்புக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தது. பிரிட்டிஷ் கால இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இருந்த பிரிட்டிஷ் அரசை கண்டித்து இந்த கூட்டத்தில் அரசு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கோரி ஒரு தீர்மானம் போடப்பட்டது.ராஜா சர்சவலை ராமசாமி முதலியார் தீர்மானத்தை ஆதரித்து பேசினார். அவர் பேசிய வார்த்தைகள்👇

அன்பர்களே, அரசாங்கத்தில் சில சிறிய பிரதிநிதித்துவ கூறுகளை நாங்கள் வழங்குமாறு நாங்கள் பணிவுடன் வேண்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், இந்த நாட்டில் முழு அளவிலான பிரதிநிதித்துவ நிறுவனங்களை நாங்கள் எங்கள் மூக்கின் கீழ் வளர்க்கிறோம். பாண்டிச்சேரியிலும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு உட்பட்ட பிற இடங்களிலும் அவை எவ்வாறு செழித்து வளர்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இங்கிலாந்து இன்று சிறிய அளவிலான பிரதிநிதித்துவ நிறுவனங்களை அனுமதிக்காது, ஆனால் பாண்டிச்சேரியில் ஒவ்வொரு மனிதனும் தனது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அவர் ஆண்மை வாக்குரிமையை அனுபவிக்கிறார்!

மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வின் மூன்றாம் நாளில்,ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் ஒரு பொது சேவை ஆணையத்தை நிறைவேற்றுவதற்கான கேள்வி அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஒரு திருத்தத்தை முன்வைத்தார். 1889 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது அமர்விலும் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரசின் அடுத்த அடுத்த அமர்வுகளிலும் அவர் பங்கேற்றார். 1894 காங்கிரசில், அவர் காங்கிரஸின் ஜனாதிபதி பதவிக்கு ஆல்பிரட் வெப்பத்தை முன்மொழிந்தார்.

அவர் முன்மொழிந்தவரே ஜனாதிபதியாகவும் மற்ற நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறப்பு

ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் 1911 இல் தனது 71 வயதில் இறந்தார், சென்னை கீழ்ப்பாக்கம் கிலாபுக் கார்டன் சாலையில் அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது சிலை அவரது நண்பர்களால் ராஜா சர் சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் பெருமைகள்

பிரிட்டிஷ் அரசால் ராஜா பட்டம் பெற்ற இந்தியர்கள் இருவர் மட்டுமே.

ஒருவர் செட்டிநாட்டு ஜமீன்தார், மற்றொருவர் நமது ராஜா பட்டம் பெற்ற  சவலை ராமசாமி முதலியார் Kt.CIE க்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

சவலை ராமசாமி முதலியார் 1885 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்தியப் பேரரசின் தோழர் (CIE) பதவியில் சேர்க்கப்பட்டார். இவர் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு அதிக சொத்துக்களை தானம் செய்ததால் அவருக்கு “ராவ் பகதூர்” என்ற உயரிய பட்டங்களும் வழங்கப்பட்டன.

1886 ஆம் ஆண்டில், அவர் மெட்ராஸின் 158 வது ஷெரிப் ஆனார், இந்த பதவியை முதல் இந்தியர் இவரே அவர் வகித்தார்.

இவர் பிப்ரவரி 14, 1887 அன்று குயின்ஸ் கோல்டன் ஜூபிலி ஹானர்ஸ் பட்டியலில் Sir & Knighted என்ற பட்டம் பெற்றார்.

“பட்டத்து ராஜா’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது வேறுபாட்டை அவர்,

ஜனவரி 1, 1891 அன்று வில்லியம் கோட்டையில் இந்திய வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் அவர்களால் “ ராஜா”பட்டம்  கொடுக்கப்பட்டது.

ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள அவரது சத்திரத்தில் ஒரு பொது விழாவாக கொண்டாடப்படுகிறது.

செயல்பாடு AGOT சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கூட்டுறவு அறங்காவலர் எஸ்.வி.ஆர். ராம் பிரசாத் (ஐயாவின் கொள்ளுபேரன்) மூலம் நிர்வகிக்கப்படுகிறது, இதில் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் தொண்டு நிறுவனம் உள்ளது.




சென்னை ராயபுரம் அரசு ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் (RSRM) லையிங் மருத்துவமனை. இதை கட்டியவர் இவரே.


ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் நினைவு சிலை

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டியவர் இவர்.. காஞ்சிபுரம்





கேரளா ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் குழந்தைகள் மருத்துவமனை



திருச்சி இயக்கிரங்கத்தில் முதன் மருத்துவமனை முதலில் கட்டிய சவலை இராமசாமி முதலியார் .

ஸ்ரீரங்கம் சரித்திரத்தில் அரங்கன் கோடை உள்ள திருவங்கம் மருத்துவ மனை !!!!   

வருடம் 1871 அன்றைய மருத்துவ அதிகாரி சர்ஜன் ஜெனரல் பால்ஃபோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து இருந்த பொது ஊர் மக்கள் ஸ்ரீரங்கத்தில் ஒரு மருத்துவ மனை வேண்டினார்கள் !!! உடனடியாக 600 ரூபாய் அளிக்க ஒத்துக்கொண்டார் !!! ஆனால் ஒரு மருத்துவமனையை உருவாக்க இந்த பணம் துளியும் போதாது

இதன் விளைவாக, நிதி திரட்டுவதற்கான பிற முயற்சிகள் பயனளிக்கவில்லை என நிரூபிக்கப்பட்டபோது, ​​திட்டம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டது இந்த நெருக்கடியான சூழ்நிலையில், 

1873 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மருந்தகம் திறக்கப்பட்டது. முதலில் இது கோவில் சுவர்களுக்குள் ஒரு வீட்டில் இருந்தது, அங்கு உள்நோயாளிகளுக்கு தங்குமிடம் இல்லை.

இதன் முதல் மருத்துவர் திரு பாலு முதலியார் என்பவரே !!! அவரின் பெரும் முயற்சியே இன்றைய மருத்துவமனை இந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறது !!! 

1884 மார்ச் மாதத்தில் அன்றைய கூரை கட்டிடங்கள்- தீயில் எரிந்து போனது !!! 

அதே ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பெருமாள் செவிக்க வந்து இருந்த ராஜா சர் இராமஸ்வாமி முதலியார், கே.டி., CIE ( இவர்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை 1860 களில் ஆரம்பித்தவர் !!! ) இவர் அன்றே நிறைய மருத்துவ மனைகளை தமிழகம் எங்கும் கட்டியவர் - இவரை உதவிக்கு 140 ஆண்டுக்கு முன்னாள் 1885 இல் அவர் அளித்த 13,000 ரூபாய் கொண்டு நீங்கள் படத்தில் காணும் இந்த இரண்டு அடுக்கு மறுத்துவமணியை காட்டினார்கள் .. 
இதில் கவனிக்க வேண்டியது பிரிட்டிஷ் காரணம் கொடுக்கப்பட்டது வெறும் 600 ரூபாய் ஆனால் நம் முதலியார் கொடுத்தது 13,000. அன்றைய மதிப்பில் 13000 பணத்தை வைத்து 60 ஏக்கர் நஞ்சை நிலம் வாங்கலாம்

இன்று இந்த படம் எடுக்க சென்று அந்த மாமனிதர் பற்றி சொல்லி விட்டு வந்தேன் - அங்கே பணிபுரியும் ஒரு இளவயது மருத்துவ பெண்மணியிடம் !!!! 

இந்த மருத்துவ மணியை அன்றைய பல ஜமீந்தார்கள் தனவான்கள் வந்து தங்கள் ஊரில் இப்படி ஆரம்பிக்க வந்த கதைகள் நிறைய உண்டு !!! 

இந்த மறுத்துவமனை - ஸ்ரீரங்கம் கோவிலின் இடம் - இது நடத்த முதலில் கோவில் பணத்தை எடுத்து ஆரம்பித்தனர் !!! 

அரங்கன் கோடியே இந்த மருத்துவ சேவை ( இன்று அரசு பிடியில் இருக்கும் கோவில்களில் ஒரு டம்பளர் தண்ணீர் கூட கிடைக்காது ) 

விஜயராகவன் கிருஷ்ணன்

இந்த சவலை ராமசாமி முதலியார் புகைப்படம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. என்ன கொடுமை என்றால் இவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட யாரும் வந்து இந்தப் போட்டோவை பராமரிக்கவில்லை


இவர் கட்டிய ஸ்ரீரங்கம் மருத்துவமனை உள்ள ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் புகைப்படம்





தி இம்பெரிகல் GAZETTEER OF INDIA Vol XXIII நூல் - 1908


திருக்கழுக்குன்றம்:-#இராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரம். ..

வட இந்தியர்களுக்கு #திருக்கழுக்குன்றம் என்றால் தெரியாது...#பக்ஷிதீர்த்தம் என்றால் தான் தெரியும். சென்னை எழும்பூர் இரயில்நிலையத்தில் உள்ள பெயர்பலகையில் பக்ஷிதீர்த்தம் செல்ல இங்கு இரயில் ஏறவும் எனவும்-செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் உள்ள பெயர்பலகையில் பக்ஷிதீர்த்தம் செல்லவும் இங்கு இறங்கவும் என எழுதியிருப்பார்கள்.வட இந்திய யாத்திரிகர்கள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு இறங்குவார்கள். சென்ட்ரல் இரயில் நிலையம் எதிரில் உள்ள இராஜா சர் ராமசாமி முதலியார் சத்திரத்தில் வந்து ஒய்வு எடுத்து உணவு உண்டு பின்னர் எழும்பூர் இரயில் நிலையம் வந்து அங்கிருந்து திருக்கழுக்குன்றம் வருவார்கள் என செவிவழி செய்தி உள்ளது. திரு இராஜா சர் ராமசாமி முதலியார் நமது ஊரிலும் அதுபோல சத்திரம் கட்டி வைத்துள்ளார்(சத்திரம் தற்போது காணவில்லை)..மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இவர் மருத்துவமனையை சன்னதி தெருவில் கட்டி வைத்துள்ளார்.

திருக்கழுக்குன்றத்தில் நமது ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் கட்டிய மருத்துவமனை




சவலை இராமசாமி முதலியார் இல்லம்

அப்போதைய கவர்னர் நமது ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் இல்லத்திற்கு வந்தபொழுது

குடும்ப மரம்



சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரம் (தற்போது ரயில்வே மியூசியமாக உள்ளது)
நிறைய இடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அரசுக்கு தானமாக அளித்துவிட்டனர்.

சென்னை சென்ட்ரல் அருகே இவர் கட்டிய 4 ஏக்கர் பரப்பளவு இராமசாமி முதலியார் சரித்திரம் தான் சென்னையில் கட்டப்பட்ட முதல் சத்திரம்.

இந்த காலங்களை போல் அல்லாமல் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு ஒவ்வொரு ஊர் பயணம் செல்லும்போது மாட்டு வண்டி குதிரை வண்டி நடைபயணம் மட்டுமே நடக்கிறது இடையில் பல்வேறு வழிப்பறிகளை சந்தித்து உயிரோடு ஒவ்வொரு ஊருக்கும் செல்வதே பெரிய சாதனை

அப்படிப்பட்ட காலத்திலேயே வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக பல்வேறு சத்திரம் கட்டியவர்.

இன்று சென்னையில் உள்ள 90% மக்கள் வெளியூர் வாசிகள் ஆகும்

அக்காலத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்வந்தர்களாக மாறி அனைவருமே ராஜா சர்சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தில் உதவியால் தான் வாழ்ந்தார்கள்.




ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் பிறந்தநாள் விழா






நாடகத்தந்தை என்றழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் ஆரம்பம் செய்த "மெட்ராஸ் சுகுண விலாச சபாவின்" முதல் "தலைவராக" இருந்து அதற்கு பெரும் நிதியுதவி அளித்து பல்வேறு நாடகங்கள் அரங்கேற உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் புத்தகம்- 1895

ஆலோசனைக்கு மட்டுமே அரிது 
இந்திய பல்கலைக்கழகங்கள் ஆணையம் - 1902 (தொகுதி - III)
இந்திய தேசிய காங்கிரஸ்
1889 ஆம் ஆண்டுக்கான மெட்ராஸ் ஸ்டாண்டிங் காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கை

சிதம்பரம் செங்குந்த முதலியார் மரபினரால் நடத்தப்படும் சிதம்பரம் ரகசியத்தின் போது வழங்கப்படும் இரகசிய திரைச்சீலை ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் நிதி உதவி வழங்கி மரபை தொடர்ந்து செய்துள்ளார்.

செங்குந்த மித்திரன் புத்தகம்-2022 
ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் வரலாறு.

 


ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் பற்றிய வீடியோ
















இவரின் மறைவு பற்றி அயோத்திதாசபண்டிதர் எழுதிய கட்டுரை


உலக புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மா வரைந்தது









இவரை பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்சப் எண் 7826980901 அனுப்பவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)